Pages

Friday, January 31, 2014

ஆண்குறியை சுத்தம் செய்யும் முறைகள்

A Clean Penis is a Happy Penis

 

There are several reasons why a clean penis is a happy penis.

  தினமும் குளிப்பதை போல, பல் துலக்குவதைப்போல, ஆண்குறியை சுத்தம் செய்வதும்..ஆண்களின் கடமை

முன் தோலிற்கும் ஆண்குறியின் தலைப்பகுதிக்கும் இடையே உருவாகும் Smegma என்ற பொருள் ஆண்குறியின் தலைப்பகுதிக்கும் முன்தோலுக்கும் இடையே நேரடியாக உராய்வை தடுக்கவும் எரிச்சல் உருவாக இருக்கவும் பயன்படுகிறது..ஆனால் இதையே வருடக்கணக்கில் சுத்தம் செய்யாமல் வைத்திருந்தால் புற்றுநோய் உருவாகும் வாய்ப்பும்..சில தோல் சம்பந்தமான பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்பு உண்டு.. எனவே அதை தினசரி சுத்தம் செய்வது அவசியம்..


குளிக்கும் போது தினமும் ஒரு தடவையாவது முன்தோலை பின்நோக்கி தள்ளி பின் சுத்தம் செய்யவேண்டும்..இதற்கு மென்மையான அதிக வாசனையற்ற வெண்மை நிறமுள்ள சோப்பு பயன்படுத்தலாம்..ஒரு நாளிற்கு ஒரு முறை சோப்பு பயன்படுத்தினால் போதுமானது.. ஒரே நாளில் இரு முறை..மூன்றுமுறை சுத்தம் செய்தால் நன்று.. ஒரு முறை சோப்பு பயன்படுத்தி சுத்தம் செய்து..பின் வெறும் தண்ணீர் மட்டும் பயன்படுத்தி கழுவினால் போதுமானது..

தலைக்கு போடும் சாம்பூ..அதிகம் வாசனையுடைய சோப்புகள்..கெமிக்கல் உடைய சோப்புகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். வாசனைக்காக சென்ட் போன்றவைகளை பயன்படுத்த கூடாது... 

எப்போதும் ஈரமில்லாமல் உலர்ந்த நிலையில் உறுப்புகளை வைத்திருக்க வேண்டும்.

இறுக்கமான உள்ளாடைகளை தவிர்த்து..தளர்வான பருத்தியால் ஆன உள்ளாடைகளை பயன்படுத்த வேண்டும்..வெயில் காலங்களில் ஒரு நாளைக்கு இரு முறை உள்ளாடைகளை மாற்றி பயன்படுத்த வேண்டும்..

இரவு தூங்க செல்லும் முன் உள்ளாடைகளை நீக்கிவிட்டு உறங்க வேண்டும்..

உடலுறவிற்குபின்னும், சுய இன்பம் செய்த பின்னும் ஆணுறுப்பை கழுவ மறக்க கூடாது..

 

 Warm water, a soft washcloth, and a mild, non-perfumed soap is all that's needed to keep your penis clean.

 Warm water,

A soft wash cloth, 

andA mild, non-perfumed soap

 

சானிட்டரி நாப்கின் உபயோகித்தால் புற்றுநோய் வருமா?














 
 

கிராமப்புறங்களில் வசிக்கிற பெண்களுக்கு மாதம்தோறும் இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் தமிழக அரசின் அதிரடி அறிவிப்புக்கு அமோக ஆதரவு! அதே நேரத்தில், இப்படியொரு நல்ல சேதியின் சந்தோஷத்தைக்கூட அனுபவிக்க விடாமல், பீதியைக் கிளப்பியிருக்கிறது சானிட்டரி நாப்கின்கள் தயாரிப்பு பற்றி நாம் கேள்விப்படுகிற அதிர்ச்சித் தகவல்கள்...

ஆமாம்! வருடக்கணக்காக சானிட்டரி நாப்கின்கள் உபயோகிக்கிற பெண்களுக்கு அலர்ஜி, புண், அரிப்பு, இன்ஃபெக்ஷனில் ஆரம்பித்து, கர்ப்பவாய் புற்றுநோய் கூட வரலாம் என்பதே அந்த ஷாக் ரிப்போர்ட்!

‘எங்கள் சானிட்டரி நாப்கினை உபயோகித்தால் சந்திர மண்டலத்துக்கே சென்று வரலாம்; இமய மலையில் ஏறி எட்டிப் பார்க்கலாம்’ என்கிற ரீதியில் கவர்ச்சியான விளம்பரங்களைச் செய்கின்றன பல நிறுவனங்களும்... எப்பேர்ப்பட்ட ரத்தப்போக்கையும் உறிஞ்சிக்கொண்டு, பல மணி நேரம் தாக்குப் பிடிப்பதாக உத்தரவாதங்கள் வேறு...

அதீத ரத்தப் போக்கு, அலர்ஜி, புண், தடிப்பு என மாதவிலக்கு தொடர்பான பிரச்னைகளுக்காக ஒரு பெண் யாராவது ஒரு டாக்டரை சந்திக்கிறபோது, ‘இந்த எல்லாப் பிரச்னைகளுக்கும் காரணம், அந்தப் பெண் வருடக்கணக்கில் உபயோகிக்கிற நாப்கினாக இருக்கலாம்’ என்று சந்தேகம்கூட வருவதில்லை. அந்த அளவுக்கு டாக்டர்களுக்கே விழிப்புணர்வு தேவைப்படுகிற பிரச்னை இது என்கிறார்கள் நிபுணர்கள்.

சானிட்டரி நாப்கின் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பலவித கெமிக்கல்களின் விளைவே, மேலே சொன்ன பல பிரச்னைகளுக்கும் அஸ்திவாரம்.

அட... இதற்கே பயந்தால் எப்படி? தரக்குறைவான சில நாப்கின்களில் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் மெட்டீரியலைக்கூட  சேர்த்து தயாரிப்பதாகவும், அதன் விளைவாக பெண்களுக்கு ரத்தப்போக்கு அதிகரிப்பதாகவும் கூட ஒரு செய்தி!

 இந்தப் பிரச்னை பற்றிப் பேச பல மருத்துவர்களும் தயாராக இல்லாத நிலையில், திருச்சி தேசியக் கல்லூரியின் உயிர்தொழில்நுட்பவியல் துறை துணைப்பேராசிரியர் முகமது ஜாபீர், மறைக்கப்படுகிற பல ரகசியங்களையும் வெட்டவெளிச்சமாக்குகிறார்.

‘‘சராசரியா ஒரு பெண் தன்னோட 15வது வயசுல பருவமடையறாங்கன்னு வச்சுப்போம். 40 வயசுல மெனோபாஸ்னு வச்சுக்கிட்டா, அந்தப் பெண் தன்னோட வாழ்க்கைல குறைந்தபட்சம் 25 வருஷங்கள்... 300 முறைகள்... 900 நாள்கள்... ரத்தப் போக்கை சந்திப்பாங்க. பெண் உடம்பின் ரொம்ப சென்சிட்டிவான பகுதியில அத்தனை வருடங்களா உபயோகிக்கப்படற நாப்கின்கள், அலர்ஜி, அரிப்பு, புண், இன் ஃபெக்ஷன் உள்பட ஏகப்பட்ட பிரச்னைகளுக்குக் காரணமாகுது. அதுக்குக் காரணம் நாப்கின் தயாரிப்புல சேர்க்கப்படற சில கெமிக்கல்கள்...

முதல் குற்றவாளின்னு பார்த்தா டையாக்சின். புற்றுநோய் உண்டாக்கற அதை, நாப்கின் தயாரிப்புல நேரடியா உபயோகிக்கிறதில்லை. பல தயாரிப்பாளர்களும் ரீசைக்கிள் செய்யப்பட்ட பேப்பர் மற்றும் பொருள்களைக் கொண்டுதான் நாப்கின் தயாரிக்கிறாங்க. அப்படித் தயாரிக்கப்படற நாப்கின்கள், பழுப்பு அல்லது அழுக்கு நிறத்துல இருக்கும். நம்ம ஆட்களுக்கு சாப்பிடற அரிசிலேருந்து சகலமும் வெள்ளை வெளேர்னு இருந்தாதான் திருப்தி. நாப்கினும் அப்படித்தான். அந்த பழுப்பு நிறத்தை மாத்தி, சலவை செய்தது போன்ற பளீர் வெள்ளை நிறத்தை வரவைக்கறதுக்காக, தயாரிப்பாளர்கள் ஒருவிதமான பிளீச் பயன்படுத்தறாங்க. பிளீச் செய்த பிறகு நாப்கின்களை மறுபடி அலச முடியாது. அப்படியே அது பெண்களோட உபயோகத்துக்கு வந்துடும். நீக்கப்படாத அந்த பிளீச்லேருந்து ‘டயாக்சின்’ கொஞ்சம் கொஞ்சமா வெளியேறிக்கிட்டே இருக்கும். மென்மையான, நாசுக்கான உடல் திசுக்கள்ல பட்டு பட்டு, அந்த இடத்துல அரிப்பு, அலர்ஜினு ஆரம்பிக்கும். வருஷக்கணக்குல இது தொடரும்போது, புற்றுநோயா மாறும் அபாயம் ரொம்ப அதிகம்.

ரொம்ப நேரம் தாக்குப் பிடிக்கறதா உத்தரவாதம் தரும் பல கம்பெனிகளோட நாப்கின்கள்லயும் பிரதான பொருள் செல்லுலோஸ் ஜெல். இது இயற்கையா பெறப்படற ஒன்றுதான்.

ஆனாலும், அதை மிக நுண்ணிய இழைகளா, துகள்களா மாத்தறதுக்காக அதிகக் காரத்தன்மை கொண்ட கெமிக்கல்களை உபயோகி க்கிறாங்க. அப்படிப் பல கட்டங்களைக் கடக்கிறப்ப, அதோட நல்ல தன்மைகள் மறைஞ்சு, கெமிக்கல்களோட ஆதிக்கம் தூக்கலாகி, பிரச்னைகளுக்கு விதை போடுது.

மூணாவது குற்றவாளி, ரேயான். உலர்வான உணர்வைத் தர்றதா சொல்லப்படற நாப்கின்கள்ல இதுதான் சேர்க்கப்படுது. துணிகளை நெய்யப் பயன்படுத்தற ரேயானும், பலமுறை பதப்படுத்தப்பட்டு, கிட்டத்தட்ட செயற்கைப்பொருள் மாதிரியே மாத்தப்படுது. சருமத்துக்கு சுவாசிக்க வழியில்லாமப் போறதோட, இன்ஃபெக்ஷனுக்கும் இது வழி வகுக்குது’’ என்கிற முகமது ஜாபீர், நாப்கின் உபயோகிப்பவர்களுக்கு சில அட்வைஸ்களைச் சொல்கிறார்.

‘‘தான் உபயோகிக்கிற பிராண்ட் என்ன, அந்த நாப்கின்ல என்னல்லாம் சேர்த்து செய்யப்பட்டிருக்குனு ஒவ்வொருத்தரும் தெரிஞ்சுக்கணும். குறிப்பிட்ட அந்த பிராண்ட் உபயோகிக்க ஆரம்பிச்ச பிறகு தனக்கு ஏதாவது பிரச்னைகள் வந்திருக்கான்னு பார்க்கணும். சிறுநீரகத் தொற்றாகவோ, அரிப்பு, அலர்ஜியாகவோ இருந்தாலும் சாதாரணம் என அலட்சியப்படுத்த வேண்டாம்.

உடனடியா அந்த பிராண்டை நிறுத்திட்டு, விலை அதிகமானாலும் தரமான தயாரிப்பை உபயோகிக்கணும்.

ரத்தம் ரொம்ப ரொம்ப சத்தான ஒரு பொருள். அது ரொம்ப நேரம் தேக்கி வைக்கப்படறப்ப, பாக்டீரியாக்களுக்கு கொண்டாட்டம். சீக்கிரமே பெருகி, இன்ஃபெக்ஷனை தரும். அதனால 3 மணி நேரத்துக்கொரு முறை நாப்கினை மாத்திடணும். கொஞ்சம் அசவுகரியமானதுதான்... ஆனாலும் வீட்லயே சுத்தமான, சுகாதாரமான முறைல தயாரிக்கிற துணி நாப்கின்கள் ரொம்பவே பெஸ்ட்!’’

மார்பகப் புற்றுநோய் எனும் மர்மம்


சினிமா நடிகையிலிருந்து சீஃப் செகரட்டரி வரை பாரபட்சமின்றி பலி வாங்கிக் கொண்டிருக்கிறது மார்பகப் புற்றுநோய். நேற்று வரை நம்முடன் சிரித்துப் பேசி மகிழ்ந்தவர், திடீரென இன்று புற்றுநோய்க்கு இரையாகி, நம் கண்முன்னே தவணை முறையில் உயிரை விடுவதைப் பார்க்கிறோம். ஒவ்வொரு முறை ஒரு உயிரை இழக்கும் போதும், நம்மையும் அந்த இடத்தில் பொருத்திப் பார்த்து, பயத்தில் நாமும் கொஞ்சம் சாகவே செய்கிறோம். யெஸ்.... பெண்ணாகப் பிறந்த யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் மார்பகப் புற்றுநோய். மார்பகப் புற்றுநோய் யாருக்கெல்லாம் வரலாம், காரணங்கள், அறிகுறிகள், சிகிச்சைகள், எச்சரிக்கைகள் என சகலத்தையும் பற்றிப் பேசுகிறார் ரத்தப் புற்றுநோய் சிறப்பு மருத்துவர் ராமநாதன்.

‘‘பெண்களைத் தாக்கும் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய்க்கு இரண்டாம் இடம். 50 பெண்களில் ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் இருக்கிறது. எந்த வயதுப் பெண்களுக்கும் இது வரலாம். வயது கூடக் கூட நோய் தாக்கும் அபாயமும் கூடும். எல்லோருடைய உடலிலும் புற்றுநோய் உண்டாக்கக்கூடிய செல்கள் இருக்கும். ஆனால், அவை புற்றுநோயாக மாறாமலிருக்க, நமது உடலிலுள்ள பாதுகாப்புப் படை எந்நேரமும் ‘அலர்ட்’ ஆக இருந்து, அழித்துக்கொண்டே இருக்கும். புற்றுநோய் என்பது சாதாரண இன்ஃபெக்ஷன் மாதிரி திடீரென வெளியே வராது. உடலுக்குள் இருக்கும் சாதாரண செல்கள், சில பல காரணங்களால், புற்றுநோய் செல்களாக மாறும்.

ஒரு நல்ல குடும்பத்து மனிதர், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தீவிரவாதியாக மாறுவதில்லையா? அப்படித்தான் நல்ல செல்கள், புற்றுநோய் செல்களாக மாறுவதும்! அதற்கு என்னவெல்லாம் காரணங்கள் தெரியுமா?

*  பரம்பரையாகத் தாக்கும் மார்பகப் புற்றுநோய் வெறும் 5 முதல் 10 சதவிகிதம்!

*  இள வயதில் அதாவது 9 வயதுக்கு முன்பு பூப்பெய்துவது, மிக தாமதமான மெனோபாஸ், அதாவது 55 வயதுக்குப் பிறகு... இந்த இரண்டுமே மார்பகப் புற்றுநோய்க்கான பிரதான காரணங்கள்.

*  திருமணம் செய்யாமலிருப்பது.

*  30 வயதுக்குப் பிறகு முதல் குழந்தையைப் பிரசவிப்பது. பூப்பெய்தியதில் இருந்து, 15 வருடங்களில், உடலுக்கு ஒரு மாற்றம் தேவைப்படும். ஈஸ்ட்ரோஜென் சுரப்பு அதிகமாக இருந்தால் மார்பகப் புற்றுநோய் வரும். அதை ஈடுகட்ட உடலுக்கு சில தற்காலிக மாற்றங்கள் அவசியம். அது நடக்காத போது புற்றுநோய் அபாயம் அதிகமாகும்.

*  பருமன்... குறிப்பாக கல்யாணத்துக்குப் பிறகு பெண்கள், எடை விஷயத்தில் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. அதிகப்படியான கொழுப்பு, ஈஸ்ட்ரோஜென்னாகவே மாறும். அது ஆபத்தின் அறிகுறி.

*  வருடக்கணக்கில் கருத்தடை மாத்திரைகள் உட்கொள்வதும், மெனோபாஸுக்கு பிறகு பெண்மையைத் தக்க வைத்துக்கொள்ள எடுத்துக்கொள்கிற ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபியும் கூட மார்பகப் புற்றுநோயை வரவேற்கும் விஷயங்கள்.

அறிகுறிகள்
*  முதல் அறிகுறி கட்டி. வலியே இருக்காது. பல பேர் ஆரம்பத்தில் அலட்சியப்படுத்தி விட்டு, திடீரென ஒரு நாள் எலுமிச்சை அளவு கட்டியோடு வருவார்கள். அது அந்தளவுக்கு வளர 3 முதல் 5 வருடங்கள் ஆகியிருக்கும். பட்டாணி அளவில் இருக்கும்போதே அதைத் தொட்டு உணர முடியும். இந்தக் கட்டத்தில் கண்டு பிடித்தால், சிகிச்சை சுலபம். சிலருக்கு ஃபைப்ராய்டு கட்டி இருந்து குழப்பலாம். இந்தக் கட்டி கோலிக் குண்டு மாதிரி அங்குமிங்கும் ஓடும். ஆனால் புற்றுநோய் கட்டி, ஒரே இடத்தில் இருந்தபடி நாளுக்கு நாள் வளரும்.

*  இரண்டாவது அறிகுறி வலி. புற்றுநோயைப் பொறுத்தவரை நோய் முற்றிய பிறகுதான் வலி, தன் தீவிரத்தைக் காட்டும்.

*  மூன்றாவதாக மார்பகங்களின் மேல் வீக்கம், நிறம் சிவந்து காணப்படுவது, குழிவு ஏற்படுதல்...

*  கடைசியாக மார்பகக் காம்புகளில் இருந்து நீர் அல்லது ரத்தம் வடிதல், காம்புகள் உள்ளிழுத்த நிலை, புண்கள் ஏற்படுதல்.

*  வயது கூடக் கூட, மார்பகங்கள் தொய்வடைவது இயல்பு. அப்படி ஆகாமல், இரண்டு மார்பகங்களுமோ, இரண்டில் ஒரு மார்பகம் தூக்கிக் கொண்டு நின்றால், அதற்குக் காரணம் உங்கள் இளமையின் பூரிப்பு எனப் பெருமைப்பட வேண்டாம். அது மார்பகப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

எப்படிக் கண்டுபிடிப்பது?

*  சுய பரிசோதனை செலவில்லாத, சுலபமான சோதனை இது. இதன் மூலம் 97 சதவிகித மார்பகப் புற்றுநோயை, முற்றுவதற்கு முன்பே கண்டுபிடிக்க முடியும். மாதவிலக்கானதில் இருந்து 7வது நாள் மாதம் ஒரு முறை செய்ய வேண்டும். கட்டிகள் இருப்பதை உணர முடியும். மார்பகங்கள் முழுவதுமாக உருவெடுத்திருக்காது என்பதால், 20 வயதுக்குக் குறைவானவர்கள் இதைச் செய்ய வேண்டாம்.
இது தவிர வருடம் ஒரு முறை புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணரிடம், நேரில் சென்று பரிசோதித்துக் கொள்வது பாதுகாப்பானது. மகப்பேறு மருத்துவர்களைவிட, புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்களால், இதைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியும்.

*  மேமோகிராம் 40 வயதுக்குப் பிறகு வருடம் ஒரு முறை செய்யலாம். எக்ஸ் ரே மாதிரியான ஒரு பரிசோதனை இது. இரண்டு மார்பகங்களையும் அழுத்திச் செய்யப்படுகிற சோதனை என்பதால், பலரும் இந்தச் சோதனையைத் தொடர்ந்து செய்வதில்லை.

*  கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், திவீஸீமீ  ழிமீமீபீறீமீ  கிsஜீவீக்ஷீணீtவீஷீஸீ  சிஹ்tஷீறீஷீரீஹ்  (திழிகிசி) என்கிற ஊசியின் மூலம், திசுக்களை எடுத்து, அது புற்றுநோயா என உறுதி செய்து, அதற்கேற்ப சிகிச்சைகள் தொடங்கப்படும்.

*  கட்டியின் அளவைப் பொறுத்து, அது சிறியதா அல்லது அக்கம் பக்கத்தில் பரவியிருக்கிறதா, குறிப்பாக எலும்புகளில் பரவியிருக்கிறதா என்பதையெல்லாம் கண்டறிய வேண்டியது முக்கியம். எக்ஸ் ரே மற்றும் ஸ்கேனுக்கு 5 ஆயிரமும், எலும்புகளுக்கான ஸ்கேனுக்கு 3,500 ரூபாயும் செலவாகும். வசதியிருப்பவர்கள் இந்த மூன்றையும் தவிர்த்து பெட் ஸ்கேன் (றிமீt ஷிநீணீஸீ) செய்து கொள்ளலாம். புற்றுநோய் கட்டியா, இல்லையா என்பதை இது சொல்லிவிடும். செலவு ரூ.25 ஆயிரம்.

புற்றுநோயின் நிலைகள்

நிலை 1    :    மார்பகத்தில் மட்டும் சின்ன கட்டி.
நிலை 2    :    கொஞ்சம் பெரிய கட்டி, மார்பகங்கள் மற்றும் அக்குள் பகுதி வரை பரவியிருக்கும்.
நிலை 3    :    மார்பகத்திலிருந்து அக்குள் அல்லது நெஞ்சுக்கூடு வரை அதிகமாகப் பரவியிருக்கும் பெரிய கட்டி.
நிலை 4    :    நுரையீரல், எலும்புகள், ஈரல் என உடல் முழுக்கப் பரவி விடுதல்.
முதல் 2 நிலைகளில் குணப்படுத்தும் வாய்ப்பு 90 சதவிகிதம்.
3-வது நிலையில் 50 சதவிகிதம்
4-வது நிலையில் 0 சதவிகிதம்

சிகிச்சைகள்

முதல் நிலையில் திசுவானது 1 செ.மீ-க்கும் குறைவாக இருந்தால், மிவிஸிஜி என்கிற கதிரியக்க சிகிச்சை மட்டுமே கொடுத்து, மார்பகங்களை அகற்றாமல் காக்கலாம். இரண்டாவது நிலையில் கட்டியை எடுத்து விட்டு, கீமோதெரபி தர வேண்டியிருக்கும். மார்பகங்களைக் காப்பாற்றுவது சற்று சிரமம்தான். மூன்றாவது நிலையில் அறுவை சிகிச்சை, கீமோதெரபி மற்றும் கதிரியக்க சிகிச்சைகள் தேவை. நான்காவது நிலையில் ஒன்றும் செய்ய முடியாது. தற்காலிக சிகிச்சைகளின் மூலம் மரணத்தை கொஞ்சம் தள்ளிப் போடுவது மட்டுமே சாத்தியம்.
கீமோதெரபி என்பது ஒவ்வொரு முறையும் உடம்புக்குள் ஒரு குண்டு போடுவதற்கு இணையானது. இதயம் பாதிப்பதிலிருந்து, முடி
கொட்டுவது வரை பக்க விளைவுகள் நிச்சயம். கதிரியக்க சிகிச்சை கொடுக்கும் போது, சருமம் எரிந்து புண்ணாவதைத் தவிர்க்க முடியாது.

வரும்... ஆனா வராது!
புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு, அடுத்த 5 ஆண்டுகளில் அது திரும்பாவிட்டால், மறுபடி வர வாய்ப்பே இல்லை என்பது பலரின் தவறான அபிப்ராயம். 10 ஆண்டுகளுக்குப் பிறகுகூட அது சிலருக்குத் திரும்பவும் வரலாம்!


வருமுன் காக்க...
*  குண்டான பெண்கள், கண்டிப்பாக எடையைக் குறைத்தாக வேண்டும்.
*  உடற்பயிற்சி மிக முக்கியம். தினம் 3 கி.மீ நடை... 10 நிமிடங்களில் 1 கி.மீ தூரத்தை வேகமாக நடப்பதுதான் சரி!
*  பேருந்தில் இறங்க வேண்டியதற்கு ஒரு ஸ்டாப்பிங் முன்னாடியே இறங்கி, வீடு வரை நடக்கலாம்.
*  டி.வி முதல் ஏசி வரை எல்லாவற்றுக்கும் ரிமோட் கன்ட்ரோல்... குனிந்து, நிமிரத் தேவையே இல்லாமல் மாடுலர் கிச்சன்... இது எல்லாமே ஆபத்து! அலமாரியில் உள்ள பொருள்களை கைகளை நீட்டி, மடக்கி எடுப்பது, குனிந்து எடுப்பது என உடலை வளைக்க வேண்டியது மிக முக்கியம்.
*  எண்ணெய், கொழுப்பு உணவுகளைத் தவிர்த்து, நிறைய காய்கறி, பழங்களை சேர்த்துக் கொள்ளவும்.  அசைவப் பிரியர்கள் பொரித்து உண்பதைத் தவிர்த்து, குழம்பாகச் சாப்பிடுவது சிறந்தது. பெரிய துண்டுகளாகச் சமைக்காமல், சின்னதாகவே செய்யுங்கள்.
*  நேரடித் தணலில் நீண்ட நேரம் சமைக்கப்படுகிற உணவுகளில் புற்றுநோய்க்கான விஷயங்கள் அதிகம்!
*  அதிக மன உளைச்சல், புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும் பாதுகாப்புப் படையை அழித்து விடும். அதன் காரணமாக காலப் போக்கில் புற்றுநோய் தாக்கலாம். எனவே டென்ஷன் இல்லாத வாழ்க்கைக்குப் பழகுங்கள்.

பெண்களின் பெரும்பாடு..நோய்களைத் தீர்க்க சிறந்த நிவாரணியாகும் கீரைத்தண்டு!

Photo: பெண்களின் நோய் தீர்க்கும் கீரைத்தண்டு

குறைந்த செலவில் அதிக சத்துக்களைத் தருபவை கீரைகள். உயிர் சத்துக்களும், இரும்பு சத்தும் அதிகம் கொண்டவை. கீரைகளை சமைத்து உண்ணும் பலரும் தண்டினை எரிந்து விடுகின்றனர். கீரைகளின் நிறம் பச்சையாக இருந்தாலும் அவற்றின் தண்டுகள் சிவப்பு, பச்சை,நீலம் வெள்ளை பலவகை நிறத்துடன் காணப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் பலவித மருத்துவ குணங்களை கொண்டுள்ளன.

பச்சைத்தண்டு

கீரைத்தண்டினை பருப்பு சேர்த்து சாம்பார் வைத்தோ, தனியோ பொறியல் செய்தோ சாப்பிடலாம். ரத்தமாக போகும் பேதியை நிறுத்தும் தண்மை இதற்கு உண்டு. காரம் சேர்க்காமல், உப்பு போட்டு வேகவைத்து சாப்பிடலாம். சீக்கிரம் குணமாகும்.

செங்கீரைத்தண்டு

பச்சைக் கீரைத் தண்டினைப் போலவே செங்கீரைத்தண்டினை சமைத்து சாப்பிடலாம். இது பித்தம் தொடர்புடைய அனைத்து நோய்களையும் போக்கும். உடல் சூட்டினை கட்டுப்படுத்தும்.
பெண்கள் நோய் குணமாகும்
பெண்களுக்கு ஏற்படும் மிகப்பெரிய நோயான பெரும்பாடு நோய்க்கு செங்கீரைத்தண்டு சிறந்த மருந்தாகும். அதிக ரத்தம் வெளியேறி சத்துக்கள் குறைந்து காணப்படுபவர்களுக்கு,செங்கீரைத்தண்டினை சமைத்து தர பெரும்பாடு நோய் குணமடையும். செங்கீரைத் தண்டானது மாதவிடாய் காலத்தில் மிகுதியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும். எரிச்சல் வலி வேதனைகளைப் போக்கும்.

வெண்கீரைத் தண்டு

வெண்கீரைத் தண்டினை சமைத்து சாப்பிட நீர்க்கடுப்பும், மூலக்கடுப்பும் குணமடையும்.
யார் சாப்பிடக்கூடாது
கீரைத்தண்டில் பெருமளவு இரும்புச்சத்தும் சுண்ணாம்புச் சத்தும் அடங்கியுள்ளன. இது குளிர்ச்சியைத் தரக்கூடியது. எனவே சீதள தேகம் உள்ளவர்கள் இதனை சாப்பிடக்கூடாது. 

எண்ணெய் தேய்த்து குளித்த நாள் அன்று இதனை சாப்பிட சளி பிடிக்கும்.
குறைந்த செலவில் அதிக சத்துக்களைத் தருபவை கீரைகள். உயிர் சத்துக்களும்,
இரும்பு சத்தும் அதிகம் கொண்டவை. கீரைகளை சமைத்து உண்ணும் பலரும் தண்டினை
எரிந்து விடுகின்றனர். கீரைகளின் நிறம் பச்சையாக இருந்தாலும் அவற்றின்
தண்டுகள் சிவப்பு, பச்சை,நீலம் வெள்ளை பலவகை நிறத்துடன் காணப்படுகின்றன.
இவை ஒவ்வொன்றும் பலவித மருத்துவ குணங்களை கொண்டுள்ளன.
பச்சைத்தண்டு :
கீரைத்தண்டினை பருப்பு சேர்த்து சாம்பார் வைத்தோ, தனியோ பொறியல் செய்தோ
சாப்பிடலாம். ரத்தமாக போகும் பேதியை நிறுத்தும் தண்மை இதற்கு உண்டு.
காரம் சேர்க்காமல், உப்பு போட்டு வேகவைத்து சாப்பிடலாம். சீக்கிரம்
குணமாகும்.
செங்கீரைத்தண்டு :
பச்சைக் கீரைத் தண்டினைப் போலவே செங்கீரைத்தண்டினை சமைத்து சாப்பிடலாம்.
இது பித்தம் தொடர்புடைய அனைத்து நோய்களையும் போக்கும். உடல் சூட்டினை
கட்டுப்படுத்தும்.
பெண்கள் நோய் குணமாகும். பெண்களுக்கு ஏற்படும் மிகப்பெரிய நோயான
பெரும்பாடு நோய்க்கு செங்கீரைத்தண்டு சிறந்த மருந்தாகும். அதிக ரத்தம்
வெளியேறி சத்துக்கள் குறைந்து காணப்படுபவர்களுக்கு, செங்கீரைத்தண்டினை
சமைத்து தர பெரும்பாடு நோய் குணமடையும். செங்கீரைத் தண்டானது மாதவிடாய்
காலத்தில் மிகுதியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும். எரிச்சல் வலி
வேதனைகளைப் போக்கும்.
வெண்கீரைத் தண்டு :
வெண்கீரைத் தண்டினை சமைத்து சாப்பிட நீர்க்கடுப்பும், மூலக்கடுப்பும்
குணமடையும். கீரைத்தண்டில் பெருமளவு இரும்புச்சத்தும் சுண்ணாம்புச்
சத்தும் அடங்கியுள்ளன.
மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் இரத்த இழப்பை ஈடுகட்ட இந்த
கீரையை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது குளிர்ச்சியைத்
தரக்கூடியது. எனவே சீதள தேகம் உள்ளவர்கள் இதனை சாப்பிடக்கூடாது. எண்ணெய்
தேய்த்து குளித்த நாள் அன்று இதனை சாப்பிட சளி பிடிக்கும்.

பீரியட் பிரச்னைக்கு ஸ்பெஷல் டிப்ஸ்

பீரியட் பிரச்னை பெண்களை பாடாய்படுத்தும் பிரச்னைகளில் ஒன்றாக இருக்கிறது. நாட்கள் தள்ளி போவது, அதிகப்படியான உதிரப்போக்கு, அதிகவலி  போன்ற மாதவிடாய் பிரச்னைகளால் பல பெண்கள் அவதிப்படுகிறார்கள். கருப்பையில் அல்லது ஹார்மோனில் வில்லங்கம் ஏதாவது இருந்தால் அதை  உணர்த்தும் எச்சரிக்கையாக இந்த பிரச்னை இருப்பதால் இதற்கு உடனே தீர்வு காண வேண்டியது அவசியம் என்கிறார் டாக்டர் சசிக்குமார். அவர் கூறியதாவது: ஒரு காலத்தில் பீரியட்ஸ் டைமில் ஓய்வும், சத்தான உணவும் கிடைத்தது. இப்போது அப்படியில்லை. பிஸியான வாழ்க்கை முறையில் நல்ல ஓய்வு என்பது  கனவாகி விடுகிறது. ஹார்மோன் சுழற்சியின் வெளிப்பாடு தான் மாதவிடாய். மாதம் ஒரு கருமுட்டை பெண்ணின் முட்டைப் பையில் இருந்து வெளிப்படும்.

இந்தக் கரு குழந்தையாக உருவாகி விட்டால் பீரியட்ஸ் வராது. முட்டை உயிராக மாறாமல், வெளிப்படுவது தான் உதிரப்போக்கு. இந்த சுழற்சிக்கு ஈஸ்ட்ரோ ஜென் மற்றும் புரோஜஸ்ட்ரான் ஆகிய 2 ஹார்மோன்கள் தான் காரணம். வழக்கமாக 28 நாட்களுக்கு ஒரு முறை பீரியட்ஸ் ஏற்பட்டு மூன்று முதல் 5 நாட் கள் வரை உதிரப்போக்கு இருக்கும். இந்தக் காலகட்டத்தில் பீரியட்ஸ் துவங்குவதற்கு முன்பு பெண்ணின் உடலில் சில அறிகுறிகள் தோன்றும். ஒருவிதமான டென்ஷன், கோபம் வருதல், மார்பகங் கள் கொஞ்சம் வீங்கி வலி போன்றவை ஏற்படலாம். சில நேரங்களில் பீரியட்ஸ் லேட் ஆகி தாமதமான உதிரப்போக்கு, வழக்கத்தை விட குறைவாகப் போதல்,  அதிக உதிரப்போக்கு, வயிற்று வலி போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். இதில் அதிக உதிரப்போக்கு முக்கியமான ஒன்று. கருப்பையில் ஏதாவது பைபர் கட்டி கள் அல்லது வேறு கட்டிகள் இருக்கும் பட்சத்தில் அதிக உதிரப்போக்கு ஏற்படலாம்.

ஹார்மோன் அளவு மாறுபாடு, கருப்பையின் உட்புறச் சுவர் தடிமன்  ஆவது போன்றவை இதற்கு காரணங்களாக இருக்கலாம். இதெல்லாம் சரியாக இருந்தும் கூட சிலருக்கு அதிக உதிரப் போக்கு மற்றும் கட்டியாக உதிரம்  போதல் போன்ற தொல்லைகள் இருக்கும்.உதிரப்போக்கு அதிகம் போதல், கட்டியாக உதிரம் வெளிப்படும் போது அதிக வலியிருந்தால் சாதாரணமாக எண்ணி விடக்கூடாது. உடனடியாக கர்ப்பவியல்  நிபுணர்களை அணுகி சிகிச்சை எடுக்க வேண்டும். ஸ்கேன் மற்றும் கருப்பைக்கான பரிசோதனைகள் மூலம் சரியான காரணத்தை கண்டறிய வேண்டியதும்  அவசியம். கருப்பைக் கட்டிகளை கண்டுகொள்ளாமல் விடும்போது அவை கேன்சர் கட்டிகளாக மாறும் அபாயம் உள்ளது. எனவே உங்களின் அதிக உதிரப் போக்கு கேன்சருக்கான அறிகுறியாகவும் இருக்கலாம் என்கிறார் டாக்டர் சசிக்குமார்.

மனரீதியான ஆறுதல்:

இளம் வயது முதல் மெனோபாஸ் வரை பெண்களின் பீரியட்ஸ் நேரத்தில் அவர்களது பிரச்னைகளை உடன் இருப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பீரி யட்சுக்கு முன்பு வரும் டென்ஷனை கணவர்கள் புரிந்து கொண்டு விட்டுக் கொடுக்கலாம். உடல் சோர்வு, இடுப்பு வலி உள்ளிட்ட பிரச்னைகளுக்கு வழக்க மான வேலைகளில் இருந்து முதல் மூன்று நாட்களுக்கு மட்டும் சிறிது ஓய்வு தேவை. பீரியட்ஸ் நேரத்தில் வலி, எரிச்சல், வாந்தி உள்ளிட்ட பிரச்னைகள்  உள்ள பெண்கள் சரியாக சாப்பிட மாட்டார்கள். இந்த நேரத்தில் உடன் இருப்பவர்கள் அவர்களை சத்தான உணவை சாப்பிட செய்வது அவசியம்.  ஒவ் வொரு பீரியட்ஸ் நேரத்திலும் சுகாதாரமான நாப்கின் பயன்படுத்த வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில் நாப்கினை மாற்றுவது அவசியம். நோய் தொற்று  ஏற்படுவதை தவிர்க்க வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிது கல் உப்பு சேர்த்து அடிக்கடி பிறப்புறுப்புகளை கழுவலாம். இதன் மூலம் அரிப்பு மற்றும் நோய்த் தொற்று உருவாவதை தடுக்க முடியும்.


பாட்டி வைத்தியம்

அசோக மரப்பட்டை 3 கிராம் அளவுக்கு எடுத்து தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைக்கவும். இதனை தினமும் மூன்று வேளையும் ஒரு  ஸ்பூன் அளவுக்கு குடித்து வந்தால் மாத விலக்கின் போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கு கட்டுப்படும்.

அருகம்புல்லை அரைத்து சாப்பிட்டால் மாதவிலக்கு கோளாறுகள் குணமாகும்.

அன்னாசிப் பழத்தை தினமும் சாப்பிட்டால் மாதவிலக்கு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

ஆலமர இலைகளை பொடி செய்து வெண்ணெய்யில் குழைத்து சாப்பிட்டால் மாதவிலக்கு பிரச்னையில் இருந்து விடுதலை கிடைக்கும்.

இத்திப் பிஞ்சை சீரகம் சேர்த்து வேக வைத்து சாப்பிடுவதன் மூலம் அதிக ரத்தப்போக்கு குறையும்.

ஈச்சுரமூலி இலையுடன் கருஞ்சீரகம் சேர்த்து சாப்பிட்டால் மாதவிலக்கு கோளாறுகள் தீரும்.

எள்ளை தண்ணீரில் போட்டு ஊற வைக்கவும். மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரை குடித்து வந்தால் மாதவிலக்கு காலத்தில் உண்டாகும்  தொந்தரவுகள் குறையும்.

கடுக்காய், மருதம்பட்டை, ஆவாரம்பூ ஆகியவற்றில் தலா 200 கிராம் அளவுக்கு எடுத்துக் கொள்ளவும். இவற்றை பொடியாக அரைத்து வைத் துக் கொள்ளவும். இதில் 5 கிராம் அளவுக்கு எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கஷாயத்தை குடிப்பதன் மூலம் தடைபட்ட மாதவிலக்கு  சரியாகும். அதிக ரத்தப் போக்கும் கட்டுப்படும்.

கருஞ்சீரகத்துடன் பனை வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு உடனே வெளிப்படும்.

செம்பருத்திப் பூக்களை அரைத்து அத்துடன் எலுமிச்சம்பழச்சாறு சேர்த்து சாப்பிடுவதன் மூலம் மாதவிலக்கு ஒழுங்காகும்.

செம்பருத்தி மொட்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்று வலி குணமாகும்.

சோம்பு, மாவிலங்கப்பட்டை, மிளகு மூன்றையும் சம அளவுக்குக் காய்ச்சி 100 மில்லி அளவுக்குக் குடித்தால் மாதவிலக்கு பிரச்னைகள் சரியா கும்.

ரெசிபி

எனர்ஜி உருண்டை: நிலக்கடலை, பொட்டுக்கடலை, பாதாம், பிஸ்தா, முந்திரி ஆகியவற்றை தேவையான அளவு எடுத்து உலர்த்தி சுத்தம் செய்து கொள்ளவும்.  இவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளவும். தேவையான சர்க்கரையை தனியாக பொடியாக்கி கொள்ளவும். அரைத்தவற்றை ஒன்றாக கலந்து தேன், சிறிதளவு  தண்ணீர் சேர்த்து உருண்டையாக பிடித்துக் கொள்ளலாம். இந்த எனர்ஜி உருண்டையை சாப்பிடுவதன் மூலம் புரதம் மற்றும் இரும்புச் சத்து உடலுக்குக்  கிடைக்கும். உதிரப் போக்கும் கட்டுப்படுத்தப்படும்.

பேரீச்சை பால்:

பாலை சுண்டக்காய்ச்சி எடுத்துக் கொள்ளவும். இதில் சர்க்கரைக்கு பதிலாக பனங்கற்கண்டு சேர்க்கவும். பேரீச்சம் பழத்தை சிறு சிறு துண்டு களாக நறுக்கி பாலில் சேர்க்கவும். இதமான சூட்டில் இந்த பாலை குடிக்கலாம். பனங்கற்கண்டு உடல் சூட்டை குறைக்கிறது. பேரீச்சம் பழத்தில் இருந்து உட லுக்குத் தேவையான இரும்புச் சத்து கிடைக்கிறது. பாலில் இருந்து கால்சியம் கிடைக்கிறது. இது மூன்றும் உடல் இழந்த சத்தை திரும்பப் பெற உதவும்.

கொள்ளு கூட்டு:

மணம் வரும் வரை கொள்ளுவை வறுத்து எடுக்கவும். இத்துடன் சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து கூட்டு  போல வேக வைத்து எடுக்கவும். இதில் உப்பு சேர்த்து சீரகம், மிளகாய், கருவேப்பிலை தாளித்து கூட்டுடன் சேர்த்து கடைந்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட லாம். கொள்ளு பருப்பில் இருந்து இரும்புச் சத்து கிடைக்கிறது.

டயட்

பீரியட்ஸ் நேரத்தில் உடல் இழக்கும் சக்தியை திரும்பப் பெற என்ன சாப்பிடலாம் என்று சொல்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா. ‘பீரியட்ஸ் நேரத்தில் ரத் தப்போக்கு ஏற்படுவதால் உண்டாகும் இழப்பை ஈடு செய்ய இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். உடல் சூட்டை தணித் துக் கொள்ள குளிர்ச்சியான ஆகாரங்களை எடுத்துக் கொள்வது அவசியம். இதற்காக இளநீர், வெண்ணெய், வெந்தயம், வெள்ளரி உள்ளிட்டவற்றை உணவில்  சேர்க்கலாம். அதிக எண்ணெய், மசாலா மற்றும் அசைவ உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது. கீரை மற்றும் பழச்சாறுகள் உடல் இழந்த சக்தியை மீட்டுத்  தரும். இந்த நேரத்தில் பெண்களின் எடை குறையும். இதைத் தவிர்க்க புரதம் உள்ள பருப்பு வகைகளை உணவில் சேர்ப்பது அவசியம். சர்க்கரைக்கு பதிலாக  தேன் சேர்ப்பதன் மூலம் பீரியட்ஸ் நேரத்தில் வரும் வயிற்று வலி குறையும். நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகளும் அவசியம் என்கிறார் சங்கீதா. - See more at: http://tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=1423#sthash.ayeAbXVx.dpuf
பீரியட் பிரச்னை பெண்களை பாடாய்படுத்தும் பிரச்னைகளில் ஒன்றாக இருக்கிறது. நாட்கள் தள்ளி போவது, அதிகப்படியான உதிரப்போக்கு, அதிகவலி  போன்ற மாதவிடாய் பிரச்னைகளால் பல பெண்கள் அவதிப்படுகிறார்கள். கருப்பையில் அல்லது ஹார்மோனில் வில்லங்கம் ஏதாவது இருந்தால் அதை  உணர்த்தும் எச்சரிக்கையாக இந்த பிரச்னை இருப்பதால் இதற்கு உடனே தீர்வு காண வேண்டியது அவசியம் என்கிறார் டாக்டர் சசிக்குமார். அவர் கூறியதாவது: ஒரு காலத்தில் பீரியட்ஸ் டைமில் ஓய்வும், சத்தான உணவும் கிடைத்தது. இப்போது அப்படியில்லை. பிஸியான வாழ்க்கை முறையில் நல்ல ஓய்வு என்பது  கனவாகி விடுகிறது. ஹார்மோன் சுழற்சியின் வெளிப்பாடு தான் மாதவிடாய். மாதம் ஒரு கருமுட்டை பெண்ணின் முட்டைப் பையில் இருந்து வெளிப்படும். 

இந்தக் கரு குழந்தையாக உருவாகி விட்டால் பீரியட்ஸ் வராது. முட்டை உயிராக மாறாமல், வெளிப்படுவது தான் உதிரப்போக்கு. இந்த சுழற்சிக்கு ஈஸ்ட்ரோ ஜென் மற்றும் புரோஜஸ்ட்ரான் ஆகிய 2 ஹார்மோன்கள் தான் காரணம். வழக்கமாக 28 நாட்களுக்கு ஒரு முறை பீரியட்ஸ் ஏற்பட்டு மூன்று முதல் 5 நாட் கள் வரை உதிரப்போக்கு இருக்கும். இந்தக் காலகட்டத்தில் பீரியட்ஸ் துவங்குவதற்கு முன்பு பெண்ணின் உடலில் சில அறிகுறிகள் தோன்றும். ஒருவிதமான டென்ஷன், கோபம் வருதல், மார்பகங் கள் கொஞ்சம் வீங்கி வலி போன்றவை ஏற்படலாம். சில நேரங்களில் பீரியட்ஸ் லேட் ஆகி தாமதமான உதிரப்போக்கு, வழக்கத்தை விட குறைவாகப் போதல்,  அதிக உதிரப்போக்கு, வயிற்று வலி போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். இதில் அதிக உதிரப்போக்கு முக்கியமான ஒன்று. கருப்பையில் ஏதாவது பைபர் கட்டி கள் அல்லது வேறு கட்டிகள் இருக்கும் பட்சத்தில் அதிக உதிரப்போக்கு ஏற்படலாம்.

ஹார்மோன் அளவு மாறுபாடு, கருப்பையின் உட்புறச் சுவர் தடிமன்  ஆவது போன்றவை இதற்கு காரணங்களாக இருக்கலாம். இதெல்லாம் சரியாக இருந்தும் கூட சிலருக்கு அதிக உதிரப் போக்கு மற்றும் கட்டியாக உதிரம்  போதல் போன்ற தொல்லைகள் இருக்கும்.உதிரப்போக்கு அதிகம் போதல், கட்டியாக உதிரம் வெளிப்படும் போது அதிக வலியிருந்தால் சாதாரணமாக எண்ணி விடக்கூடாது. உடனடியாக கர்ப்பவியல்  நிபுணர்களை அணுகி சிகிச்சை எடுக்க வேண்டும். ஸ்கேன் மற்றும் கருப்பைக்கான பரிசோதனைகள் மூலம் சரியான காரணத்தை கண்டறிய வேண்டியதும்  அவசியம். கருப்பைக் கட்டிகளை கண்டுகொள்ளாமல் விடும்போது அவை கேன்சர் கட்டிகளாக மாறும் அபாயம் உள்ளது. எனவே உங்களின் அதிக உதிரப் போக்கு கேன்சருக்கான அறிகுறியாகவும் இருக்கலாம் என்கிறார் டாக்டர் சசிக்குமார்.

மனரீதியான ஆறுதல்:

இளம் வயது முதல் மெனோபாஸ் வரை பெண்களின் பீரியட்ஸ் நேரத்தில் அவர்களது பிரச்னைகளை உடன் இருப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பீரி யட்சுக்கு முன்பு வரும் டென்ஷனை கணவர்கள் புரிந்து கொண்டு விட்டுக் கொடுக்கலாம். உடல் சோர்வு, இடுப்பு வலி உள்ளிட்ட பிரச்னைகளுக்கு வழக்க மான வேலைகளில் இருந்து முதல் மூன்று நாட்களுக்கு மட்டும் சிறிது ஓய்வு தேவை. பீரியட்ஸ் நேரத்தில் வலி, எரிச்சல், வாந்தி உள்ளிட்ட பிரச்னைகள்  உள்ள பெண்கள் சரியாக சாப்பிட மாட்டார்கள். இந்த நேரத்தில் உடன் இருப்பவர்கள் அவர்களை சத்தான உணவை சாப்பிட செய்வது அவசியம்.  ஒவ் வொரு பீரியட்ஸ் நேரத்திலும் சுகாதாரமான நாப்கின் பயன்படுத்த வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில் நாப்கினை மாற்றுவது அவசியம். நோய் தொற்று  ஏற்படுவதை தவிர்க்க வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிது கல் உப்பு சேர்த்து அடிக்கடி பிறப்புறுப்புகளை கழுவலாம். இதன் மூலம் அரிப்பு மற்றும் நோய்த் தொற்று உருவாவதை தடுக்க முடியும்.


பாட்டி வைத்தியம்

அசோக மரப்பட்டை 3 கிராம் அளவுக்கு எடுத்து தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைக்கவும். இதனை தினமும் மூன்று வேளையும் ஒரு  ஸ்பூன் அளவுக்கு குடித்து வந்தால் மாத விலக்கின் போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கு கட்டுப்படும்.

அருகம்புல்லை அரைத்து சாப்பிட்டால் மாதவிலக்கு கோளாறுகள் குணமாகும்.

அன்னாசிப் பழத்தை தினமும் சாப்பிட்டால் மாதவிலக்கு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

ஆலமர இலைகளை பொடி செய்து வெண்ணெய்யில் குழைத்து சாப்பிட்டால் மாதவிலக்கு பிரச்னையில் இருந்து விடுதலை கிடைக்கும்.

இத்திப் பிஞ்சை சீரகம் சேர்த்து வேக வைத்து சாப்பிடுவதன் மூலம் அதிக ரத்தப்போக்கு குறையும்.

ஈச்சுரமூலி இலையுடன் கருஞ்சீரகம் சேர்த்து சாப்பிட்டால் மாதவிலக்கு கோளாறுகள் தீரும்.

எள்ளை தண்ணீரில் போட்டு ஊற வைக்கவும். மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரை குடித்து வந்தால் மாதவிலக்கு காலத்தில் உண்டாகும்  தொந்தரவுகள் குறையும்.

கடுக்காய், மருதம்பட்டை, ஆவாரம்பூ ஆகியவற்றில் தலா 200 கிராம் அளவுக்கு எடுத்துக் கொள்ளவும். இவற்றை பொடியாக அரைத்து வைத் துக் கொள்ளவும். இதில் 5 கிராம் அளவுக்கு எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கஷாயத்தை குடிப்பதன் மூலம் தடைபட்ட மாதவிலக்கு  சரியாகும். அதிக ரத்தப் போக்கும் கட்டுப்படும்.

கருஞ்சீரகத்துடன் பனை வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு உடனே வெளிப்படும்.

செம்பருத்திப் பூக்களை அரைத்து அத்துடன் எலுமிச்சம்பழச்சாறு சேர்த்து சாப்பிடுவதன் மூலம் மாதவிலக்கு ஒழுங்காகும்.

செம்பருத்தி மொட்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்று வலி குணமாகும்.

சோம்பு, மாவிலங்கப்பட்டை, மிளகு மூன்றையும் சம அளவுக்குக் காய்ச்சி 100 மில்லி அளவுக்குக் குடித்தால் மாதவிலக்கு பிரச்னைகள் சரியா கும்.

ரெசிபி

எனர்ஜி உருண்டை: நிலக்கடலை, பொட்டுக்கடலை, பாதாம், பிஸ்தா, முந்திரி ஆகியவற்றை தேவையான அளவு எடுத்து உலர்த்தி சுத்தம் செய்து கொள்ளவும்.  இவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளவும். தேவையான சர்க்கரையை தனியாக பொடியாக்கி கொள்ளவும். அரைத்தவற்றை ஒன்றாக கலந்து தேன், சிறிதளவு  தண்ணீர் சேர்த்து உருண்டையாக பிடித்துக் கொள்ளலாம். இந்த எனர்ஜி உருண்டையை சாப்பிடுவதன் மூலம் புரதம் மற்றும் இரும்புச் சத்து உடலுக்குக்  கிடைக்கும். உதிரப் போக்கும் கட்டுப்படுத்தப்படும்.

பேரீச்சை பால்:

பாலை சுண்டக்காய்ச்சி எடுத்துக் கொள்ளவும். இதில் சர்க்கரைக்கு பதிலாக பனங்கற்கண்டு சேர்க்கவும். பேரீச்சம் பழத்தை சிறு சிறு துண்டு களாக நறுக்கி பாலில் சேர்க்கவும். இதமான சூட்டில் இந்த பாலை குடிக்கலாம். பனங்கற்கண்டு உடல் சூட்டை குறைக்கிறது. பேரீச்சம் பழத்தில் இருந்து உட லுக்குத் தேவையான இரும்புச் சத்து கிடைக்கிறது. பாலில் இருந்து கால்சியம் கிடைக்கிறது. இது மூன்றும் உடல் இழந்த சத்தை திரும்பப் பெற உதவும்.

கொள்ளு கூட்டு:

மணம் வரும் வரை கொள்ளுவை வறுத்து எடுக்கவும். இத்துடன் சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து கூட்டு  போல வேக வைத்து எடுக்கவும். இதில் உப்பு சேர்த்து சீரகம், மிளகாய், கருவேப்பிலை தாளித்து கூட்டுடன் சேர்த்து கடைந்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட லாம். கொள்ளு பருப்பில் இருந்து இரும்புச் சத்து கிடைக்கிறது.

டயட்

பீரியட்ஸ் நேரத்தில் உடல் இழக்கும் சக்தியை திரும்பப் பெற என்ன சாப்பிடலாம் என்று சொல்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா. ‘பீரியட்ஸ் நேரத்தில் ரத் தப்போக்கு ஏற்படுவதால் உண்டாகும் இழப்பை ஈடு செய்ய இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். உடல் சூட்டை தணித் துக் கொள்ள குளிர்ச்சியான ஆகாரங்களை எடுத்துக் கொள்வது அவசியம். இதற்காக இளநீர், வெண்ணெய், வெந்தயம், வெள்ளரி உள்ளிட்டவற்றை உணவில்  சேர்க்கலாம். அதிக எண்ணெய், மசாலா மற்றும் அசைவ உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது. கீரை மற்றும் பழச்சாறுகள் உடல் இழந்த சக்தியை மீட்டுத்  தரும். இந்த நேரத்தில் பெண்களின் எடை குறையும். இதைத் தவிர்க்க புரதம் உள்ள பருப்பு வகைகளை உணவில் சேர்ப்பது அவசியம். சர்க்கரைக்கு பதிலாக  தேன் சேர்ப்பதன் மூலம் பீரியட்ஸ் நேரத்தில் வரும் வயிற்று வலி குறையும். நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகளும் அவசியம் என்கிறார் சங்கீதா.

தைராய்டு சுரப்பி குறைபாடு பெண்களை அதிகம் பாதிக்கும்

Thyroid gland disorders affect women more
தைராய்டு சுரப்பியிலிருந்து தைராக்சின் எனும் ஹார்மோன் (ஜி4) சுரக்கிறது. தைராய்டு ஹார்மோன் உடலின் வெவ்வேறு விதமான செயல்பாடுகளுக்கு மிகவும் முக்கிய காரணமாகும். உடலில் நடைபெறும் வெவ்வேறு வளர்சிதை மாற்றங்கள் சீராக அமைய தைராய்டு ஹார்மோன்கள் உதவுகின்றன. பல்வேறு விதமான உபாதைகள் தைராய்டு சுரப்பியின் குறைப்பாட்டால் உண்டாகிறது. இந்த நோய் இளம்பெண்களிடம் அதிகமாகக் காணப்படுகிறது. இது தைராய்டு ஹார்மோன்கள் அதிகமாக உற்பத்தியாவதால் உருவாகிறது.

ஹைப்போ தைராய்டு நோய்:

இந்த நோய் எல்லா வயது பெண்களையும் பாதிக்கிறது. ரத்தத் தைராகசின் ஹார்மோன் குறைந்த அளவு இருப்பதால் நோய் பாதிப்பு உண்டாகிறது. உடல் பருமன் அதிகரிப்பு, உடல் சோர்வடைதல், அதிக தூக்கம், முடி உதிர்தல், குளிர்தாங்க முடியாத தன்மை, இதயத்துடிப்பு குறைந்து கொண்டே போதல், மாதவிடாய் அதிகமாக உள்ள நிலை, ஞாபகசக்தி குறைதல், சருமம் வறட்சியாகக் காணப்படுதல்.

மருத்துவமுறை:

தைராக்சின் மாத்திரைகள் மூலம் இந்த நோயை முழுமையாக குணப்படுத்தலாம். இந்த நோய் உள்ளவர்கள், பொதுவாக தைராக்சின் மாத்திரையை வாழ்நாள் முழுவதும் உட்கொள்ள வேண்டும். அதேபோல் ரத்த பரிசோதனையின் முலம் தைராக்சின் அளவை ஆண்டுக�கு ஒருமுறையாவது அறிந்து கொள்ள வேண்டும். அதிக தைராக்சின் உடலில் இருந்தால் இதயம், எலும்பு, சம்மந்தப்பட்ட நோய்கள் உண்டாகும்.

தைராய்டு கட்டிகள்:

பொதுவாக தைராய்டு சுரப்பி பெரியதாவதை காய்டர் என்று அழைக்கப்படுகிறது. பல காரணங்களால் இந்த கட்டி ஏற்படுகிறது. 5 முதல் 10 சதவீதம் பெண்களிடம் காணப்படுகிறது. தைராய்டு கட்டிகள் புற்றுநோய் அல்லது புற்றுநோய் இல்லாத கட்டிகளாக உருவாகிறது. புற்றுநோய் இல்லாத கட்டிகள் மெதுவாக பெரியதாகும் தன்மை உடையது. இதர உடல் உறுப்புகளையும் பாதிக்கக் கூடியது. அல்ட்ரா ஸ்கேன் மற்றும் திசுப்பரிசோதனை ஆகியவற்றின் மூலம் தைராய்டு கட்டியின் தன்மையை எளிதில் கண்டறிந்துவிட முடியும்.

பாராதைராய்டு நாள மில்லா சுரப்பி:


இது ஒரு சிறிய நாளமில்லா சுரப்பிகள். நமது உடலில் மொத்தம் நான்கு பாரா தைராய்டு சுரப்பிகள் உள்ளன. இந்த சுரப்பிகள் தைராய்டு சுரப்பியின் பின்புறத்தில் கழுத்தில் உள்ளது. இந்த சுரப்பிகள் பாரா தைராய்டு ஹார்மோனை சுரக்கிறது. இந்த ஹார்மோன்கள் உடலின் ரத்தத்தில் கால்சியம் அளவினை கட்டுப்படுத்துகிறது. சரியான அளவு கால்சியம் ரத்தத்தில் இருப்பது மிகவும் அவசியம், இதில் சிறுமாற்றங்கள் ஏற்பட்டாலும் பல்வேறு விதமான உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

உடலில் பல்வேறு விதமான செயல்பாடுகளுக்கு கால்சியத்தின் அளவு மிக முக்கிய பங்களிக்கிறது, முக்கியமாக நரம்பு, தசை, இருதய செயல்பாடுகளுக்கு கால்சியம் மிகவும் அவசியமானது. உடலில் 99 சதவீதம் கால்சியம் எலும்பில் தான் உள்ளது. பாராதைராய்டு நோயானது 750 பேரில் ஒருவருக்கு வர வாய்ப்பு உள்ளது. பொதுவாக நடுத்தர வயது பெண்களை அதிகமாக பாதிக்கிறது. பெண்கள் தைராய்டு நோய் பற்றிய பயத்தினை தவிர்த்து, மருத்துவ ஆலோசனையினால் பயமின்றி ஆரோக்கியமாக வாழலாம்.

நோய் அறிகுறிகள்:

தைராய்டு சுரப்பி பெரிதாகி கட்டிகள் தெரிதல், இதய படப்படப்பு, தூக்கமின்மை, அதிகமான வியர்வை வெளிப்படுதல், பேதி, எடை குறைவு, பசி அதிகமாதல், மாதவிடாய் ரத்தப் போக்கின் அளவு குறைவாகபடுதல், கண்கள் பெரிதாக தோன்றுதல். கைவிரல் நடுக்கத்திற்கு தகுந்த முறையில் சிகிச்சை செய்து கொள்வதின் முலம் உடல் நலம் பெறலாம். நிரந்தர தீர்வுக்கு, கதிரியக்க மாத்திரை தைராய்டு அறுவை சிகிச்சை அவசியம்.

மாதவிலக்கை தள்ளிப்போட்டால் உடல்நலம் பாதிக்கும்

Postponed for a month exemption will affect the health
மாதந்தோறும் ஏற்படும் மாதவிலக்கு பிரச்னையை, சில நேரத்தில் செயற்கையாக தள்ளிப்போட நேரிடுகிறது. திருமண விழாக்கள், கோயில் திருவிழா  போன்ற சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது அவ்வாறு செய்கின்றனர். அதற்காக மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர். இது தவறான செயல்  என்றும், அவ்வாறு செய்வதால் பெண்களின் உடல் நிலை பாதிக்கப்படும் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

பீரியட்ஸ் மாதந்தோறும் நிகழும் இயற்கையான நிகழ்வு. அதை வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபடுவது ஆபத்தானது. இப்போது  மாதவிடாயை தள்ளிப்போட நினைப்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைகளை பெறாமல் மாத்திரைகளின் பெயரை சொல்லி, மெடிக்கல் ஸ்டோரில்  பெற்று பயன்படுத்துகின்றனர். இது உடலில் பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்கும். டாக்டரின் அறிவுரை இல்லாமல் அது போன்ற மாத்திரைகளை  கட்டாயம் சாப்பிடக்கூடாது.

மாதவிலக்கு தள்ளிப்போக மாத்திரை எடுப்பவர்கள் முதலில் கர்ப்பபையை ஸ்கேன் செய்து கொள்ள வேண்டியது அவசியம். யூட்ரசின் நிலை, அதில்  ஏதாவது பிரச்னை இருக்கிறதா, வயிற்று வலி, அல்சர், மாதவிடாய் கோளாறு, கர்ப்பப்பை கேன்சர் பாதிப்பு என எது வேண்டுமானாலும் தாக்கி  இருக்கலாம். அது குறித்து தெரியாமல் மாத்திரை சாப்பிட்டால் அந்த பாதிப்புகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

டாக்டரின் அறிவுரை இல்லாமல் மாதவிலக்கு மாத்திரைகளை உட்கொள்வதால் உடல் எடை கூடும். வயிற்று புரட்டல், வாந்தி, வாய்க்கசப்பு  உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படும். சிலருக்கு மைக்ரேன் எனப்படும் ஒற்றைத்தலைவலி வர வாய்ப்புள்ளது.

அடிக்கடிமாத்திரை சாப்பிட்டு மாதவிலக்கை தள்ளிபோடும்போது, அதன் மாதந்திர சுழற்சியும் மாறுபடுகிறது. ஒரு முறை தள்ளிப்போனால் அடுத்த  முறை சரியாகி விடும் என நினைக்க கூடாது. அவ்வாறு மாத விலக்கு முறை தள்ளிப்போகும்போது, அடுத்த மாதவிடாய் சுழற்சியை உடல்  ஏற்றுக்கொள்ளாமல் போகலாம். அப்போது ரத்தப்போக்கு அதிகரிக்கும். உடலில் உஷ்ணமும் அதிகமாகும்.

பொதுவாக வலி நிவாரணிக்கும், வைரஸ் பாதிப்பு உள்ளிட்டவைக்கும் மாத்திரைகளை சேர்த்தே தயாரிக்கும் வழக்கம் உள்ளது. அதனால் இஷ்டப்படி  மாத்திரைகளை பயன்படுத்துவது உடலை பாதிக்கும். பொதுவாக மாதவிடாய் மாத்திரை, கருத்தடை மாத்திரை அளவுக்கு பெரிய அளவுக்கு பாதிப்பை  விளைவிக்க கூடியது இல்லை என்றாலும் சிறு பாதிப்பு கூட ஏற்படாத அளவுக்கு பெண்கள் உடலை பாதுகாப்பது அவசியம் என்கின்றனர் பெண்  மருத்துவர்கள்.

குழந்தைப்பேறை இழக்கும் இளம்பெண்கள்

Fertility younger women of losing
‘நம் ஊரில் கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி பெண்கள், இயல்பை விட சீக்கிரமாகவே தாய்மையடையும் தகுதியை இழந்து விடுகிறார்கள்’ என்று அதிர்ச்சி  ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறது பெங்களூரைச் சேர்ந்த அமைப்பு ஒன்று. அதாவது, 40-45 வயதில் ஏற்படும் மெனோபாஸ் நிலை, இன்றைய  பெண்களுக்கு 30-35 வயதிலேயே ஏற்பட்டு விடுகிறதாம்.

குழந்தைகள் மற்றும் பெண்களின் ஆரோக்கியத்துக்காக இயங்கி வரும் ‘சத்வம்’ என்ற அந்த அமைப்பு, கடந்த 5 வருடமாக 900 பெண்களைப்  பரிசோதித்து இந்த முடிவைச் சொல்லியிருக்கிறது. நவீனம் என்ற பெயரில் வாழ்க்கைச் சூழல், நம் ஆரோக்கியத்தைப் பதம்பார்ப்பது அறிந்ததுதான்.  வரப்போகும் சந்ததிகள் வரை அதன் விஷக்கரம் நீள்வதின் அறிகுறியா இது? மகப்பேறு மருத்துவரான கமலா செல்வராஜிடம் பேசினோம்...

‘‘பி.ஓ.எஃப்... அதாவது, பிரீமெச்சூர் ஓவேரியன் ஃபெயிலியர் என்பார்கள் இதை. சமீபகாலமாக இந்தப் பிரச்னை இளம் பெண்கள் மத்தியில்  அதிகரித்திருப்பதை நானே உணர்ந்திருக்கிறேன். எங்கள் மருத்துவமனைக்கு வருபவர்களிலே கூட 5.5 சதவீதத்தினர் இந்தப் பிரச்னையோடு  வருகிறார்கள். இது அதிகம்தான்’’ என்று கவலையோடு ஆரம்பித்தார் அவர்.

‘‘ஒரு பெண்ணின் கருப்பையில் மாதாமாதம் கருமுட்டை வளர்ந்து, முதிர்ந்து, கரு உருவாவதற்காகக் காத்திருக்கிறது. பிறகு இது செயலிழப்பதைத்தான்  மாதவிடாய் சுழற்சி என்கிறோம். இந்த சுழற்சி சராசரியாக 12-14 வயதில் தொடங்கும். ஆனால், இதன் முடிவு என்பது வயது சம்பந்தப்பட்டதல்ல...  எண்ணிக்கை சம்பந்தப்பட்டது. ஒரு பெண்ணின் சினைப்பைகள் கருமுட்டையை வெளிவிடும் வரை இந்த சுழற்சி நடக்கும்.

‘இதெல்லாம் ஏற்கனவே எழுதப்பட்ட தீர்ப்பு’ என்பார்களே... அப்படி ஒவ்வொரு பெண்ணுக்கும் இத்தனை கருமுட்டைகள்தான் உருவாகும் என்பதை  பிறக்கும்போதே இயற்கை முடிவு செய்து விடுகிறது. சொல்லப் போனால் தாயின் கருவுக்குள் ஒரு பெண் குழந்தை இருக்கும்போதே, தன் கருவில்  அது லட்சக்கணக்கில் கரு முட்டைகளைச் சுமக்கிறது.

பிறந்தது முதல் குழந்தை வளர வளர, இந்தக் கரு முட்டைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும். பூப்பெய்தும்போது சுமார் இரண்டு  லட்சமாக இருக்கும். மாதம் ஒரு கருமுட்டை முழு வளர்ச்சி அடைந்து மாதவிடாய் சுழற்சியை ஏற்படுத்தினாலும், இன்னொரு பக்கம் மிச்சமுள்ள  கருமுட்டைகள் அழிந்துகொண்டேதான் இருக்கும்.

இது இயற்கையானது. இரண்டு பக்கமும் எரியும் மெழுகுவர்த்தி ஒரு கட்டத்தில் கரைந்து காலியாகும் அல்லவா? அப்படி பெண்ணின் சினைப்பை ஒரு  கட்டத்தில் காலியாகி, இனி கருமுட்டை ஸ்டாக் இல்லை என்று கையை விரித்து விடுவதையே நாம் மெனோபாஸ் நிலை என்கிறோம்.
இப்படி இயற்கையாக ஒரு பெண் வளரும்போது நிகழும் கருமுட்டை அழிவு, இன்று கொஞ்சம் நார்மலைத் தாண்டி விபரீதமான அளவுக்கு அதிகம்  நிகழ்ந்து விடுகிறது என்பதையே இப்படிப்பட்ட அறிகுறிகள் காட்டுகின்றன.

கரு முட்டைகளின் அழிவுக்கு பல காரணங்கள் இருக்கலாம். தீவிரமான நோய்த் தாக்குதல், அதற்காக உட்கொள்ளப்படும் வீரியமிக்க மருந்துகள்  போன்றவற்றால் கூட கருமுட்டை அதிக அளவில் அழிந்து போகலாம்’’ என்கிற கமலா செல்வராஜ், குழந்தையின்மைக்காக எடுத்துக் கொள்ளப்படும்  சிகிச்சைகளில் ஒன்று கூட இந்தப் பிரச்னைக்கு முக்கியக் காரணமாக அமைவதை சுட்டிக் காட்டினார்.

‘‘ ‘ஓவேரியன் டிரில்லிங்’ என்பார்கள் அதை. அதாவது, கருப்பையில் தங்கிவிடும் தேவையில்லாத விஷயங்களை லேப்ராஸ்கோப் மூலமாக உறிஞ்சி  எடுப்பது. பொதுவாக, பாலிசிஸ்டிக் ஓவரி போன்ற கருப்பை பிரச்னை இருக்கும் பெண்களுக்கே இந்த சிகிச்சை செய்ய வேண்டும். ஆனால்  இப்போதெல்லாம், குழந்தை இல்லை என்றாலே பெண்ணுக்குத்தான் பிரச்னை இருக்கும் என சில டாக்டர்கள் முன்முடிவு செய்துவிடுகிறார்கள்.

உடனடியாக பெண்ணுக்கு இந்த சிகிச்சையை செய்து பார்த்து விடுவது வழக்கமாகிவிட்டது. மாதவிடாய் சுழற்சி சரியாக இருக்கும் ஆரோக்கியமான  பெண்களுக்கே இந்த சிகிச்சையை செய்து, சினைப்பையில் இருக்கும் பல்லாயிரம் கருமுட்டைகளை அழித்துவிடுகிறார்கள். இந்த ஆபத்தான  பழக்கத்தைக் கைவிட வேண்டும்’’ என்கிறார் அவர். அறியாமையை விட மோசமானது முழுமை பெறாத விழிப்புணர்வு. அதைத்தான் நாம் அனுபவித்துக்  கொண்டிருக்கிறோமோ!

கருத்தடை மாத்திரைகள் பாதுகாப்பானவையா ?

Contraception pills safe?

கர்ப்பமாவதைத் தவிர்க்க அல்லது மாதவிடாய் சுழற்சியை முறைப்படுத்த உலகெங்கும் 7 கோடி பெண்கள் மாத்திரைகள் உபயோகிக்கிறார்கள்.  கருத்தடை மாத்திரையைப் பற்றி அனேக பெண்களுக்கும் குழப்பங்கள் உண்டு. அது பாதுகாப்பானதா, பக்க விளைவுகளை ஏற்படுத்துமா, நிறுத்திய  பிறகு குழந்தை பிறக்குமா? என ஆயிரம் கேள்விகள்... கருத்தடை மாத்திரை எப்படி வேலை செய்கிறது என்பதை முதலில் தெரிந்து கொண்டாலே  இந்தக் குழப்பங்கள் நீங்கும் என்கிறார் மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ்.

‘‘உங்கள் கருப்பையில் உற்பத்தியாகும் ஈஸ்ட்ரோஜென், ப்ரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களை போலவே செயற்கை (சிந்தெடிக்) ஹார்மோன்களால்  ஆனது மாத்திரை. கருப்பை வேலை செய்வது போல எண்ணி, உங்கள் உடலை ஏமாறச் செய்கிறது மாத்திரை. ஆகவே அவை ஒரு முட்டையை  உண்டாக்கவில்லையானால் நீங்கள் கர்ப்பமுற முடியாது. கருப்பை வாயில் உண்டாகும் கொழகொழவென்ற திரவத்தையும் மாற்றுகிறது மாத்திரை.

இந்த கொழகொழ திரவத்தின் வழியே விந்து, கருப்பையை அடைவதைத் தாமதப்படுத்துகிறது. நீங்கள் மாத்திரை எடுத்துக் கொள்ளும் போது,  ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் வரும். அதை நிறுத்த முடிவு செய்தால், எதிர்காலத்தில் உங்களுக்கு குழந்தை உண்டாகும். மார்க்கெட்டில் கிடைக்கும்  பெரும்பாலான மாத்திரைகள் 21 நாட்கள் டோஸ் திட்ட முறையாகும்.

முதல் தடவை மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் போது, சிலருக்கு மாதவிடாய் சுழற்சியின் முதல் நாளன்று முதல் மாத்திரையை எடுத்துக்  கொள்ள வேண்டும். எந்தத் திட்ட முறையை உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கிறாரோ, அதைக் கண்டிப்பாகப் பின்பற்றுங்கள். பேக்கேஜ் மீது  கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளின் படி, மாத்திரைகளை தினமும் அதே நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தினமும் தொடர்ந்து 21 நாட்களுக்கு ஒரு மாத்திரை வீதம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு அடுத்தடுத்த பேக்கும், 7 நாட்கள் மாத்திரை  இன்றி விடப்பட்டு 29-ம் நாளில் ஆரம்பிக்க வேண்டும். கடைசி மாத்திரைக்கு 2-3 நாள்களுக்குப் பிறகு மாதவிடாய் தொடங்குகிறது. அடுத்த பேக்  ஆரம்பிக்கும் முன், மாதவிடாய் முடிந்திருக்காது.

முதலில் மாத்திரை சாப்பிடத் தொடங்கும் போது உங்களுக்கு ஒரு சிறிது ரத்தக் கசிவு ஏற்படலாம். அது உங்களுக்கு வழக்கமாக மாதவிடாய் வருவது  போன்றதே. தலைவலி, வாந்தி, குமட்டல், கான்டாக்ட் லென்ஸ் போட்டுக் கொள்வதில் சிரமம் போன்ற வேறு சில ஆரம்ப சிறு பக்க விளைவுகளும்  இருக்கலாம். மாத்திரை எடுத்துக் கொள்வதை ஒருநாளும் தவறவிட வேண்டாம்.

முதல் 3 மாதங்களுக்குப் பிறகு பக்க விளைவுகள் மறைந்து விடுகின்றன. மறையாவிட்டால் மருத்துவரைப் பார்க்கலாம். சிறந்த முறையில் வேலை  செய்யும் மற்றொரு மாத்திரையை அவர் உங்களுக்கு மாற்றித் தருவார். பக்க விளைவுகளுக்குப் பயந்து கொண்டு மாத்திரைகளை நிறுத்திவிட  வேண்டாம்.

மாத்திரை எடுத்துக் கொள்வதை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் தவறினால் நீங்கள் கர்ப்பமுறக் கூடும். தினமும் அதே நேரத்தில்  எடுத்துக் கொள்ளாவிட்டாலும், மாத்திரை வேலை செய்யாமல் போகலாம். நீங்கள் மாத்திரை எடுத்துக் கொள்ள ஆரம்பித்த தினத்தை நினைவில்  கொள்ள வேண்டும். மேலும் ஒரு மாத்திரையை எடுத்துக் கொள்ளத் தவறினால், எப்போதும் கைவசம் ஆணுறை மாதிரியான வேறு கருத்தடை  சாதனங்களை வைத்திருப்பது பாதுகாப்பானது...’’ என்கிறார்.

அதிக ரத்தப் போக்கு ஆபத்தானது.

Dangerous high blood flow.
மாதவிலக்கின் போது வெளியேறுகிற ரத்தம் அசுத்தமானது என்றும் அது எத்தனை அதிகமாக வெளியேறுகிறதோ அத்தனை நல்லது என்றும் பலருக்கு  தவறான ஒரு அபிப்ராயம் உண்டு. ஆனால் அதிக ரத்தப்போக்கு ஆரோக்கியமானதில்லை ஆபத்தானது என்கிறார் மகப்பேறு மற்றும் ரத்த  நோய்களுக்கான சிறப்பு மருத்துவர் மகேஸ்வரி.

25 முதல் 30 நாட்களுக்குள் மாதவிலக்கு வர்றதும் 5 நாட்கள் நீடிக்கிறதும் தான் இயல்பானது. அந்த 5 நாட்கள்ல 25 முதல் 80மி.லி ரத்தம்  வெளியேறலாம். 80 மி.லிக்கு கூடுதலாகவோ, 5 நாட்களைத் தாண்டியோ, ரத்தபோக்கு இருந்தா அது அசாதாரணமானது சந்தேகப்படணும்.  அதிகப்படியான ரத்தப்போக்கை மெனரேஜியானு சொல்றோம்.

13-14 வயசுல வயசுக்கு வர்ற ஒரு பெண்ணுக்கு முதல் சில மாசங்களுக்கு மாதவிலக்கு சுழற்சி மற்றும் வெளியேறுகிற ரத்த போக்கின் அளவுல  மாற்றம் இருக்கலாம். அது கொஞ்ச நாட்களில் சரியாகிவிடும். அதுவே 18-19 வயதிலும் தொடர்ந்தாலோ, மாதவிலக்கு நாட்கள்ல அந்தப்பெண்  ரொம்பக் களைச்சு சோர்ந்து போனாலோ அலட்சியப்படுத்தாம மருத்துவரை பார்க்கணும். அதிக படியான ரத்தப் போக்குக்கு நிறைய காரணங்கள்  இருக்கலாம்.

ரத்த தட்டணுக்கள்ல ஏதாவது குறைபாடு இருக்கலாம். சிலர் இதய நோய்க்கு மருந்துகள் எடுப்பாங்க. ரத்தம் உறைதலை தடுக்கிற அந்த  மருந்துக்களோட பக்க விளைவாக இருக்கலாம். கர்ப்பபையோட உள்பக்க லைனிங் பாகம் அப்படியே உதிரும் போது தான் அது ரத்தப்போக்கா  வெளியேறும். பிறகு புது திசுக்கள் உருவாகும். இந்த இயக்கத்துல கோளாறு இருக்கலாம். கர்ப்பப்பைல தொற்று அல்லது கட்டி, காப்பர்டி யோட  விளைவு, என்டோமெட்ரியாசிஸ்னு சொல்லக்கூடிய கர்ப்பப்பை வீக்கம்னு பல காரணங்களால உதிரப்போக்கு அதிகமாக இருக்கலாம்.

வயசான, நாலஞ்சு பிள்ளைங்க பெற்றெடுத்த, குண்டான உடல்வாகுள்ள பெண்களுக்கு இப்படி இருந்தா அது கர்ப்பப்பை புற்றுநோய்க்கான  அறிகுறியாங்குறதையும் சோதிக்கணும். கர்ப்பபைக்கு வெளியில உருவாகிற கர்ப்பம் கர்ப்பப்பை வாய் கட்டி, மற்றும் தொற்று தைராய்டுனு இன்னும்  சில காரணங்களையும்  குறிப்பிடலாம். அதனால ரத்தப்போக்கு அதிகமாக இருக்கிறப்ப சின்னப் பொண்ணுங்களுக்கு அப்படித்தான் இருக்கும் போக  போக சரியாயிடும்னு நினைக்க வேண்டாம். உடனடியாக மகப்பேறு மருத்துவரை பார்த்த பரிசோதிக்கிறது நல்லது.

முதல்ல கர்ப்பப்பையை ஸ்கேன் செய்ய வேண்டியிருக்கும் பிறகு ரத்தத்துல ஹீமோகுளோபின் அளவும், தைராயிடும் சரி பார்க்கப் படணும்.  அளவுக்கதிக ரத்தப்போக்கு இருந்தா, தேவைப்பட்டா டி அன்ட் சி செய்து திசுக்களை பயாப்சி சோதனைக்கும் அனுப்ப வேண்டியிருக்கும். அதிகப்படியான  ரத்தப்போக்கை கட்டுப்படுத்த, ஹார்மோன் கலக்காத அருமையான மருந்துகள் இப்ப நிறைய இருக்கு என்கிறார் மருத்துவர் மகேஸ்வரி.

மன அழுத்தமும் இளவயது மெனோபாஸும்

Stress young menopause
பெண்ணாகப் பிறந்த எல்லோருக்கும் மாதவிலக்கு என்பது எப்படி இயல்பான ஒரு நிகழ்வோ, அப்படித்தான் மாதவிடாய் முற்றுப் பெறுகிற  மெனோபாஸும். இந்தியப் பெண்களின் சராசரி மெனோபாஸ் வயது 45 முதல் 50. ஆனால், சமீப காலத்தில் 40- ஐ நெருங்கும் பெண்களுக்கும்  மெனோபாஸ் வருவது அதிகரித்து வருகிறது. காரணம் ஸ்ட்ரெஸ் எனப்படுகிற மன அழுத்தம்.

மன அழுத்தத்துக்கும், மெனோபாஸுக்குமான தொடர்பு, அறிகுறிகள், அதை உறுதி செய்கிற பரிசோதனைகள், முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் என  சகலத்தையும் பற்றிப் பேசுகிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.

‘‘மூளையில் உள்ள ஹைப்போதலாமஸ், பிட்யூட்டரி சுரப்பி மற்றும் சினைப்பைகள் மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. விளையாட்டு  வீராங்கனைகள், கடினமான வேலையில் இருக்கிற பெண்கள், மன அழுத்தம் அதிகமுள்ள வேலைகளிலும், டென்ஷன் அதிகமுள்ள பெரிய  பொறுப்புகளிலும் இருக்கும் பெண்களுக்கு, என்டார்ஃபின் என்கிற ஹார்மோன் சுரப்பு அதிகமாகி, அதன் பாதிப்பு மூளையில் தெரிந்து, அதன் வழியே  சினைப்பை வரை வரும்.

முதல் கட்டமாக மாதவிலக்கு சுழற்சியில் மாற்றங்கள் தெரியும். அடிக்கடி ஏற்படும் மன மாற்றம், கோபம், அழுகை, படபடப்பு, வலி, தலைசுற்றல்,  தூக்கமின்மை, மறதி, தாம்பத்ய உறவில் நாட்டமின்மை என மெனோபாஸ் வயதில் இருக்கிற பெண்கள் சந்திக்கிற அத்தனை அறிகுறிகளும்,  இவர்களுக்கும் இருக்கும். மெனோபாஸ் என்பது மாதவிலக்கு இம்சைகளில் இருந்து விடுதலை கொடுக்கிற நிகழ்வு என்றாலும், அது வேறு மாதிரியான  பிரச்னைகளையும் கொண்டு வரும்.

அதிலும் இள வயதில் மாதவிடாய் நின்று போகிற பெண்கள், மனரீதியாக பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். தான், பெண்மையையே இழந்து விட்ட  மாதிரி தாழ்வு மனப்பான்மைக்குத் தள்ளப்படுகிறவர்களும் உண்டு. ஸ்ட்ரெஸ் எனப்படுகிற மன அழுத்தத்திலிருந்து விடுபடக் கற்றுக் கொள்வதே  இவர்களுக்கான முதல் அட்வைஸ். மாதவிலக்கு சுழற்சியில் திடீரென மாற்றங்களை உணர்ந்தால் அலட்சியப்படுத்தாமல் மருத்துவரைப் பார்க்க  வேண்டும். எஃப்.எஸ்.ஹெச் மற்றும் எல்.ஹெச் என்கிற ஹார்மோன்களின் அளவு அதிகமாக இருக்கும்.

அதே மாதிரி ஏ.எம்.ஹெச் ஹார்மோனின் அளவு குறையும். கர்ப்பப் பை சுருங்க ஆரம்பிக்கும். ஒரு எளிமையான ரத்தப் பரிசோதனையின் மூலம்  ஹார்மோன்களின் ஏற்ற, இறக்கங்களைக் கண்டுபிடித்து, அது மெனோபாஸ் தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.  சரிவிகித உணவு,  போதுமான உறக்கம் மற்றும் ஓய்வு, கட்டாய உடற்பயிற்சி... இந்த மூன்றும் மன அழுத்தத்திலிருந்து விடுபட அடிப்படையான தேவைகள். உடல்  பருமன் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

12 மணி நேரம், 14 மணி நேரமெல்லாம் சர்வ சாதாரணமாக வேலை பார்க்கிற பெண்கள், அதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். யோகா, தியானம்,  சுவாசப் பயிற்சி மாதிரியான சில விஷயங்கள், மன அழுத்தத்தை விரட்டும். மாதவிலக்கு தள்ளிப் போவது, மேலே குறிப்பிட்ட அறிகுறிகளில்  எதையாவது உணர்வது போன்றவற்றை வைத்து, மெனோபாஸாக இருக்குமோ என்கிற பயத்தில் இவற்றையெல்லாம் செய்யாமல், இள வயதிலிருந்தே  மன அழுத்தம் பாதிக்காத வாழ்க்கை முறைக்குப் பழகினால், பிரச்னைகள் வருவதில்லை...’’ என்கிறார் டாக்டர் ஜெயராணி.

அதென்ன பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம்

It Ovary Syndrome palicistik

மகளுக்கு 16 வயது. பூப்படைந்து 3 ஆண்டுகளாகியும் பீரியட்ஸ் ரெகுலராக வருவதில்லை. இது தீர வழியுண்டா?

தீர்வு சொல்கிறார் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமமூர்த்தி...


பருமன் அதிகம் இருந்தாலும் இந்தப் பிரச்னை வர வாய்ப்பு அதிகம். அடுத்து, சினைப்பையில் அதிகப்படி கொழுப்புகள் அடைத்துக் கொள்வதால்  கருமுட்டை வெளியே வராமல் இருக்கும். இதனால் பீரியட்ஸ் ஏற்படுவது தடைபடும். எனவே, ‘பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம்’  என்ற இப்பிரச்னை  இருக்கிறதா என பரிசோதியுங்கள்.

தைராய்டு, ரத்தசோகை இருந்தாலும் பீரியட்ஸ் பிரச்னை வரும். ஜங்க் ஃபுட் தவிர்த்து காய்கறி, கீரைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். உடற்பயிற்சி,  யோகா மூலமும் இதற்கு தீர்வு காணலாம். மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெறாமல் எந்த மருந்தையும் கொடுக்க வேண்டாம்.

பெண்களின் பெரும்பாடு

பெண்கள் படும்பாட்டில் தலையானது மாதவிடாய் கோளாறுகள். ஆரோக்கியமான பெண்ணின் அடையாளம் ஒழுங்காக குறிப்பிட்ட நாட்களில் நிகழும் “மூன்று நாட்கள்” மாத விலக்கு சரிவர நிகழ வேண்டும். மருத்துவம் முன்னேறிய இந்த நாட்களிலும் ஒரு தற்காலத்திய நவீன பெண்கள் இந்த மாத சுழற்சி கோளாறுகளுக்கு, பழங்கால கிராமத்துப் பெண்களை விட அதிகம் ஆளாகிறார்கள். அந்த காலத்திய அமைதியான வாழ்க்கையும் இந்த கால பரபரப்பு வாழ்க்கையும் காரணமாகலாம்.
பல விதமாக சொல்லலாம்
மாதச் சுழற்சி சரியான நாள்களில் ஏற்படும். ஆனால் உதிரப்போக்கு அதிகமாக இருக்கும். இதை மெனோராகியா என்பார்கள். இது சராசரி உதிரப்போக்கை விட அதிகமாக போகிறது என்று எப்படி தெரிந்து கொள்வது நீங்கள் சாணிடரி பேடுகளை நாப்கின் பயன்படுத்துவராக இருந்தால் எவ்வப்போது மாற்றுகீர்கள், அடிக்கடி மாற்றும் படி நேர்கிறதா என்பதை கவனித்தாலே தெரிந்து விடும். இந்த உதிரப்போக்கு ஒரு வாரம் வரை இருந்தாலும் அணிந்த ஒரு மணி நேரத்துக்குள் நேப்கின் முழுவதும் ரத்தக் கசிவு இருந்தால் அபரிமித ரத்தப்போக்கு மெனோராகியா எனலாம்.
டைஸ்மெனோரியா
இது வலி, வேதனையுடன் கூடிய உதிரப்போக்கை குறிக்கும். முதல் கட்டத்தில் அடிவயிற்றில் இனந்தெரியாத வலி. இது மாதவிடாய் ஆரம்பிக்கும் முன் தோன்றலாம். இல்லை மாதவிடாயுடன் வரலாம். கூடவே தலைசுற்றல், வாந்தி, தலைவலி, மயக்கம், மலச்சிக்கல் இல்லை எதிர்மாறாக பேதி இவைகள் உண்டாகும். இதன் காரணம் சரியாக தெரியவில்லை. அதிகமான கர்பப்பை சுருங்கி விரிய காரணமான ஹார்மோன் சுரப்பினால் ஏற்படும் என்று கருதப்படுகிறது.
இரண்டாம் நிலையில் வயதானவர்களை பாதிக்கும். அடிவயிறு இறுக்கம், வலி, இடுப்பு, மூட்டுவலிகள், மாதவிடாய்க்கு 2-3 நாட்கள் முன்பே தோன்றும் 2 வாரங்கள் வரை கூட இந்த வலிகள் இருக்கும். காரணம் – இடுப்பு எலும்புகளின் நோய் என்டோமெட்ரியாசிஸ் கர்பப்பை, ஓவரீஸ் இவற்றின் திசுக்கள் வியாதிப்படுதல், கட்டிகள், கர்பப்பை சிதைவு போன்றவை. மாதவிடாய் கால விளைவுகள் இவைகளும் மாதவிடாய் காலங்களில் வேதனையை உண்டாக்கும்.
மாதவிலக்கு நார்மலாக வரும் சமயங்களில் வராமல் வேறு நாட்களில், அடிக்கடி, இடைவெளிகள் சரியாக இல்லாமல் ஏற்படும் உதிரப்போக்கை மெட்ரோராகியா என்பார்கள்.
மாதவிலக்கு 21 நாட்களுக்குள் ஏற்பட்டால் அது பாலி மெனோரியா எனப்படும்.
அசாதரமான, காரணங்களன்றி, உதிரப்போக்கு ஏற்படுவதை டையஸ்ஃபங்சனல் யுட்ரின் பிளிடிங் என்பார்கள். இதில் மேற்கண்ட நான்கு பிரிவுகளும் அடங்கும்.
முதலில் இந்த கோளாறுக்களான காரணங்களை பார்ப்போம்
ஹார்மோன்கள் கோளாறு மாதவிலக்கை கன்ட்ரோல் செய்யும் ஹார்மோன் மாறுபடுதல். பெண் ஹார்மோனான எஸ்ட்ரோஜன் அளவு அதிகரித்தால் உதிரப்போக்கு ஏற்படலாம். இந்த அதிக அளவான எஸ்ட்ரோஜனை சீர் செய்வது ப்ரோஜெஸ்ட்ரோன் ஹார்மோன். இந்த ஹார்மோன் கோளாறுகளால் பெண்ணின் சினை முட்டை வெளிவருவது நின்று விடும். இதனால் கர்பப் பையின் சுவர்கள் தடித்து விடும். கர்பப் பையின் சுவர்கள் என்டோமெட்ரியம் என்பார்கள். இந்த வீக்கத்தை என்டோமெட்ரியல் ஹைபர்பிளாசியா என்பார்கள். கர்பப்பை சுவர்களின் லைனிங் தொடர்ந்து, அடிக்கடி உதிர்ந்து விடும். இதனால் ரத்தப் போக்கு ஏற்படும்.
கர்பப்பையில் ஃபைராய்ட் வீக்கங்கள் இருந்தாலும் அதிக உதிர போக்கு நேரிட்டாலும். இந்த ஃபைராய்டுகள் நார்களினாலும், தசையினாலும் ஆனவை. முக்கால்வாசி உதிரப்போக்கு கோளாறுகளுக்கு பைப்ராய்ட் தான் காரணம். இதில் ஏற்படும் புதிய சதை வளர்ச்சி புற்று நோயில்லாத வீக்கம். இந்த பைப்ராய்ட் கர்பப் பையில் உண்டாகும் காரணங்களை குறிப்பிட்டு சொல்ல முடியாது. ஈஸ்ட்ரோஜன் இந்த தசை நார்கட்டிகளை ஊக்குவிக்குகிறது. பெண்களின் கர்ப்ப காலத்தில் பெரிதாகி, மெனோபாஸ் வந்தவுடன் சுருங்கி விடும். இலை சின்னதாகவும் இருக்கும், பெரியதாகவும் மாறும். கர்பப்பையில் சுவற்றில் குடியிருக்கும் பைப்ராய்ட் ஒன்றுக்கு மேலும் இருக்கலாம். இவைகளிருந்தால் உதிரப்போக்கை உண்டாக்கும். மலக்குடலை அழுத்தி வேதனையை உண்டாக்கும். பெரிய கட்டிகள், வலி, அழுத்தம் உண்டாகலாம். பைப்ராய்ட்ஸ் மூத்திரப்பையை அழுத்தி, அடிக்கடி சிறுநீர் கழிக்க செய்யும்.
கர்பப்பை கழுத்தில் பாலிப்ஸ் சீதமும் சளியும் உள்ள இடத்திலிருந்து தோன்றும் வளர்ச்சி. இவை சிறியவை – கர்பப்பையின் கழுத்தில் ஏற்படும் இந்த பாலிப்ஸ் ஏன் ஏற்படுகிறது என்ற காரணம் தெரியவில்லை. தொற்றுநோய் கர்பப்பையில் உள்ள ரத்த நாளங்கள் அடைபடுதல், எஸ்ட்ரோஜன் ஹார்மோன் கோளாறு இவை காரணமாக இருக்கலாம். இந்த கட்டினை, எளிமையான அறுவை சிகிச்சை மற்றும் மருந்துகள் மூலம் நீக்கலாம்.
கர்பப்பை சுவற்றில் பாலிப்ஸ் கர்பப்பையின் சுவற்றில் உள்ள ஈரமான, சளியுள்ள லைனிங். இந்த லைனிங்கிலிருந்து நீட்டிக் கொண்டு வரும் பாலிப்ஸ் உண்டாக ஹார்மோன் கோளாறுகளே காரணமாக சொல்லலாம்.
இடுப்பெலும்பு கட்டில் தோன்றும் தொற்றுநோய்கள் அதிக ரத்தப்போக்கை உண்டாக்கலாம். கர்பப்பையின் கழுத்தையும் பாதிக்கலாம். இந்த இடுப்பு எலும்பு தொற்று, கர்பப்பை கழுத்து, கர்பப்பை, ஃபலோப்பியன் குழாய்கள் இவைகளையும் பாதிக்கும்.
கர்பப்பை கழுத்தில் உண்டாகும் புற்றுநோய், கர்பப்பை அல்லது அதன் சுவர்களில் உண்டாகும் புற்றுநோய்.
குடும்பக் கட்டுப்பாட்டுக்காக பயன்படுத்தப்படும்.லூப் போன்றவை.
சில ரத்தக் கோளாறுகள் ரத்தப்போக்கை நிறுத்த முடியாமல் போதல்.
ஆயுர்வேத சிகிச்சை
பெண்களின் மாதவிலக்கு சுழற்சி சிக்கலானது. ஆயுர்வேதத்தில் ரத்த பிரதார என்று அதிக உதிரப்போக்கு குறிப்பிடப்படுகிறது. நோயாளியின் ‘ப்ரக்ருதி’ முதலில் கண்டுபிடிக்கப்படும். அவர்களின் தற்போதைய ஆரோக்கிய நிலை பரிசோதிக்கப்படும். பிறகு பஞ்ச கர்மா சிகிச்சை ஆரம்பிக்கப்படும். உடலிலிருக்கும் நச்சுப்பொருட்களை களைந்து எடுக்கப்படும்.

45 வயதை தொட்டாச்சா இதெல்லாம் தேவை

All this requires 45 years of age touch
பொதுவாக வயது அதிகமாக அதிகமாக உடலில் பிரச்னைகள் அதிகரிக்கும். இதற்கு காரணம், உடலில் உள்ள சத்துக்களின் எண்ணிக்கை குறைவது  தான். குறிப்பாக பெண்கள் வயது அதிகரிக்கும் போது, ஊட்டச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதிலும் இறுதி மாதவிடாய்  நெருங்க நெருங்க உடலின் செயல்பாடுகள் குறைவதோடு, ஊட்டச்சத்துக்களும் குறைய ஆரம்பித்து, மூட்டு வலி, கால் வலி மற்றும் பல உடல்நல  பிரச்னைகளை சந்திப்பார்கள். ஆகவே இத்தகைய பிரச்னைகளை எதிர்கொள்ள சரியான வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.  கீழே குறிப்பிடப்பட்டுள்ள வைட்டமின்களை 45 வயதிற்கு மேல் தினமும் அல்லது வாரத்திற்கு ஒருமுறையாவது தவறாமல் சேர்த்துக் கொள்ள  வேண்டும்.

45 வயதை தொடும் பெண்களுக்கு வைட்டமின் பி12 மிகவும் இன்றியமையாத வைட்டமின்களில் ஒன்றாகும். அதிலும் சர்ஜரி நடந்திருந்த அல்லது  இதயத்தில் பிரச்னை உள்ள பெண்களுக்கு, இச்சத்து மிகவும் முக்கியமானது. ஆகவே வைட்டமின் பி12 அதிகம் நிறைந்த இறைச்சி, கானாங்கெளுத்தி  மீன் வகைகள் மற்றும் முட்டை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வைட்டமின் பி மற்றொரு அவசியமான வைட்டமினாகும். குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்களுக்கு முக்கியமான வைட்டமின்களாகும். ஏனெனில்  இவை தான் ஒரு நாளைக்கு வேண்டிய எனர்ஜியைக் கொடுக்கிறது. எனவே பசலைக்கீரை, சால்மன், உருளைக்கிழங்கு மற்றும் பருப்பு வகைகளை  தவறாமல் எடுத்துக் கொண்டால், இச்சத்துக்களைப் பெறலாம்.

தினமும் காலையில் 15 நிமிடம் சூரிய ஒளி உடலில் படுமாறு இருந்தால், அது உடலில் ஏற்படும் சோர்வை நீக்கிவிடும். அதுமட்டுமல்லாமல்,  சால்மன் அல்லது பாலை அதிகம் குடித்தால், அது உடலில் வைட்டமின் டியின் அளவை அதிகரிக்கும். வைட்டமின் ஞி 10 45 வயதான பெண்கள்  அவசியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இத்தகைய வைட்டமினானது மீன், கல்லீரல், நவதானியங்கள் போன்றவற்றில் அதிகம் இருக்கும்.

இறுதி மாதவிடாயினால் பெண்கள் அதிகப்படியான இரும்புச்சத்துக்களை இழக்க நேரிடும். இதனால் பல பெண்கள் ரத்தசோகைக்கு உள்ளாவார்கள்.  எனவே இந்த நிலையை தவிர்க்க, பெண்கள் கீரைகளையும், ப்ராக்கோலியையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 45 வயதைக் கடக்கும் போது  பெண்கள், வைட்டமின் ஏ நிறைந்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

இதனால் உடலில் நோயெதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும். இத்தகைய வைட்டமின் ஏ சத்தானது சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கேரட் போன்றவற்றில்  அதிகம் இருக்கும். அவகேடோ மற்றும் வாழைப்பழத்தில் மக்னீசியம் சத்து அதிகம் உள்ளது. இந்த சத்துள்ள உணவை உட்கொண்டால், நரம்பு  மண்டலமானது ஆரோக்கியமாக இருக்கும்.

அந்த மூன்று நாட்கள்

The three days
‘பெண்களுக்கு உண்டாகிற ஹார்மோன் கோளாறுகளுக்கும், அவை உண்டாக்கும் பிரச்னைகளுக்கும் பஞ்சமே இல்லை. அவற்றில் முக்கியமானது  ‘டியுபி’ எனப்படுகிற Dysfunctional uterine bleeding. காரணமே இல்லாமல் மாதவிலக்கின் போது ரத்தப் போக்கு அதிகமிருப்பவர்களுக்கு இந்தப்  பிரச்னை பின்னணியாக இருக்கலாம்...’’ என்கிற மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ், இதைப் பற்றி விரிவாகப் பேசுகிறார்.

‘‘மாதவிலக்கான முதல் 2 வாரங்கள்ல பெண்களோட உடம்புல ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரக்கும். 2 வாரங்கள் கழிச்சுதான் கருமுட்டை  வெளியாகும். அதுக்குப் பிறகுதான் பிராஜெஸ்ட்ரோன் ஹார்மோன் சுரக்கும். இதுதான் முறை. சிலருக்கு கரு முட்டை உற்பத்தியே இருக்காது.  ஈஸ்ட்ரோஜென் சுரப்பு அதிகமாகி, பிராஜெஸ்ட்ரோன் சுரப்பே இல்லாம, மாதவிலக்கு தள்ளிப் போகும். எதிர்பாராத நேரத்துல ரத்தப் போக்கு  அதிகமாகும். இவங்களுக்கு பிராஜெஸ்ட்ரோனுக்கான மருந்துகள் கொடுத்துதான் இதை சரியாக்கணும்.

அடுத்து தைராய்டு பிரச்னை இருக்கிற வங்களுக்கும், அதிக ரத்தப் போக்கு இருக்கும். அதை சரிபார்க்க வேண்டியது அவசியம். மூளைலேர்ந்து சுரக்கக்  கூடிய ‘புரோலேக்டின்’ ஹார்மோன் அதிகமானாலும், ரத்தப் போக்கு அதிகமாகும். சோதனையின் மூலம், காரணத்தைக் கண்டுபிடிச்சு, சிகிச்சை  எடுத்துக்கணும். கருத்தடை மாத்திரைகளுக்கு, இந்த ஈஸ்ட்ரோஜென், பிராஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களை சமன்படுத்தற குணமுண்டு.

கல்யாணமாகாத பெண்களுக்குக் கூட இந்த மாத்திரைகளை 3 முதல் 6 வாரங்களுக்குக் கொடுத்தா, ஹார்மோன் பிரச்னையை சரியாக்கி, ரத்தப்  போக்கு கட்டுப்படும். மாத்திரைகளுக்கும் கட்டுப்படாத பட்சத்துல மாதம் ஒரு ஊசி மூலமா மருந்து செலுத்த வேண்டியிருக்கும். கல்யாணமாகி, குழந்தை பெற்ற பெண்களுக்கு இந்தப் பிரச்னை இருந்தா, ‘மெரீனா’ என்ற கருவியை கர்ப்பப் பைக்குள்ள  செலுத்தலாம். இது காப்பர் டி மாதிரியான சின்ன கருவி.

சரியான அளவுல ஹார்மோன் சுரக்க இது உதவி செய்யும். 5 வருஷங்களுக்குப் பிறகு அதை எடுத்துட்டு, தேவைப்பட்டா புதுசா பொருத்திக்கலாம்.  கல்யாணமாகாத மற்றும் குழந்தை பெறாத பெண்களுக்கு இது ஏற்றதில்லை. இது தவிர ‘பலூன் தெர்மல் அப்லேஷன்’னு ஒரு சிகிச்சையும் இருக்கு.  கர்ப்பப் பைக்குள்ள பலூன் மாதிரியான ஒன்றை வச்சு, வெந்நீரை செலுத்துவோம். கர்ப்பப் பையின் உள்புறமுள்ள லேயர்களை அது சுருக்கிடும். அதன்  விளைவா அதிகப்படியான ரத்தப் போக்கு கட்டுப்படும்.

அடுத்து ‘ஹிஸ்டெரஸ்கோபிக் என்டோமெட்ரியம்...’ இந்த சிகிச்சைல கர்ப்பப் பையின் உள்பக்கத்துல உள்ள அழுத்தமான, கெட்டியான ஜவ்வை,  பொசுக்கி, அகற்றுவோம். கர்ப்பப் பையை எடுக்காமலே இந்த சிகிச்சை சாத்தியம். மேல சொன்ன அத்தனை சிகிச்சைகளுக்குமே கேட்காதப்ப, கடைசி  கட்டமாதான் கர்ப்பப் பையை அகற்றுவதைப் பத்தி யோசிக்கணும்.

அதனால அளவுக்கதிக ரத்தப் போக்கு உள்ளவங்க, அதெல்லாம் அந்தந்த வயதில் அப்படித்தான் இருக்கும் என்கிற அலட்சியத்துல,  பரிசோதனையையோ, சிகிச்சையையோ தவிர்க்க வேண்டாம். அதன் பின்னணில உள்ள காரணம் தெரிஞ்சு, சரியான சிகிச்சையை எடுத்துக்கிட்டா, அந்த  3 நாட்கள், அவதியில்லாமக் கழியும்...’’ என்கிறார் மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ்.

சினைப்பை நீர்க்கட்டியால் பாதிப்பு

Pregnant affect cyst
இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பல நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். அதிலும் சினைப்பை நீர்க்கட்டி நோய் மூலம் பெண்கள் பாதிக்கப்படுவது  வாடிக்கையாகிவிட்டது. இந்த நோய் உருவாவதற்கான காரணங்கள் பற்றியும் அதற்கான தீர்வு பற்றியும் விளக்கமளிக்கிறார் கோவை சுந்தராபுரம்  ஸ்ரீரேஷ்மிகா மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் கே.சகுந்தலா.

ஆன்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக சுரத்தல், இன்சுலின் ஹார்மோன் இரத்தத்தில் அதிக அளவில் இருப்பது, அதிக உடல் எடை, சினைப்பையில்  அதிக அளவில் கருமுட்டை உண்டாவது (10-12) ஆகியவைகளால் சினைப்பை நீர்க்கட்டி உருவாகிறது. சினைப்பை கட்டிகள் இருப்பது தெரிந்தால்  அதை முடிந்தவரை அறுவை சிகிச்சையால் அகற்றாமல் சினைப்பையை தொந்தரவு செய்யாமல் குணப்படுத்துவது தான் பாதுகாப்பானது. அடிக்கடி  எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் எடுக்கும் பெண்களுக்கு ரேடியேஷனால் சினைப்பையில் முட்டைகள் அழிய வாய்ப்புகள் அதிகம்.

இதனால், மாதவிடாய் நீண்ட நாள் ஆகாமல் இருப்பது மற்றும் அதிக அளவில் உதிரப்போக்கு ஏற்படுவது, குழந்தையின்மை, முகம் மற்றும் உடலில்  அதிகமாக முடி வளரும். குழந்தை பெற்று கொள்ளும் வயதை தள்ளி போடுவது, சினைப்பையில் உள்ள முட்டைகளின் எண்ணிக்கை குறைவு  ஆகியவை குழந்தையின்மைக்கு முக்கிய காரணம். இதற்கு, ரத்த பரிசோதனைகள் (ஹார்மோன் டெஸ்ட்), அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், லேப்ராஸ்கோபி  செய்து பார்க்கலாம்.

சினைக்குழாய்களின் செயல்பாடு நன்றாக உள்ளதா என்பதை சலைன் சோனோகிராபி சோதனை மூலம் சலைன் வாட்டரை கர்ப்பப் பையினுள்  செலுத்தி அது சினைக் குழாய்களில் சரியாகப் போகிறதா என்பதை ஸ்கேன் மூலம் கண்டறியலாம். எக்ஸ்ரே முறையில் கர்ப்பப்பையினுள் 8 முதல்  10 மி.லி அளவுள்ள டை போன்ற திரவத்தை செலுத்தி கர்ப்பப்பையின் உள் சுவர், கருக்குழாய் சுவர்கள் போன்றவற்றை ஆராயலாம். மாதவிலக்கு  வந்த 8 முதல் 10ம் நாள் இதை செய்யலாம். மயக்கமோ, மருத்துவமனையில் இருக்க வேண்டிய தேவையோ இல்லை.

முதல் இரண்டு முறையை விட லேப்ராஸ்கோபி முறையில் குழாய்களின் அமைப்பு, செயல்பாடு, சினைக்குழாய்களை ஒட்டியுள்ள சுவர்களின்  அமைப்பு, குழாய்களில் உள்ள முடிச்சுகள் அனைத்தையும் இதன் மூலம் அறியலாம். அதிக எடை உள்ளவர்களுக்கு எடை குறைப்பு பயிற்சிகள், எடை  குறைப்பு உணவு முறைகள், மருத்துவ சிகிச்சைகள்-மருந்துகள் மூலம் குணப்படுத்துவது, அறுவை சிகிச்சைகள்-லேப்ராஸ்கோபி மூலம் நீரை எடுப்பது.  கருக்குழாய்களுக்குள் சீலியா என்கிற ரோமம் போன்ற மெலிதான கற்றைகள் இருக்கும்.

கருமுட்டையானது இந்த சீலியா மூலம் தான் நகரும். எனவே சோதனையால் அதை கண்டுபிடித்து பழுதடைந்த சீலியா மற்றும் கருக்குழாய்களை  கழுவி சுத்தப்படுத்தினால் அடுத்தடுத்த மாதவிலக்கு சுழற்சிகளில் பிரச்னை சரியாகி விரைவில் கருத்தரிப்பார்கள்.

ஸ்ட்ரைக் செய்யும் சினைப்பை


சினைமுட்டைகளை பத்திரப்படுத்தி மாதந்தோறும் வெளியிடும் முக்கியமான வேலையைச் செய்கிற சினைப்பை மெனோபாஸூக்கு  பிறகே  ஓவ்வெடுக்க ஆரம்பிக்கும். அரிதாக சில பெண்களுக்கு பிறவியிலேயோ அல்லது இளவயதிலேயோ சினைப்பை வேலை நிறுத்தம் செய்யலாம்.  ப்ரீமெச்சூர் ஓவரியன் ஃபெயிலியர் எனப்படுகிற இது முறையற்ற மாதவிலக்கு, மலட்டுத் தன்மை போன்றவற்றை உண்டாக்குவதோடு மெனோபாஸ்  வந்துவிட்ட மாதிரியான அறிகுறிகளையும் காட்டுமாம்.

ப்ரீமெச்சூர் ஓவரியன் ஃபெயிலியர் ஏற்படக் காரணங்கள் அது உண்டாக்கும் பிரச்சனைகள் தீர்வுகள் என எல்லாவற்றையும் வி ளக்குகிறார் மகப்பேறு  மருத்துவர் சந்திரலேகா. குறிப்பிட்ட வயசுக்கு முன்னாடியே சினைப்பை தன் வேலையைச் செய்யறதை நிறுத்திக்கிற இந்தப் பிரச்சனைக்கு பரம்பரைத்  தன்மை காரணமா இருக்கலாம். எதிர்பு சக்தி இல்லாத சிலருக்கு அவங்களோட உடம்புக்குள்ள இருக்கிற திசுக்களை அவங்க உடம்பே அட்டாக்  செய்யறதும் காரணமாகலாம்..

கர்ப்பப்பை அறுவை சிகிச்சை இடு ப்பெலும்பு தொடர்பான அறுவை சிகிச்சை புற்றுநோய்க்காக எடுத்துக்கிற கீமோதெரபி, ரேடியேஷனோட  விளைவாலயும்  சினைப்பையோட இயக்கம் நின்று போகலாம். மாதவிலக்கு மாசம் தவறி வர்றது அல்லது நின்று போவது உடம்பெல்லாம் சூடாகி   வியர்த்துக்கொட்டறது எரிச்சல், மனஉளைச்சல், தாம்பத்ய உறவில் நாட்டம் இல்லாதது சரியான தூக்கமில்லாததுனு இந்தப்  பிரச்சனையோட  அறிகுறிகள் அத்தனையும் கிட்டத்தட்ட மொனோபாஸ் அறிகுறிகளைப் போலவே இருக்கும்.

மாதவிலக்கு சுழற்சி  மாறினாலோ நின்னுட்டாலோ மருத்துவரை அணுகணும். ரத்தத்துள உள்ள எஃப். எஸ்.ஹெச் அளவு சரிபார்க்கப்படும்.   எஃப்.எஸ்.ஹெச் தான் மாசந்தோறும் சினைமுட்டைகளை வெளியேத்தச் சொல்லி உடம்புக்கு சிக்னல் தரும்.ரத்தத்துள அதோட அ ளவு  மாறியிருக்கிறதை வச்சு ப்ரீமெச்சூரியன் ஓவரியன் ஃபெயிலியர் இருக்கானு கண்டு பிடிக்கலாம். தவிர ரத்தத்துள உள்ள ஈஸ் ட்ரோஜன் ரொம்ப  குறைஞ்சு, எஃப்.எஸ்.ஹெச் அதிகமாறதும் இந்தப்பிரச்சனைக்கு காரணம்.

பெரும்பாலும் மலட்டுத்தன்மைன்னான  சிகிச்சைகளை ஆரம்பிக்கிறப்பதான் பல பெண்களுக்கும் இந்த பிரச்சனை இருக்கிறதே தெரிய வரும்.  ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட்  தெரபி மூலமா இந்தப் பிரச்சனையோட பாதிப்புகள்லேர்ந்து மீளலாம். அது எலும்புகளோட ஆரோக்கியத்தையும்  காப்பாத்தும். கரு த்தரித்தலை  பாதிக்கிறதால இள வயது பெண்களுக்குத்தான் இது கவலை தரும் பிரச்சனை. அப்படிப்பட்டவங்க கருமுட்டை தானம்  மூலமா குழந்தை பெறலாம்.

ப்ரீமெச்சூரியன் ஓவரியன் ஃபெயிலியர் உள்ள பெண்களுக்கு எலும்புகள் மெலியலாம். நீரிழிவும், இதய நோய்களும் பாதிக்கலாம்.  சரியான நேரத்துக்கு  சிகிச்சை, கொழுப்பில்லாத   சரிவிகித உணவு, உடற்பயிற்சி டாக்டரோட அறிவுரைப்படி கால்சியம் மற்றும்  வைட்டமின் டி எடுத்துக்கிறதெல்லாம்  அவங்களோட ஆரோக்கியத்துக்கு உதவும். 

இளவயது மெனோபாஸ்

Youngest of menopause
பெண்ணாக பிறந்த ஒவ்வொருவரும் மாதவிலக்கையும் அதன் இறுதிக்கட்டமான மெனோபாஸையும் சந்தித்தே தீர வேண்டும். மாதவிலக்கு நிற்க  சராசரி வயது 52. இதற்கு மேல் நிற்காவிட்டால் அசாதாரணம். அதே மாதிரி 40 வயதுக்குள்ளேயே மாதவிலக்கு நிற்பது நல்ல அறிகுறியல்ல.  இளவயது மெனோபாஸூக்கான காரணங்கள், சிகிச்சைகள், பற்றி விரிவாக பேசுகிறார் மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ்.

ஒரு பெண் அம்மாவோட வயித்துல உருவாகிறப்பவே, அதோட சினைப்பைல இத்தனை மில்லியன் முட்டைகள் இருக்கணுங்கிறது தீர்மானிக்கப்படும்.  அந்தக்குழந்தை வயதுக்கு வர்றப்ப லட்சக்கணக்குல உள்ள அந்த முட்டைகள், மாதவிலக்கு மூலமா மாசா மாசம் வெளியேறி குறைஞ்சுகிட்டே வரும்.  பிரசவத்தின் போது இன்னும் குறையும். இப்படி குறைஞ்சிக்கிட்டே வந்து, ஒரு கட்டத்துல முழுக்க முட்டைகளே இல்லாம போகிறப்ப மாதவிலக்கு  வராது. அதை தான் மெனோபாஸ்னு சொல்கிறோம்.

சிலருக்கு சராசரியை விட சீக்கிரமே, அதாவது 40 வயசுக்குள்ளேயே மெனோபாஸ் வரலாம். பரம்பரைத் தன்மை புற்றுநோய்க்காக எடுத்துக்கிற  கீமோதெரபியோட விளைவுனு இளவயசு மெனோபாஸூக்கான காரணங்கள் பல இருக்கிறது. இவை தவிர ப்ரீ மெச்சூர் ஓவரியன் ஃபெயிலியர்  பிரச்சனையாலையும் சீக்கிரமே மெனோபாஸ் வரலாம். அதாவது சினைப்பைல சுரக்கிற ஹாமோனுக்கு மூளையிலேர்ந்து சிக்னல் கிடைக்காவிட்டால்,  25 வயசுல கூட மெனோபாஸ் வரலாம்.

மாதவிலக்கு சுழற்சி சரியா இருக்கிறவங்களுக்கு (20 முதல் 25 நாட்கள்) மெனோபாஸ் சீக்கிரமே வரும் 2, 3 மாதத்துக்கு ஒரு முறை  வர்றவங்களுக்கு மாதவிலக்கு மூலமா இழக்கப்படற முட்டைகள் குறையறதால, மெனோபாஸூம் லேட் ஆகும். சீக்கிரமே வயசுக்கு வர்றவங்களுக்கு  மெனோபாஸ் சீக்கிரமாகவும், வயசு கடந்து வாற்வங்களுக்கு அது தாமதமாகவும் வரும்.

50வயசுல மெனோபாஸ் வர்றவங்களுக்கு சரியான கவனிப்பு அவசியம். அப்படியிருக்கிறப்ப இளவயசு மாதவிலக்கு நிற்கும் போது கூடுதல் அக்கறை  அவசியம். ஈஸ்ரோஜென் ஹார்மோன் இல்லாம, எலும்புகள் பாதிக்கப்படும். கால்சியம் சப்ளிமென்ட் எடுத்துக்க வேண்டியிருக்கும். பால், தயிர்னு உணவு  மூலமா கிடைக்கிற கால்சியம் மட்டும் போதாது. வைட்டமின் கூட கால்சியமும் சேர்த்து எடுத்துக்கணும்.

இல்லாட்டி எலும்புகள் பஞ்சு மாதிரி மாறி ஆஸ்டியோபொரோசிஸ் வரும். மெனோபாஸ்ல இதய ஆரோக்கியமும் பாதிக்கப்படுங்கிறதால அதுக்கான  பரிசோதனையும் அவசியம். இளவயசு மெனோபாஸை ஏதோ முறை தவறின மாதவிலக்குன்னு தப்பாக நினைத்து அலட்சியப்படுத்தாம சரியான  நேரத்துல மருத்துவ பரிசோதனையும் அவசியம் என வலியுறுத்துகிறார் மருத்துவர் மாலா ராஜ்..

மாதவிடாய் நிற்றல் (மெனோபாஸ்) - ஒவ்வொரு பெண்ணும் அறிந்திருக்க வேண்டிய பருவ உடல் மாற்றம்

மெனோபாஸ் எம்பது மாதவிடாய் நிறுத்தம் என பொருள்படும், பெண்ணாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும்; வயதுக்கு வரும்போதும் (பூப்பெய்துதல்), திருமணத்தின் போதும், பிரசவதின் போதும் உடல் உள், வெளி உறுப்புகளில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது போன்ற ஒரு பருவ உடல் மாற்றம் மெனோபாஸ் பருவ காலத்திலும் நிகழ்கின்றது. மெனோபாஸ் ஏற்படும் போது அவர்கள் பல உடல், மன வாதைகளுக்கு உள்படுகின்றார்கள்.

வயதிற்கு வரும் ஒரு பெண்ணில் (பூப்பெய்தும் போது) இனப்பெருக்க உறுப்புகள் விருத்தியடைவதோடு, அதற்கான ஹோமோன் சுரப்புகளும் உற்பத்தியாகின்றன, ஆனால் மெனோபாஸ் நிகழும் போது இனபெருக்க உறுப்புகள் செயல்லிழக்கப்படுவதோடு அதனோடு தொடர்புடைய ஹோமோன் சுரப்புகளும் நிறுத்தப் பெறுகின்றன. ஒரு பெண் வயதிற்கு வரும்போது மாதவிடாய் ஆரம்பிக்கின்றது. மெனோபாஸின்போது மாதாவிடாய் நிறுத்தம் பெறுகின்றது. பூப்பெய்திய காலம் முதல் மெனோபாஸ் ஆகும் வரையும் உள்ள காலமே பெண்களின் பொற்காலம் என்றும் கூறலாம்.

எனவே மெனோபாஸ் என்பது பூப்பெய்தல் போன்ற ஆனால், எதிர்மாறான ஒரு பருவ மாற்றம்மட்டும்தான். இதை எதிர் கொள்ள பயபட வேண்டியதில்லை. இது எல்லாப் பெண்களின் வாழ்க்கையிலும் கட்டாயம் ஏற்படக் கூடியது. இந்தச் சமயங்களில் எதிலெதில் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறுவதே இக்கட்டுரை.

பெண்களின் மெனோபாஸ் நாட்கள்
நம்மில் பல பெண்களுக்கு, ‘மெனோபாஸ்’ என்றால் ‘மாதவிடாய் நின்றுவிடும்’ என்றுதான் மேலோட்டமாகத் தெரியுமே தவிர, அந்த வயதில் தங்களுடைய உடலில் என்னென்ன மாறுதல்கள் நடக்கிறது.... ஏன் மாதவிடாய் நிற்கிறது... அதனால் எந்தெந்த விஜயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்ற விவரங்கள் பெரும்பாலும் தெரிவதில்லை. அதே போல ‘மெனோபாஸ்’ என்றாலே, வியாதிகள் வரும் நேரம் என்றும் சிலர் பயந்து போவதுண்டு. இந்த பயங்களும் தேவையில்லை.

மெனோபாஸ் என்றால் என்ன?
நாற்பத்தைந்து வயதுக்கு மேல், பெண்ணின் ஓவரியின் (சூலகத்தின்) செயல்பாடு குறைந்து, பீரியட்ஸ் முறையற்றதாகி, கடைசியாக சுமார் ஐம்பது வயதில் பீரியட்ஸ் சுத்தமாக நின்று விடுவதற்குப் பெயர்தான் மெனோபாஸ். அதாவது மாதவிடாய் நின்று விடும் நிலைக்குப் பெயர்தான் மெனோபாஸ்!

மெனோபாஸ் ஏற்பட்டதற்குப் பிறகு பெண்களால் கருத்தரிக்க முடியுமா?
மெனோபாஸிற்குப் பிறகு பெண்களால் கருத்தரிக்க முடியாது. ஏனென்றால் கருத்தரிக்கத் தேவையான கரு முட்டையின் உற்பத்தி குன்றிவிடும்.

எந்த வயதில் மெனோபாஸ் வரலாம்?
சாதாரணமாக ஐம்பது வயதைக் கடந்தாலே மெனோபாஸ் வந்துவிடும். சிலருக்கு முப்பத்தைந்து வயதுக்கு முன்னாலும்கூட மெனோபாஸ் வரலாம். அதற்கு ப்ரீமெச்சூர் மெனோபாஸ் (Premature Meno Pause) என்று பெயர்.

என்னென்ன காரணங்களால் ப்ரீமெச்சூர் மெனோபாஸ் வருகிறது?
ஓவரியில் (சூலகத்தின்) ஏதேனும் கட்டி இருந்து, ஓவரியை ரிமூவ் பண்ணியிருந்தாலோ, கீமோ தெரபி, ரேடியோ தெரபி போன்ற ட்ரீட்மென்ட் எடுத்தாலோ, இல்லையென்றால் வைரஸ் இன்ஃபெக்ஷனாலோ, ப்ரீமெச்சூர் மெனோபாஸ் வரலாம்.

ஒரு பெண் மெனோபாஸ் ஸ்டேஜை நோக்கிப் போகும்போது அவளுக்கு என்னென்ன அசௌகர்யங்கள் ஏற்படும்?
1. அதிக வியர்வை (ஹாட் ஃப்ளஷ்):
ஏ.ஸி.யில் இருக்கும்போதும் நடுத்தர வயதுப் பெண்களுக்கு வேர்த்துக் கொட்டும். இதை ஹாட் ஃப்ளஷ் என்போம்! மெனோபாஸ் அவர்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதன் அறிகுறியே இந்த வியர்வை எல்லாம்... நம் பாட்டி காலத்திலேயே நாற்பதைக் கடந்த பெண்களுக்கும் கூட இப்படித்தான் வியர்த்துக் கொட்டியிருக்கும்... இதில் சங்கடப்பட என்ன இருக்கிறது என்கிறீர்களா!

பாட்டி காலத்தில், பெண்கள் வீட்டு வேலைகளை முடித்து விட்டு, காற்றோட்டமாகத் திண்ணையில் அமர்வார்கள். அவர்களுக்கு, இது ஒரு பெரிய விஷயமாக இருக்காது! ஆனால் நாற்பதைக் கடந்த இன்றைய பல பெண்கள், அலுவலகத்தில் உயர்ந்த பதவியில் இருக்கிறார்கள். அவர்களுக்கு வியர்த்துக் கொட்டினால் அத்தனை நன்றாக இருக்காது. ஆனால் இது போன்ற அசௌகர்யங்களே, மனதளவில் அவர்களுக்குப் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. அதனால் அதிக வியர்வையால் பாதிக்கப்படும் பெண்கள் சிகிச்சைகூட எடுத்துக் கொள்ளலாம்.

2. இரவு நேர படபடப்பு (நைட் ஸ்வெட்ஸ்):
இரவில் திடீரென வியர்த்துக் கொட்டும். மிகவும் படபடப்போடு காணப் படுவார்கள். இதனால் அமைதியான தூக்கம் போய், ஒரு வித சோர்வுக்கு ஆளாவார்கள்.

3. அடிக்கடி மாறும் மூட் (மூட் ஸ்விங்ஸ்):
அடிக்கடி கோபம், எரிச்சல், அழுகை, விரக்தி என்று எல்லா உணர்ச்சிகளும் மாறி மாறி வரும்.

4. வெஜைனா (பெண் உறுப்பு) உலர்ந்து போதல்:
ஈஸ்ட்ரஜன் ஹார்மோன் குறைவால், வெஜைனாவின் பாதையை வழுவழுப்பாக வைத்திருக்கும் சுரப்புகள் குறைய ஆரம்பிக்கும். அதனால் (பெண் உறுப்பு) உலர்ந்து போய், தாம்பத்திய உறவின் போது அசௌகர்யமும், வலியும் உண்டாகலாம். தவிர, வெஜைனா பாதையில் வழுவழுப்பு ஏற்படுத்தும் இந்த திரவம்தான், அந்தப் பகுதியின் மென்மையான திசுக்களில், இன்ஃபெக்ஷன் ஏற்படாமல் தடுக்கிறது. ஈஸ்ட்ரஜன் குறைவால் இந்த சுரப்பும் குறையும் போது அங்கே இன்ஃபெக்ஷன் ஏற்பட ஏதுவாகிறது.

மெனோபாஸிற்குப் பிறகு வரும் நீண்ட கால விளைவுகள் என்னென்ன?
பல பெண்களுக்கு எலும்புகள் தேய்ந்து போகலாம்.. இதற்கு, ‘போஸ்ட் மெனோபாசுவல் ஆஸ்டியோ போரோஸிஸ்’ என்று பெயர்.

உங்களுக்கு ஒன்று தெரியுமா? மெனோபாஸிற்குப் பிறகு, பெண்களின் எலும்புகள் தேய்மானமடைந்து விடுவதால், லேசாக அவர்கள் தடுக்கி விழுந்தாலோ அல்லது குண்டுங் குழியுமான இடங்களில் ஆட்டோவில் சென்றாலோ கூட, எலும்புகள் உடைந்து ஃப்ராக்சர் ஏற்படும் அபாயம் இருக்கிறது.

அதனால் எலும்புத் தேய்மானத்திற்கு அவர்கள் ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டால், இத்தகைய பிரச்னைகளைத் தவிர்க்கலாம். (எலும்புகள் தேய்மானம் அடைவதற்கு முன்பே, டாக்டரின் ஆலோசனைப்படி கால்சியம் மாத்திரைகளையும் எடுத்துக்கொண்டால், இந்தப் பிரச்னைகளைத் தவிர்த்து விட முடியும்!...)

பெண்களின் பிரத்யேக ஹார்மோனான ஈஸ்ட்ரஜன், இருதய பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க ஒரு பாதுகாப்புக் கவசம் போல் செயல்பட்டு வந்தது. மெனோபாசுக்குப் பிறகு ஈஸ்ட்ரஜன் சுரப்பு நின்று விடுவதால், இதயம் மற்றும் இரத்தக் குழாய்களில் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மெனோபாஸ் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளும் ஏற்படலாம். கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்!

மெனோபாஸ் – மாதவிடாய் மறையும் காலம்
பெண்களுக்கு பொதுவாக 45 லிருந்து 55 வயதுக்குள் ஒவ்வொரு மாதமும் ஏற்படும் முட்டை உற்பத்தி குறைந்து மாதவிடாய் வருவது நின்று விடுகிறது. இதனையே மெனோபாஸ் எனவும் இறுதி மாதவிடாய் நிறுத்தம் எனவும் கூறுகின்றோம். இது பெரும்பாலான பெண்களுக்கு இயல்பாக தெரியாமலேயே எந்த தொந்தரவும் இல்லாமல் ஏற்படுகின்றது. மாதவிடாய் நிரந்தரமாக நின்ற பிறகு பெண்களுக்கு குழந்தை இனி பிறக்காது.

மாதவிடாய் நிரந்தரமாக நிற்பதை பல பெண்மணிகள் அதுவும் வேலைக்கு செல்பவர்கள் விரும்பி வரவேற்பார்கள். இந்தநிலையால் மாதாந்திர விலக்கு தொல்லை மற்றும் எதிர்பாராமல் கர்ப்பம் ஏற்படும் பயத்திலிருந்து விடுதலை கிடைக்கிறது. சில பெண்களுக்கு நமக்கு வயதாகி விட்டதே என்ற உணர்வு வரலாம்.

சுமார் 30 சதவிகித பெண்களுக்கு பல தொல்லைகளை தரலாம். மருத்துவம் மிகவும் முன்னேறிய இந்த காலத்தில் பெண்கள் விமீஸீஷீ-றிணீusமீ பற்றி தெரிந்து வைத்திருப்பது நல்லது.

மெனோபாஸ் தரும் தொல்லைகள்
• திடீரென சூடாக உணர்வது

• திடீரென இரவில் வியர்ப்பது

• யோனி உலர்ந்து காணப்படுவது

• தேவையற்ற ரோமங்கள் வளர்வது (குறிப்பாக முகத்தில்)

• சருமம் உலர்ந்து காணப்படுவது

• பின்னர் எலும்புகள் வலுவிழந்து எளிதாக உடையும் தன்மையை அடைவது

• இரத்த நாளங்கள் குறுகி விடுவது.

இத்தகைய பாதிப்புகள் வராமல் தவிர்ப்பதற்கும் வந்த பிரச்சனைகள் குறைவாக ஆகுவதற்கும் அதிக பால் அருந்துவது மிக மிக அவசியம் பாலில் அதிக கால்ஷியம் மற்றும் வைட்டமின் ஏ சத்து உள்ளதால் மாதவிடாய் இறுதியாக நிற்கும் சமையத்தில் ஏற்படக்கூடிய கால்ஷியம் இழப்பை ஈடு செய்கின்றது.

உடற்பயிற்சி மேற்கொள்வது நிலைமை மேலும் மோசமடைவதை தவிர்க்கும். மெல்லோட்டம், நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் பயிற்சி, போன்றவை நல்ல பலன் தரும்.

பெண்மணிகளின் இயல்பு பாலுணர்வு சம்மந்தப்பட்ட ஹார்மோன்கள் உடல் இயக்கத்துக்கும், குழந்தைகள் பெறுவதற்கும் தேவை. ளிஸ்ணீக்ஷீவீமீs (சினைப்பை) இந்த இரண்டு ஹார்மோன்களையும் உற்பத்தி செய்கிறது.

 ஏற்படும் சராசரி வயது 52. சாதாரணமாக 45 வயதிலிருந்த 55 வயதுக்குள் ஏற்படுகிறது. இதற்கு முன்பாகவே மாதவிடாய் நின்றுவிடலாம். ஒரு பெண்ணிற்கு 40 வயதுக்கு முன்பே மாதவிடாய் நின்றுவிட்டால் காரணங்கள். கதிரியக்கம், புற்றுநோய் மருந்துகளின் பக்கவிளைவுகளால், புகைபிடித்தல், சினைப்பைக்கு  ரத்தஒட்டம் சில அறுவை சிகிச்சைகளால் குறைந்துவிடுவது போன்றவை.

ஒவரிகளும், கருப்பப்பையும் அறுவை சிகிச்சையால் நீக்கப்பட்டிருந்தாலும் மாதவிடாய் நின்றுவிடும்.
மாதவிடாய் நிரந்தரமாக நிற்கபோகும் அறிகுறிகள்
பெண் ஹார்மோன்கள் உற்பத்தி குறைய, குறைய மாதவிடாய் சுழற்சி ஏறுமாறாகும். இந்த மாற்றங்கள், கடைசி மாதவிலக்கு வருவதற்கு 3-5 வருடங்களுக்கு முன்பிருந்தே, தோன்ற ஆரம்பிக்கும். இந்த காலகட்டத்தில் பல அறிகுறிகள் தோன்றும். இந்த மாறுதல்கள் பெண்ணிற்கு பெண் வித்யாசப்படும்.

பல பெண்களுக்கு எந்த மாற்றமும் தோன்றுவதில்லை. சில பெண்களுக்கு குறைவான மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஏனைய பெண்களுக்கு இந்த மாற்றங்கள் தீவிரமாக இருக்கும். இதனால் விமீஸீஷீஜீணீusமீ ஐப் பற்றிய அறியாமையால் பெண்களுக்கு பயமும் பீதியும் உண்டாகி பலதொல்லைகளை சந்திக்க நேரிடும். எனவே, இதைப்பற்றி அறிந்துக் கொண்டு, தவிர்க்க முடியாத இந்த இயற்கையின் நியதியுடன் வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.

அறிகுறிகள்
மெனோ-பாஸ்  நெருங்க நெருங்க உங்கள் மாதவிடாய் சுழற்சி ஒரே ரீதியாக இல்லாமல் மாறுபடும். வழக்கத்தைவிட குறைவாகவோ அல்லது அதிகமாகவோ உதிரபோக்கு உண்டாகலாம்.
• இரண்டு மாதவிலக்கின் நடுவில் உள்ள நாட்கள் குறையலாம், அல்லது கூடலாம்.

• இல்லாவிட்டால் வழக்கமான முறையான மாதவிடாய் சுழற்சி தொடர்ந்து, திடீரென்று எவ்வித அறிகுறியுமின்றி நின்று விடலாம்.

• வழக்கத்துக்கு மாறாக அதிக உதிரப்போக்கு ஏற்பட்டால் உங்கள் டாக்டரை நாடவும்.

உடல்ரீதியான மாற்றங்கள்
1. பிஷீt திறீணீsலீமீs எனப்படும் வேதனையான சூடு உணர்வுகள் உடம்பில் உண்டாகி, முகம் சிவந்து, முகத்தில் கழுத்தில் உடலில் வேர்வை ஏற்படும். படபடப்பு, தலை சுற்றல் இல்லை… மயக்கமே ஏற்படலாம். இந்த பிஷீt திறீணீsலீமீs சில நிமிடங்களில் மறையலாம், இல்லை மணிக்கணக்கில் இருந்து தொல்லை தரலாம். ஒன்றிரண்டு வருடங்கள் இல்லை 5 வருடங்கள் கூட இந்த பிஷீt திறீணீsலீமீs தொடரலாம். இதற்கு நிவாரணம் – பிஷீt திறீணீsலீமீs தாக்கும்போது ‘ஜில்’ என்று குளிர்ந்த பழரசங்கள் அல்லது தண்ணீரை பருகவும். இரவில் எப்போதும் கிடைக்குமாறு, படுக்கை அருகில் பழரசங்கள்/தண்ணீர் இவற்றை தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

2. இரவில் வியர்த்தல்
இரவில் அதிக வியர்வை ஏற்பட்டு உங்கள் தூக்கம் தடைப்படும்.
நடுஇரவில் நீங்கள் எழுந்து உடைகளை மாற்றவோ இல்லை ‘ஷவரில்’ குளிக்கவோ நேரிடும். இதனால் உங்கள் தூக்கமும் உங்கள் துணைவரின் தூக்கமும் கெடும். தளர்வான பருத்தி ஆடைகளை உபயோகியுங்கள்.

3. யோனி உலர்தல்
யோனியின் ‘சுவர்கள்’ தங்கள் மென்மையையும், ‘எலாஸ்டிக்’ (ணிறீணீstவீநீ) தன்மையையும் இழந்துவிடும். நமைச்சல், சொறி ஏற்பட்டு, யோனியில் தொற்றுநோய் உண்டாகலாம். சாதாரணமாக உடல் உறவின்போது, யோனியை ஈரமாக வைக்க சுரக்கும் திரவம், இந்த விமீஸீஷீஜீணீusமீ சமயத்தில், சரிவர சுரக்காது. இதனால் யோனி காய்ந்துவிடும் உடல்உறவு மகிழ்ச்சியை விட அதிக வேதனையை உண்டாக்கும். எனவே, உடலுறவை தவிர்க்கவும்.

4. இதர உடல் பாதிப்புகள்
தலைவலி, உடல்வலி, களைப்பு, வயிற்று தொல்லைகள், மார்பகம் மென்மையடைதல், தூக்கமின்மை, எடைகூடுதல் இவையெல்லாம் உண்டாகும். தோல்கள் சுருக்கமடைந்து ‘கோடுகள்’ (கீக்ஷீவீஸீளீறீமீs) உண்டாகும். தலை முடி அதன் பளபளப்பை இழக்கும். முகத்தில் உள்ள முடிகள் முரடாகி அதிகரிக்க கூடும். தலைமுடி உதிர்ந்து குறைந்து விடலாம். ஆஸ்டியோ – போரேசிஸ் (ளிstமீஷீ-றிஷீக்ஷீஷீsவீs) என்ற எலும்பு நோய் தோன்றலாம்.

மனோரீதியான பாதிப்புகள்
• உடல் தொல்லைகளால் எரிச்சலும் களைப்பும் ஏற்படும். அடிக்கடி எரிந்து விழுவீர்கள்.

• மறதி, அடிக்கடி மனநிலை (விஷீஷீபீ) மாறுவது, ஒரு விஷயத்தில் ஈடுபாடு (சிஷீஸீநீமீஸீtக்ஷீணீtவீஷீஸீ) இல்லாமல் போவது, இனந்தெரியாத பலஉணர்வுகள் காரணமில்லாமல் அழுகை இவையெல்லாம் ஏற்படும்.

• உங்கள் ‘டென்ஷனால்’ சிறிய பிரச்சனைகள் பூதாகாரமாக பெரிதாக தெரியும். ஞிமீஜீக்ஷீமீssவீஷீஸீனும் உண்டாகலாம்.

இதர சிக்கல்கள்
1. இதய சம்மந்த நோய்கள்
நல்ல கொலஸ்ட்ராலையும், தீய கொலஸ்ட்ராலையும் ஒருகட்டுப்பாட்டில் வைப்பது ணிstக்ஷீஷீரீமீஸீ ஹார்மோன். இது நிரந்தரமாக மாதவிடாய் நின்றிடும்போது சுரப்பது குறைந்துவிடும். இதனால் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த முடியாமல் போகும். தீய கொலஸ்ட்ரால் அதிகரித்து இதய நோய்கள் உண்டாகும்.

2. ஆஸ்டியோ போரோசிஸ்
இந்த எலும்பு மண்டல நோய் அதிகவயதினால் ஏற்படுவதைவிட விமீஸீஷீ-றிணீusமீ ஆல் அதிகம் ஏற்படுகிறது. இதற்கும் ணிstக்ஷீஷீரீமீஸீ தான் காரணம். இந்த ஹார்மோன் ‘கால்சியம்’ உடலில் படிவதற்கு உதவுகிறது. ணிstக்ஷீஷீரீமீஸீ குறைந்தால் எலும்பிலிருந்த கால்ஷியம் குறையும். நாளடைவில் எலும்புகள் வலுவிழந்து எலும்புகள் அடிக்கடி முறிய நேரிடும். விமீஸீஷீஜீணீusமீக்கு பிறகு வரும் முதல் அல்லது இரண்டாவது ஆண்டுகளில் அதிகமான எலும்பு இழப்பு நேருகிறது. ஆசிய பெண்கள் தான் அதிக அளவு ளிstமீஷீ-றிஷீக்ஷீஷீsவீs நோய்க்கு உள்ளாகுகிறார்கள்.

3. நரம்பு சம்மந்த மறதிநோய் (கிலிஞீபிணிவிணிஸி’ஷி ஞிவீsமீணீsமீ)
இது நரம்புத்தளர்ச்சி நோய். இது தொடர்பான ஞாபகசக்தி குறைந்து முழு மறதியை உண்டாக்கிவிடும். இதனால் மனச்சோர்வும் (ஞிமீஜீக்ஷீமீssவீஷீஸீ) வரும்.

அலோபதிக் மருந்துகள்
மாதவிடாய் நிரந்தரமாக நிற்கும்போது ஏற்படும் தொல்லைகளில் முக்கிய காரணம் ணிstக்ஷீஷீரீமீஸீ மற்றும் றிக்ஷீஷீரீமீstமீக்ஷீஷீஸீமீ ஹார்மோன்களின் குறைபாடு. எனவே, இந்த ஹார்மோன்களை வாய் வழியாக ஊசிபோட்டோ, உடலுக்கு செலுத்தப்படுவது முதன்மையான சிகிச்சை. இது பிஷீக்ஷீனீஷீஸீமீ ஸிமீஜீறீணீநீமீனீமீஸீt ஜிலீக்ஷீமீக்ஷீணீஜீஹ் (பிஸிஜி) எனப்படுகிறது.

இதன் பயன்கள்
• பிஷீt திறீணீsலீமீs, இரவு வியர்த்தல் முதலிய தொல்லைகளை தடுக்கிறது.

• சருமம், தலைமுடி பாதிப்புகளை சரிசெய்கிறது.

• இதய, இரத்தக்குழாய் நோய்களிலிருந்து நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.

