Pages

Friday, January 31, 2014

தைராய்டு சுரப்பி குறைபாடு பெண்களை அதிகம் பாதிக்கும்

Thyroid gland disorders affect women more
தைராய்டு சுரப்பியிலிருந்து தைராக்சின் எனும் ஹார்மோன் (ஜி4) சுரக்கிறது. தைராய்டு ஹார்மோன் உடலின் வெவ்வேறு விதமான செயல்பாடுகளுக்கு மிகவும் முக்கிய காரணமாகும். உடலில் நடைபெறும் வெவ்வேறு வளர்சிதை மாற்றங்கள் சீராக அமைய தைராய்டு ஹார்மோன்கள் உதவுகின்றன. பல்வேறு விதமான உபாதைகள் தைராய்டு சுரப்பியின் குறைப்பாட்டால் உண்டாகிறது. இந்த நோய் இளம்பெண்களிடம் அதிகமாகக் காணப்படுகிறது. இது தைராய்டு ஹார்மோன்கள் அதிகமாக உற்பத்தியாவதால் உருவாகிறது.

ஹைப்போ தைராய்டு நோய்:

இந்த நோய் எல்லா வயது பெண்களையும் பாதிக்கிறது. ரத்தத் தைராகசின் ஹார்மோன் குறைந்த அளவு இருப்பதால் நோய் பாதிப்பு உண்டாகிறது. உடல் பருமன் அதிகரிப்பு, உடல் சோர்வடைதல், அதிக தூக்கம், முடி உதிர்தல், குளிர்தாங்க முடியாத தன்மை, இதயத்துடிப்பு குறைந்து கொண்டே போதல், மாதவிடாய் அதிகமாக உள்ள நிலை, ஞாபகசக்தி குறைதல், சருமம் வறட்சியாகக் காணப்படுதல்.

மருத்துவமுறை:

தைராக்சின் மாத்திரைகள் மூலம் இந்த நோயை முழுமையாக குணப்படுத்தலாம். இந்த நோய் உள்ளவர்கள், பொதுவாக தைராக்சின் மாத்திரையை வாழ்நாள் முழுவதும் உட்கொள்ள வேண்டும். அதேபோல் ரத்த பரிசோதனையின் முலம் தைராக்சின் அளவை ஆண்டுக�கு ஒருமுறையாவது அறிந்து கொள்ள வேண்டும். அதிக தைராக்சின் உடலில் இருந்தால் இதயம், எலும்பு, சம்மந்தப்பட்ட நோய்கள் உண்டாகும்.

தைராய்டு கட்டிகள்:

பொதுவாக தைராய்டு சுரப்பி பெரியதாவதை காய்டர் என்று அழைக்கப்படுகிறது. பல காரணங்களால் இந்த கட்டி ஏற்படுகிறது. 5 முதல் 10 சதவீதம் பெண்களிடம் காணப்படுகிறது. தைராய்டு கட்டிகள் புற்றுநோய் அல்லது புற்றுநோய் இல்லாத கட்டிகளாக உருவாகிறது. புற்றுநோய் இல்லாத கட்டிகள் மெதுவாக பெரியதாகும் தன்மை உடையது. இதர உடல் உறுப்புகளையும் பாதிக்கக் கூடியது. அல்ட்ரா ஸ்கேன் மற்றும் திசுப்பரிசோதனை ஆகியவற்றின் மூலம் தைராய்டு கட்டியின் தன்மையை எளிதில் கண்டறிந்துவிட முடியும்.

பாராதைராய்டு நாள மில்லா சுரப்பி:


இது ஒரு சிறிய நாளமில்லா சுரப்பிகள். நமது உடலில் மொத்தம் நான்கு பாரா தைராய்டு சுரப்பிகள் உள்ளன. இந்த சுரப்பிகள் தைராய்டு சுரப்பியின் பின்புறத்தில் கழுத்தில் உள்ளது. இந்த சுரப்பிகள் பாரா தைராய்டு ஹார்மோனை சுரக்கிறது. இந்த ஹார்மோன்கள் உடலின் ரத்தத்தில் கால்சியம் அளவினை கட்டுப்படுத்துகிறது. சரியான அளவு கால்சியம் ரத்தத்தில் இருப்பது மிகவும் அவசியம், இதில் சிறுமாற்றங்கள் ஏற்பட்டாலும் பல்வேறு விதமான உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

உடலில் பல்வேறு விதமான செயல்பாடுகளுக்கு கால்சியத்தின் அளவு மிக முக்கிய பங்களிக்கிறது, முக்கியமாக நரம்பு, தசை, இருதய செயல்பாடுகளுக்கு கால்சியம் மிகவும் அவசியமானது. உடலில் 99 சதவீதம் கால்சியம் எலும்பில் தான் உள்ளது. பாராதைராய்டு நோயானது 750 பேரில் ஒருவருக்கு வர வாய்ப்பு உள்ளது. பொதுவாக நடுத்தர வயது பெண்களை அதிகமாக பாதிக்கிறது. பெண்கள் தைராய்டு நோய் பற்றிய பயத்தினை தவிர்த்து, மருத்துவ ஆலோசனையினால் பயமின்றி ஆரோக்கியமாக வாழலாம்.

நோய் அறிகுறிகள்:

தைராய்டு சுரப்பி பெரிதாகி கட்டிகள் தெரிதல், இதய படப்படப்பு, தூக்கமின்மை, அதிகமான வியர்வை வெளிப்படுதல், பேதி, எடை குறைவு, பசி அதிகமாதல், மாதவிடாய் ரத்தப் போக்கின் அளவு குறைவாகபடுதல், கண்கள் பெரிதாக தோன்றுதல். கைவிரல் நடுக்கத்திற்கு தகுந்த முறையில் சிகிச்சை செய்து கொள்வதின் முலம் உடல் நலம் பெறலாம். நிரந்தர தீர்வுக்கு, கதிரியக்க மாத்திரை தைராய்டு அறுவை சிகிச்சை அவசியம்.

No comments:

Post a Comment