Pages

Thursday, January 2, 2014

பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் 10 பயன்கள்!

 images

இந்தி மொழியில் பாகற்காயைக் கரேலா என்று குறிப்பிடுவார்கள். இதனை ஆங்கிலத்தில் Bitter Gourd, Bitter Melon மற்றும் Bitter Squash என்று அழைப்பார்கள். இதன் பொருள் கசப்பான காய் என்பதாகும். ஆங்கிலத்தில் இதன் பெயரை உச்சரிக்கும் பொழுது, இதன் பெயரிலேயே உள்ள கசப்புச் சுவைதான் நினைவுக்கு வரும். இவை வளரும் பகுதியின் தன்மைக்கேற்ப கரும்பச்சை நிறமாகவோ அல்லது இளம்பச்சை நிறமாகவோ இவற்றின் நிறம் இருக்கும். இதன் சுவை கசப்பாக இருந்தாலும், இதில் உடலுக்குத் தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும், வைட்டமின்களும் ஏராளமாக நிறைந்துள்ளன. பாகற்காயை ஜூஸ் எடுத்தும் அருந்தலாம். மேலும் ஊறுகாய், பொரியல், வறுவல், தொக்கு, குழம்பு, கூட்டு என்று ஏராளமான உணவு வகைகளில் பயன்படுத்தலாம். பாகற்காயில் அடங்கியுள்ள சத்துக்கள்: வைட்டமின் ஏ, பி, சி, பீட்டா-கரோட்டின் போன்ற ஃப்ளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாதுக்கள் பாகற்காயில் நிறைந்துள்ளன. இப்போது அந்த பாகற்காய் மூலம் கிடைக்கும் ஏராளமான பலன்களில் ஒரு சிலவற்றைப் பற்றி பார்க்கலாமா…
தினந்தோறும் ஒரு டம்ளர் பாகற்காய்ச் சாற்றினை அருந்தினால், ஈரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். அதிலும் ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வந்தால், இதன் பலனைக் காணலாம்.
பாற்காயையோ, அதன் இலைகளையோ வெந்நீரில் வேக வைத்து தினந்தோறும் சாப்பிட்டு வந்தால், நோய்த்தொற்றுகள் அண்டாமல், உடலின் நோயெதிர்ப்புச் சக்தி கூடும்.
பாகற்காயை உண்டு வந்தால், சருமத்தில் உள்ள பருக்கள், கருப்பு தழும்புகள், ஆழமான சருமத் தொற்றுகள் ஆகியவை நீங்கும். பாகற்காயை சாறு எடுத்து, அதனுடன் எலுமிச்சைச் சாற்றைக் கலந்து, தினந்தோறும் வெறும் வயிற்றில் 6 மாதம் அருந்தி வந்தால், கண்கூடாகப் பலனைக் காணலாம்.
டைப் 2 நீரிழிவு நோயை (type 2 diabetes) எதிர்கொள்ள சிறந்த மருந்தாக பாகற்காய் சாறு பயன்படுகிறது. பாகற்காயில் உள்ள ஒருவகை வேதிப்பொருள் இன்சுலின் போல செயல்பட்டு, இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.
பாகற்காயில் நார்ச்சத்து மிகுந்துள்ளதால், அது செரிமானத்திற்கு மிகவும் உதவுகிறது. இதன் காரணமாக உணவு நன்றாக செரிக்கப்பட்டு, கழிவுகள் எளிதாக வெளியே தள்ளப்படுகிறது. இதன் மூலம் மலச்சிக்கல் நீங்குகிறது. சிரமமின்றி மலம் கழிக்க முடிகிறது.
ஆரோக்கியமான சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையைப் பேணுவதற்கு பாகற்காய் மிகவும் உதவுகிறது. சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்குவதற்கும் இது உதவுகிறது.
பாகற்காயை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் நீக்கப்பட்டு, இதய நோய் எளிதில் வருவதைத் தடுக்கிறது.
புற்றுநோய் செல்கள் பல்கிப் பெருகுவதை பாகற்காய் தடுக்கிறது.
உடலின் வளர்சிதை மாற்றத்தை சரிசெய்யும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் பாகற்காயில் நிறைந்துள்ளன. உடலின் செரிமான மண்டலத்தை நன்றாகத் தூண்டி, நல்ல செரிமானத்தை உண்டாக்குகிறது. இதனால், உடலுக்குத் தேவையான சத்துக்கள் உறிஞ்சப்பட்டு, வேகமாக உடல் எடையை குறைக்கிறது.

No comments:

Post a Comment