• யோனியின் சுவர்களை மென்மையாக்கி, ஈரப்பசை குறையாமல் பாதுகாக்கிறது. பிஸிஜி யின் சில பக்க விளைவுகள்.

• இந்த ஹார்மோன் சிகிச்சையால், விமீஸீஷீஜீணீusமீக்கு பிறகு ரத்தப்போக்கு ஏற்படலாம். ரத்தப்போக்கு நிற்க வேண்டும்போது மறுபடியும் உதிரப்போக்கு தொடர்வது வேதனையை உண்டாக்கும்.

• மார்பு மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படலாம்.

• கல்லீரல், மண்ணீரல் (லிவீஸ்மீக்ஷீ, நிணீறீறீ தீறீணீபீபீமீக்ஷீ) நோய்கள் உண்டாகலாம்.

• அதிக இரத்த அழுத்தம் உள்ள பெண்கள் குடும்பத்தில் புற்றுநோய்கள் நேர்ந்திருந்தால், இந்த ஹார்மோன் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டாம்.

ஆயுர்வேதம்
ஆயுர்வேதம் பாதுகாப்பான பயனளிக்கும் சிகிச்சை முறைகளால் விமீஸீஷீஜீணீusமீ தொல்லைகளை போக்கவல்லது உடல்ரீதியாகவும் மனோரீதியாகவும் ஏற்படும் மாறுதல்களை பாதிப்புகளை ஆயுர்வேத மருந்துகளால் முற்றிலும் சரி செய்ய முடியும்.

ஆயுர்வேதம் ஒரு தொன்மையான, விஞ்ஞான ரீதியான மருத்துவ முறை, இயற்கையின் வரப்பிரசாதங்களான மூலிகைகளையும், இயற்கையான தாதுப்பொருட்களையும் உபயோகிப்பதால் பக்க விளைவுகள் இல்லை.

வியாதியிலிருந்து குணப்படுத்துவது மட்டுமல்லாமல், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மூன்று தோஷங்கள் – வாதம், பித்தம், கபம். இவைகள் சரிசமமாக உடலில் இயங்கினால் ஆரோக்கியமும், இவை மாறுபட்டால் நோய்கள் உண்டாகும் என்பது ஆயுர்வேத சித்தாந்தம்.

ஆயுர்வேதத்தின் படி, விமீஸீஷீஜீணீusமீ ஏற்படுவது. வாத, பித்த தோஷங்களின் மாறுபட்டால் தான் ஏற்படுகிறது.

நிரந்தரமாக நிற்கும் மாதவிடாய் கோளாறுகளுக்கு ஆயுர்வேத சிகிச்சை மூலிகைகள் ‘றிலீஹ்tஷீமீstக்ஷீஷீரீமீஸீ’ என்ற பொருள் உள்ள சிறந்த மூலிகைகள்.

இவை ணிstக்ஷீஷீரீமீஸீ ஹார்மோன்கள் போன்றவையே. ஆனால் ணிstக்ஷீஷீரீமீஸீ சிகிச்சையால் ஏற்படும் பக்க விளைவுகள் இல்லாதவை.

இதனால் பெண்கள் இந்த காலகட்டத்தில் எந்த வித தொல்லைகளும் இன்றி ஆயுர்வேத மருந்துகளால் பயனடையலாம்.

மருத்துவம்
பாதிப்பு அதிகமாக உடைய பெண்கள் அதிமதுரம் வேரை சுத்தம் செய்து பொடியாக்கி வைத்துக் கொண்டு தினசரி இரு வேளை (காலை, இரவு) ஒரு ஸ்பூன் அளவு சூடான பாலில் கலந்து பருகி வரலாம். அதிமதுரம் ( லிமினிஹிளிஸிமிசிணி – நிலிசீசிசீஸிவிமிஞீகி நிலிகிஙிஸிகி) வேரில் பெண் இன ஹார்மோன் ‘இஸ்ட்ரோஜென்’ போன்ற பொருள்கள் காணப்படுவதால் அது இறுதியாக மாதவிடாய் நிற்கும் சமயம் ஏற்படக் கூடிய திடீர் ஹார்மோன் குறைபாடை சீர் செய்கின்றது.

நிரந்தர மாதவிடாய் நிற்கும் போது கவனிக்க வேண்டியவை
• சரிசம விகித உணவை உட்கொள்ளவும், பச்சை காய்கறிகள், கீரை, அவரைக்காய், உருளைக்கிழங்கு, ஆப்பிள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.

• கால்சியம் செறிந்த தயிர், ஆடை இல்லாத பால், பால் பொருட்கள், பீட்ரூட், கேரட், முட்டை கோஸ் போன்ற உணவுகள் ளிstமீக்ஷீஷீ – ஜீஷீக்ஷீஷீsவீs வராமல் பாதுகாக்கும்.

• மசாலா, வறுத்த பொருட்கள், வெங்காயம், பூண்டு, மிளகாய், தக்காளி, வினிகர் போன்ற உடலை சூடாக்கும் உணவுகளை தவிர்க்கவும்.

• உடற்பயிற்சி, தியானம், யோகா இவை உதவும் குறைந்த பட்சம் தினசரி நடக்கவும்.

• உடற்பயிற்சி யோகாசனங்களை உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி மேற்கொள்ளவும்.

• விமீஸீஷீஜீணீusமீ தவிர்க்க முடியாத இயற்கையின் நியதி. நல்ல மருத்துவம், உணவு வகைகள் இவற்றால் நீங்கள் இந்த கால கட்டத்தில் ஏற்படும் தொல்லைகளிலிருந்து விடுபடலாம்.

மெனோபாஸ்
நாற்பத்தைந்திலிருந்து ஐம்பது வரை உள்ள பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி நின்றுபோவதைத்தான் மெனோபாஸ் என்கிறோம். பூப்பெய்தல், பிரசவம் போல ஒவ்வொரு பெண்ணும் கடந்து செல்ல வேண்டிய காலகட்டம் இது. ஹார்மோன் மாற்றங்களால் அசௌகரியங்கள் ஏற்படக்கூடும். நாற்பத்தைந்து வயதில் மெனோபாஸிற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கும். இந்தக் காலகட்டத்தில் பெண்களுக்கு முக்கியமாகத் தேவைப்படுவது மனவலிமை மட்டுமே.

மெனோபாஸின் அறிகுறிகள்:
ஒவ்வொரு மாதமும் சரியாகத் தொடர்ந்து கொண்டிருந்த மாதவிடாய் சுழற்சியில் ஏற்படக்கூடிய மாறுதல்கள்தான் மெனோபாஸ் ஆரம்பமாகியிருக்கிறது என்பதன் முதல் அறிகுறி. மாதவிடாயின்போது அதீத உதிரப்போக்கு, மாதவிடாய் திடீரென்று நின்று போதல், அப்நார்மல் பிளீடிங், இரண்டு மாதத்துக்கு ஒருமுறை பிளீடிங், தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு மேல் பிளீடிங் இவை மாதவிடாயில் ஏற்படும் மாற்றங்கள்.

உடல் முழுவதும் உச்சந் தலையிலிருந்து உள்ளங்கால் வரை ஒருவித சூடு ஒரு நிமிடம் ஃபிளாஷ் மாதிரி பரவிவிட்டுப் போகும். இதற்கு hot f* ushes என்று பெயர். பெரும்பாலான பெண்களுக்குத் திடீரென ஏற்படும் hot f* ushes பப்ளிக்கில் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

பிறப்பு உறுப்பும் அதைச் சுற்றியுள்ள இழைகள் மெலிதாகவும், உலரவும் தொடங்கிவிடும்.
ஹார்மோன் மாற்றங்களால் மெனோபாஸில் இருக்கும் பெண்கள், ஒரே மனநிலையில் இருக்க மாட்டார்கள். அவர்களுடைய மூட் ஒரு நாளிலேயே பலமுறை மாறிக்கொண்டே இருக்கும். அடிக்கடி கோபப்படுவது, எரிச்சல்படுவது, சோர்வு, மன உளைச்சல், டிப்ரஷன் போன்றவை மெனோபாஸ் பெண்களுக்கு ஏற்படக்கூடியவை. உடல் அளவில் ஏற்படக்கூடிய சில மாற்றங்களும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

செக்ஸில் ஆர்வம் குறையும். உடலில் எனர்ஜி குறைவதால் பொதுவாக எதிலேயும் ஆர்வம் குறைவாகத்தான் இருக்கும். இந்தக் காலகட்டத்தில் உடலுறவு வைத்துக்கொள்ளும் பெண்களுக்கு வலிமிக்க உடலுறவாக அமையும்.

எலும்புகள் மெலியத் தொடங்கிவிடும், இதனால் நாற்பது வயதைத் தாண்டிய பெண்கள் எளிதில் ஆன்டியோ பொரோஸிஸ் நோயினால் தாக்கப்படுவார்கள். எலும்புகள் வீக்காகத் தொடங்கும். இந்த அறிகுறிகள் குண்டாக இருக்கும் பெண்களுக்கு இன்னும் அதிகமாகத் தெரியும்.

இருதய சம்பந்தப்பட்ட நோய்களுக்கான அறிகுறிகள் இருதய நோய் பரம்பரை உள்ளவர்களுக்குத் தெரியத் தொடங்கும். சரி. இந்த மாற்றங்களுக்குக் காரணம்? ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் குறைபாட்டால் ஏற்படுகிறது. இந்த ஹார்மோன் பெண்களின் உடலில் செய்யும் முக்கிய வேலைகளைப் பார்க்கலாம். பெண்களின் உடலில் அவர்களுடைய மார்பகங்கள், பெல்விக் எலும்பு வளர்ச்சி, பிறப்பு உறுப்பு, கர்ப்பப்பை செயல்பாடுகள் ஆகியவற்றைச் செயல்படுத்துவது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன். கால்ஷியத்தை உறியச் செய்து எலும்புகளை பலப்படுத்துவதும் இந்த ஹார்மோன்தான். மேலும் நல்ல கொலஸ்ட்ராலான HD* _ஐ. அதிகரித்து கெட்ட கொலஸ்ட்ராலான * D* _ஐ.. குறைத்து பெண்களுக்கு இருதய நோய் வராமல் பாதுகாக்கவும் செய்கிறது. அதனால் மெனோபாஸ் வரை பெண்களுக்கு இருதய நோய் தாக்கும்

வாய்ப்பு மிகக் குறைவு.
மெனோபாஸின்போது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் செயல்பாடுகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுவிடும். இதன் விளைவாக டிப்ரஷன், எலும்பு மெலிதல், இருதயநோய் ஆகியவை பெண்களை எளிதில் தாக்கக் கூடிய நிலை ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிறது. மெனோபாஸ் அறிகுறிகள் அனைத்தும் ஈஸ்ட்ரோஜன் குறையும்போது அறியப்படுகிறது. ஹார்மோன் ரீப்பிளேஸ்மெண்ட் தெரபி (HRT) என்ற சிகிச்சையின் மூலமே ஈஸ்ட்ரோஜன் குறைபாட்டை ஈடுகட்ட முடியும். ஆனால், இந்த சிகிச்சைக்கு பக்கவிளைவுகள் உண்டு. இதைப்பற்றி சிகிச்சைக்கு முன்பு மகப்பேறு மருத்துவரிடம் கலந்து ஆலோசிப்பது நல்லது.

மெனோபாஸ் ஸ்டேஜில் இருக்கும் லேடீஸ் கவனித்துக்கொள்ள வேண்டிய சில விஷயங்கள்…
* ஒவ்வொரு பெண்ணும் கடந்து செல்லவேண்டிய ஸ்டேஜ் என்பதால், இதன் அசௌகரியங்களைத் தாங்கிக் கொண்டுதான் ஆகவேண்டும்.

* 45 வயதைக் கடந்த பெண்கள் டி.என்.சி செய்து கொள்வது நல்லது. அந்த உதிரப் போக்கின் மற்றும் பல காரணங்களைத் தெரிந்து கொள்ள இது உதவும். இதன் மூலம் பிளீடிங்கும் ஓரளவுக்குக் குறையலாம்.

* மருத்துவரை அணுகி வைட்டமின் சப்ளிமெண்டுகள் எடுத்துக் கொள்ளவேண்டும். Omega 3 fathya* ids உள்ள மீன் வகைகள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

* ஸ்ட்ரெஸ்ஸை முற்றிலுமாகத் தவிருங்கள். இந்தக் காலகட்டத்தில் உடல் நலன் கருதி எதைப் பற்றியும் கவலைப்படக் கூடாது! குறிப்பாக குடும்பப் பிரச்னைகள்.

* குடும்பத்தில் இருப்பவர்களும் அவர்களைப் புரிந்துகொண்டு பொறுமையாக நடந்து கொண்டு உதவி பண்ணணும். வீட்டு வேலைகளை இளைய தலைமுறையினரிடம் ஒப்படைக்கலாம். உடலை அதிகம் வருத்திக் கொள்ளக் கூடாது.

* உணவினை எரிக்கும் சக்தியான Basa* Metabo* ic Rate சற்றே குறைந்து விடுவதால் உணவில் கட்டுப்பாடு அவசியம். காலை வேளையில் சின்ன மீல்ஸாகவும் இரவு நேரங்களில் டிஃபன் ஐயிட்டங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளலாம்.

* ஞாபகத் தன்மை குறையத் தொடங்கும். ஒரு நாளைக்கு ஐந்துமுறை பழங்கள் மற்றும் காய்கறிகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பிறப்பு உறுப்புகளில் ஏற்பட்டிருக்கும் உலர்ந்த தன்மையைச் சரிசெய்ய மருத்துவர் பரிந்துரைத்த க்ரீம்களை மட்டும் பயன்படுத்தலாம்.

* உடல் மற்றும் முகச் சருமம் உலர்ந்துவிடுவதால் மாய்சுரைஸர், கிளென்ஸர், டோனர் அப்பை செய்து கொள்ளலாம்.

* எலும்புகளுக்கு வலுவூட்ட ஏரோபிக் உடற்பயிற்சி வகுப்புகளுக்குச் சென்றால் நல்ல பலன் கிடைக்கும்.

* மெனோபாஸ் என்பது பெண்களின் உடல்நிலையைச் சுட்டிகாட்டும் ஒரு ரிமைண்டர் என்று சொல்லலாம். இந்த ஸ்டேஜைக் கடந்த பெண்கள், தங்கள் உடல் ஆரோக்கியத்தில் சற்றே அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தொடர்ந்து ஒரு வருடம் மாதவிடாய் சுழற்சி நின்றால் மட்டுமே மெனோபாஸ், மூன்று அல்லது ஆறு மாதங்கள் பீரியட்ஸ் நின்றால், மெனோபாஸாக எடுத்துக் கொள்ளக்கூடாது. 40 வயதைக் கடந்த பெண்கள் அனைவரும் முடிந்த வரை முழுமையான மெடிக்கல் செக் அப் எடுத்துக் கொள்வது நல்லது!

மெனோபாஸ் ஏற்பட்டுள்ள பெண்களின் குடும்பத்தில் இருப்பவர்களும் அவர்களின் கணவன்மாரும் நிலைமையைப் புரிந்து கொண்டு பொறுமையாக நடந்து அவர்களுக்கு எல்லா வகையிலும் உதவியாக இருந்தால் அவர்கள் சந்தோசமாக நீண்ட நாட்கள் வாழமுடியும்.

Thursday, January 30, 2014

கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்


பசலைக்கீரை பசலைக்கீரையில் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான ஃபோலிக் ஆசிட் அதிகம் உள்ளதால், இதனை அளவாக உட்கொள்வது மிகவும் நல்லது.



பருப்பு வகைகள் கர்ப்பிணிகள் அனைத்து வகையான பருப்புக்களையும் பயமின்றி சாப்பிடலாம். மேலும் பருப்புக்களில் புரோட்டீன் வளமாக இருப்பதால், இது திசு மற்றும் தசைகளின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.


சிட்ரஸ் பழங்கள் சிட்ரஸ் பழங்களில் உள்ள அமிலங்கள் பிறப்பு குறைபாடுகளைத் தடுக்கும். எனவே ஆரஞ்சு, எலுமிச்சை ஆகியவற்றை தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.



அனைத்து வகையான நட்ஸ் கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் நட்ஸ்களை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடலுக்கு புரோட்டீன் அதிகம் கிடைக்கும்.




பன்னீர் பன்னீர் பிடிக்காதவர்கள் இருக்கவே மாட்டார்கள். எனவே இத்தகைய பன்னீரை கர்ப்பமாக இருக்கும் போது சாப்பிட்டு வருவது நல்லது. இதனால் அதிலிருந்து கால்சியம் சத்து கிடைத்து, குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.



அஸ்பாரகஸ் அஸ்பாரகஸில் வைட்டமின் டி அதிகம் உள்ளது. இது கர்ப்பிணிகளுக்கு மிகவும் இன்றியமையாத சத்தாகும். எனவே இந்த அஸ்பாரகஸை உணவில் சேர்க்க மறக்கக்கூடாது.



முட்டை வயிற்றில் வளரும் குழந்தைக்கு கால்சியம் சத்து மிகவும் இன்றியமையாததால், கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்களுக்கு முட்டையை நன்கு வேக வைத்து சாப்பிட வேண்டும்.



ப்ராக்கோலி குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு இரத்த சிவப்பணுக்கள் தேவைப்படுவதால், வைட்டமின் கே அதிகம் நிறைந்த ப்ராக்கோலியை மறக்காமல் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.



பீன்ஸ் கர்ப்பிணிகள் அனைத்து வகையான பீன்ஸையும் சாப்பிடலாம். ஏனெனில் பீன்ஸில் புரோட்டீன் அளவுக்கு அதிகமாக நிறைந்திருப்பதால், இதனை ஆரம்ப காலத்தில் சாப்பிட்டால், உடலுக்கு எனர்ஜியைக் கொடுப்பதோடு, குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் உதவும்.


தயிர் கர்ப்பிணிகள் தினமும் தயிரை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை, கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமாக இருக்க உதவும். மேலும் இதில் கால்சியம் அதிகம் நிறைந்துள்ளது.


வெண்டைக்காய் வெண்டைக்காய் சாப்பிட்டால், அதில் உள்ள ஃபோலிக் ஆசிட் பிறப்பு குறைபாடுகளைத் தடுக்கும். எனவே தவறாமல் இதனை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.


மட்டன் அசைவ உணவு சாப்பிட ஆசைப்பட்டால், சிக்கனை தவிர்த்து, மட்டனை தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனெனில் சிக்கனை சாப்பிட்டால் உடலின் வெப்பம் அதிகரிக்கும். இதனால் கருவிற்கு பாதிப்பு ஏற்படும்.

தொப்பை குறைய எளிய பயிற்சி..!



இன்றைய இளைஞர்களை அனைவரையும் பாடாய் படுத்தும் பிரச்சினை எதுவென்றால் அது தொப்பை. இந்த தொப்பையை குறைக்க அவர்கள் எந்த விதமான முயற்சியும் எடுக்க நேரம் கிடைப்பதில்லை.

அப்படிப்பட்டவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய எளிய பயிற்சியை தெரிந்து கொள்ளுங்கள். இந்த பயிற்சியை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் 3 மாதத்தில் தொப்பை படிப்படியாக குறைவதை காணலாம்.

செய்முறை:

முதலில் விரிப்பில் கால்களை நேராக நீட்டி படுத்துக் கொள்ளவும். கைகளை உடலோடு ஒட்டி வைக்கவும். பின்னர் கால்கள் இரண்டையும் முட்டி வரை மடக்கவும். இயல்பான சுவாசத்தில் இருந்தபடி மெதுவாக முன்னோக்கி வந்து கைகளால் கால் முட்டியை தொடவும். இவ்வாறு எழும் போது முதுகு வளைய கூடாது. படத்தில் உள்ளபடி தான் செய்ய வேண்டும்.

அப்போது தான் முழுபலனையும் பெற முடியும். இவ்வாறு இந்த பயிற்சியை தினமும் 30 முறை செய்ய வேண்டும். பார்க்க எளிமையாக தெரிந்தாலும் செய்யும் போது இந்த பயிற்சி சற்று கடினமாக தான் இருக்கும்.

ஆரம்பத்தில் இந்த பயிற்சியை குறைந்த எண்ணிக்கையில் உங்களால் முடிந்த அளவு செய்தால் போதுமானது. பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 50 முறை கூட செய்யலாம். செய்யும் எண்ணிக்கையின் அளவை பொறுத்து விரைவில் பலன் கிடைக்கும்.