Pages

Friday, January 17, 2014

வலியில்லா பிரசவம் வேண்டுமா? கர்ப்பிணிகளே துளசி சாப்பிடுங்க!


karppakaalam
கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் சாப்பிடும் உணவுதான் கருவின் வளர்ச்சி, பிரசவத்துக்கு பிறகு தாயின் உடல் நலனில் முக்கிய பங்கு வகிக்கிறது.

கர்ப்ப காலத்தில் உணவு முறை, வாழ்க்கை முறை மற்றும் கர்ப்பிணியின் சிந்தனை ஆகிய மூன்றையும் அடிப்படையாக வைத்து ஆயுர்வேதம் ஆலோசனைகளை தெரிவித்துள்ளது. கர்ப்ப காலத்தில் அவ்வப்போது துளசி இலைகளை மென்று சாப்பிடுவது வலியின்றி பிரசவம் ஏற்படும் என்று ஆயுர்வேதம் கூறியுள்ளது.

பால், தேன், நெய்

கருவுற்றதும் பால் மற்றும் அடுத்த மாதத்தில் பாலுடன் மூலிகைகளை கலந்து பருகுவது நல்லது. தேன், நெய் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை பிரசவ காலத்தில் பயனளிக்கும். குழந்தையின் கை, கால், தோல், முடி வளர்ச்சிக்கு நெய் முக்கியம் என்கிறது ஆயுர்வேதம்.

கர்ப்ப காலத்தில் மூன்றாம் மாதம் முதல் தாயின் உணவையே குழந்தையும் ஏற்றுக் கொள்ளத் தொடங்கி விடும். எனவே, இருவரின் உணவும் ஒன்றாக அமைந்து விடும். இந்த நேரத்தில்தான் குழந்தையின் விருப்பத்தை தனது விருப்பமாக தாய் தெரிவிப்பது வழக்கம். அதை நிறைவேற்றினாலும், உடல் பருமன் ஏற்படாமல் இருக்க உணவு கட்டுப்பாட்டை ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது.

திரவ உணவுகள்

கர்ப்ப காலத்தின் முதல் 3 மாதங்கள், 7வது மாதத்தில் இருந்து கடைசி 3 மாதங்களில் கர்ப்பிணி தனது உணவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்கிறது ஆயுர்வேதம். இந்த காலங்களில் அதிக திரவ உணவுகள், பழங்கள் நல்லது. கரு வளர இவை அதிக பயனளிக்கும். பால், இளநீர், பழம் மற்றும் பழச்சாறுகளை உணவில் அதிகரிக்க வேண்டும்.

நான்கு மாதம் தொடங்கி அடுத்தடுத்த மாதங்களில் தொப்புள் கொடி மூலம் உணவு போவதால் அரிசி சாதம், பால், நெய், வெண்ணெய், பழங்கள், காய்கறிகள் சிறந்த உணவுகளாக இருக்கும்.சத்து நிறைந்த பருப்பு வகைகள், நெல்லிக்காய் சேர்த்துக் கொள்ளவேண்டும் என ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. மருத்துவ குணம் கொண்ட அஸ்வகந்தா, சிந்தில பொடி ஆகியவை தாய், சிசு இருவரின் தசைகளுக்கு பலம் அளிக்கும். கொழுப்பு மற்றும் உப்பு, நீர் குறைத்த அரிசி கஞ்சியை நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.

வலியில்லா பிரசவம்

கர்ப்பிணிகள் துளசி இலைகளை கொதிக்க வைத்து மூலிகை தேநீராக அருந்தலாம். அது பிரசவ காலத்தை எளிதாக்கும். அதேபோல் கர்ப்பிணிகள் அவ்வப்போது சில துளசி இலைகளை மென்று வர, வலியின்றி பிரசவம் ஏற்பட வழிவகுக்கும் என்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment