
இப்போது நாம் எதைப்பற்றி பேசப் போகிறோம்,
என்றால் சர்க்கரை வியாதி நோயைப்பற்றியே. சர்க்கரை வியாதியில் உலகத்திலேயே
முன்னோடியாக இருக்கக் கூடிய நாடு எது? என்றால் அது இந்தியா. இந்தியாவிலேயே
சர்க்கரை வியாதியில் முன்னோடியாக இருக்கக் கூடிய மாநிலம் எது? என்றால்
நம்புங்கள் அது நம் தமிழ்நாடு தான்.
தமிழ் நாட்டிலேயே முன்னோடியாக இருக்கக்
கூடிய ஒரு நகரம் எது என்றால் சென்னை. சக்கரை வியாதிக்கான மிகப் பெரிய
வணிகச் சந்தையை தனக்குள்ளே உள்ளடக்கிக் கொண்டு, நடைப்பிணமாய் திரியக் கூடிய
தமிழ் சமூகம் இன்று உருவாகி உள்ளது. அதற்கான காரணங்கள் என்ன? அது
எப்படியெல்லாம் வருகிறது? அதை எப்படி தடுக்கலாம்? அதற்கான உணவு முறை
கட்டுப்பாடுகள் என்ன? இதையெல்லாம் முழுமையாக அலசி ஆராயப்போகிறோம். முதலில்
நீரிழிவு என்பது அன்றே சித்தர்களால் மது மேகம் என்ற பெயரில் சொல்லப்பட்டது.
இந்த மது மேகம் எப்படியெல்லாம் வரும் என்பதை விளக்கும் சித்தர் பாடலானது .
. . .
“கோதையார் களவின் போதை
கொழுத்த மீனிறைச்சி போதை
பாலுடன் நெய்யும்
பரிவுடன் உண்பீராகில்
வருமே பிணி”
என்று மது மேகத்தைப் பற்றி சொல்கிறார்கள்
சித்தர்கள். அதாவது கோதையார் களவின் போதை என்று சித்தர்கள் சொல்லக் கூடிய
ஒரு பெரிய காரணி என்ன என்றால் உடலுறவில் ஈடுபடும் பொழுது முழுமையாக
செயல்படக் கூடியது நாளமில்லாச் சுரப்பி மண்டலம் ஆகும். ஆதலால் மதுமேக நோய்
என்பது ஒரு ஹார்மோனல் கிருமி என்கிறார்கள். உடலில் இன்சுலின் என்கிற
ஹார்மோன் குறைவதால் வரக் கூடிய நோய் இதுவாகும்.
சித்தர்கள் அன்றே தெளிவாக
கூறியிருக்கிறார்கள் “கோதையார் களவின் போதை, கொழுத்த மீனிறைச்சி போதை”
என்றால் நிறைய அசைவ உணவுகள், மந்த உணவுகள் எடுத்துக் கொண்டால் இந்த உணவின்
மூலம் பாலியல் சார்ந்த உணர்வுகள் தூண்டப்பட்டு அதன் அடிப்படையில்
அடிக்கடி பாலியல் சார்ந்த உறவுகளில் ஈடுபடும் பொழுது மது மேகம் என்ற
நோய்க்கு மனிதர்கள் ஆட்படுகிறார்கள் என்று சித்தர்கள்
கூறுகிறார்கள்.
அதே போல் “பாலுடன் நெய்யும், பரிவுடன்
உண்பீராகில்” என்பது பாலாக இருந்தாலும் சரி, நெய்யாக இருந்தாலும் சரி அதை
அரிசியோடு சேர்த்து எடுக்கும் கால கட்டத்தில் நீரிழிவு கண்டிப்பாக வரும்
என்பது சித்தர்களின் கூற்று. இந்த மதுமேகந்தான் இன்று உலகையே அச்சுறுத்தக்
கூடிய நீரிழிவு என்னும் நோயாகும்.. இந்த நீரிழிவு நோய் என்பது இன்று
அனைவருக்கும் பொதுவாகிவிட்டது. நீரிழிவில் மூன்று வகையான நீரிழிவுகளைப்
பார்க்கிறோம். குழந்தைகளுக்கு வரக்கூடியது (Juvenile) நீரிழிவு என்று
சொல்கிறார்கள் இது முதல் விதம். இரண்டாவது மருந்துகளால் கட்டுப்படக் கூடிய
நீரிழிவாகும்.
மருந்தே இல்லாமல் இன்சுலினுக்கு
கட்டுப்படக்கூடிய நீரிழிவு. இது மூன்றாவது விதம். என்று மூன்று விதமான
நீரிழிவு இருக்கிறது. சர்க்கரை நோய் ஒருவருக்கு வந்து விட்டது என்றால்
அவருடைய முழுமையான செயல்பாடுகள் சிறிது சிறிதாக குறைய ஆரம்பித்து விடும்.
உடல் மெலிந்து விடும், அடிக்கடி சிறுநீர் கழிக்கக் கூடிய தன்மை இந்த மாதிரி
அதன் அறிகுறிகளை கொடுமையாக வெளிப்படுத்தக் கூடிய ஒரு கால கட்டம் உண்டு.
இன்று தமிழ் நாட்டில் தமிழ்ச் சமூகம்
சந்திக்கக் கூடிய ஒரு பெரிய பிரச்சினை என்ன என்றால் நீரிழிவு நோய், இது ஒரு
குறைபாடு தான். இக்குறைபாட்டிலிருந்து நாம் மீள முடியும் என்கிற
தன்னம்பிக்கையை இழந்து விட்டு எப்பொழுதும் மருந்துகளையும்,
மருத்துவர்களையும் தேடி அவர்கள் பின்னாலேயே ஓடக் கூடிய ஒரு நிலையில் தான்
தமிழ் மக்கள் இன்று இருக்கிறார்கள். அதற்கான காரணம் என்ன என்று பார்த்தால்,
எவ்வளவோ உணவுப் பொருட்கள் சொல்லப்பட்டிருந்தாலும் நமக்கு அந்த
பாரம்பரியமான உணவுப் பொருட்கள் இந்நோயை கட்டுப்படுத்தக் கூடிய தன்மையில்
இருந்தாலும் கூட அந்த உணவுகளை நாம் எடுக்கத் தயாராக இன்று இல்லை.

என்னுடைய நீரிழிவுக்கான மருத்துவ
சிகிச்சையின் போது நான் பலரையும் பார்த்திருக்கிறேன், காலை வேளையில் 2
பிரட்டையும், ஒரு கோக், பெப்சி, மிராண்டா போன்ற குளிர் பானத்தை
குடிப்பவர்களுக்கு, ஒரு மாதமோ, இரண்டு மாதமோ அல்லது ஆறு மாதமோ இதையே
பழக்கப்படுத்திவர்களுக்கெல்லாம் நீரிழிவு வந்திருக்கிறது. எனவே உணவில்
நிறைய துரித உணவுகள், ரசாயன உணவுகள் எடுக்கக் கூடியவர்களுக்கு கண்டிப்பாக
நீரிழிவு வருகிறது.

இந்த சர்க்கரை நோய்க்கான காரணம் என்ன
என்றால் அடித்துச் சொல்லலாம் உணவு முறைகளின் முரண்பாடுதான். இது பாரம்பரிய
நோய், இது அம்மா அப்பாவுக்கு இருந்தால் நமக்கும் வரும் என்பது உண்மையாக
இருந்தாலும் கூட அதைக் கண்டிப்பாகத் தடுக்க முடியும். எனவே அதற்கான உணவுகள்
என்னென்ன? அதை எப்படியெல்லாம் நாம் பயன்படுத்தலாம் என்பதை தொடர்ந்து
பார்க்கலாம்.
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த . . .
வெந்தயம்:

பாகற்காய்:

அதாவது முதலில் நீ செல் பின்னாடியே நான்
வருகிறேன் என்று சொல்வது மாதிரி ஒருவருக்கு சர்க்கரை நோய் வர ஆரம்பித்தது
என்றால் தொடர்ந்து ரத்த அழுத்தம் வரலாம், கொழுப்பு நோய் ,கொழுப்பு சீரற்ற
நிலையில் மாறலாம். ரத்தத்தில் Try Glyceride என்கின்ற கொழுப்பு இருக்கிறது.
அதே மாதிரி LDL என்று சொல்லக் கூடிய கெட்ட
கொழுப்பும் இருக்கிறது. இந்த இரண்டும் அதிகமாக மாறும் பொழுது இதயம்
சார்ந்த நோயும் வரலாம். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இதயம் சார்ந்த நோய்
வருவதற்கு வாய்ப்பு அதிகம் உண்டு. சர்க்கரை அதிகமாகி கட்டுப்படாத சூழலினால்
சிறுநீரகப் பாதிப்பு சார்ந்த நோயும் வரலாம். இதனால் சிறுநீரக செயலிழப்பு
கூட உண்டாகலாம்.
நினைவுத்திறன் குறைந்து போவது,
மூளைத்திறன் குறைந்து போவது இப்படி பல நோய்களைக் கொண்டுவரக் கூடிய நோயாக
சர்க்கரை நோய் உள்ளது. நீரிழிவு என்றால் உடலை நீராய் இழக்கச் செய்யக்
கூடிய ஒரு வியாதி நீரிழிவாகும். நம் உடம்பில் இருக்கக் கூடிய அனைத்து
ஆதாரங்களையும் சிறிது சிறிதாக வெளியே கொண்டு வந்து விடும். அதாவது எலும்பு
நம் உடம்பிற்கு வன்மை தரக்கூடியதாக இருந்தால் கூட, அந்த எலும்பையே கரைக்கக்
கூடிய தன்மை இந்த நீரிழிவுக்கு உண்டு.
ஆதலால் நீரிழிவை நாம் உண்ணும் உணவின்
மூலம் கட்டுப்படுத்த வேண்டும். நீரிழிவு நம் உடம்பை மென்மையாக்குகிறது.
அப்பொழுது நன்றாக உண்ணக்கூடிய உணவுப் பொருட்களைச் சாப்பிட வேண்டும்.
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், எந்த உணவுப் பொருட்களில் துவர்ப்பு சக்தி
அதிகமாக இருக்கிறதோ அவைகள் நீரிழிவை கட்டுப்படுத்தும்.
வாழைப்பூ:

தென்னைமரப் பூ:
அதே மாதிரி தென்னம்பாலைக்குள் இருக்கும்
தென்னை மரத்துப் பூவை நன்றாகக் காயவைத்து, அதைப் பொடி செய்து காலையிலும்,
இரவிலும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தோம் என்றால் சர்க்கரை நோய்
கட்டுப்படுவதுடன் சர்க்கரை நோயால் தளர்ந்து போன நரம்புகள் அனைத்தும்
சரியாகிவிடும். இதனால் நம் கண் பார்வையும் தெளிவாக இருக்கும்.

நெல்லி, கடுக்காய், தான்றிக்காய் :

அதே போல் ரத்தத்தில் கெட்ட கொழுப்பு ( Try
Glyceride) அதாவது இதயத்திற்கு செல்லக் கூடிய ரத்த நாளங்களில் அடிக்கக்
கூடிய ஒரு கொழுப்பு ட்ரை க்லீசரைடு. உலகம் முழுக்க அதற்கான மருந்துகள்
குறைவு. அந்த மருந்துகளை உபயோகப்படுத்தினால் அதற்கான பக்கவிளைவுகள் அதிகம்.
இதை முழுமையாக சரி செய்ய நம் நாட்டு கருவேப்பிலை, லவங்கப் பட்டை, வெந்தயம்
இந்த மூன்றையும் சம அளவில் கலந்து வைத்துக் கொண்டு தொடர்ந்து சாப்பிட்டு
வந்தால் கண்டிப்பாக அற்புதமான பலன் கிடைக்கும்.

இந்த உலகத்தில் நீரிழிவு என்ற நோய்
பரவத்தொடங்கிய போது இன்சுலின் குறைபாடு உள்ளவர்களுக்கு மாத்திரையால் ஒரு
சிலருக்கு சர்க்கரை நோய் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் இன்னும் ஒரு
சிலருக்கு மாத்திரை பலன் கொடுக்க வில்லை. அப்போது என்ன செய்தார்கள் என்றால்
பன்றிகளுடைய கணையம், எருமை மாட்டுடைய கணையம் இந்த இரண்டு
கணையத்திலிருந்து இன்சுலின் நுண்ணுயிர் எடுக்கப்பட்டு அது மனிதருக்கு
ஏற்புடைய வகையில் இன்சுலினாக மாற்றப்பட்டு அதன் பிறகு, அதை மனிதர்களுக்கு
மருந்தாகச் செலுத்தினார்கள்.

அதனால் தான் இன்றும் எனது கிராமத்தில்
சர்க்கரை நோய் என்று கூறினால் யாரும் தொடர்ந்து மாத்திரை சாப்பிடுபவர்களை
பார்க்கவே முடியாது. மிக எளிமையாக அரைக் கிலோ எள்ளு புண்ணாக்கு, அரை கிலோ
பருத்திக் கொட்டை, அரை கிலோ ஆவாரம்பூ , 100 கிராம் கருஞ்சீரகம் இவற்றை
உரலில் இட்டு இடித்து வைத்துக் கொள்கிறார்கள். இதில் ஒரு கையளவு எடுத்து
சிறிது கருப்பட்டி, பனைவெல்லம் சேர்த்து இக்கலவையை நன்கு கொதிக்க வைத்து,
அதை நன்றாக வடிகட்டி காலையிலேயும், இரவிலேயும் தொடர்ந்து சாப்பிட்டு
வந்தால் சர்க்கரை நோய் தானாகவே சரியாகிவிடும்.
சர்க்கரை நோய் வந்தவர்கள் எந்த மருந்தை
எடுத்தும் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும். அதற்குத் தகுந்த மாதிரி உடலில்
வியர்வை உண்டாக்க வேண்டும். அதுதான் பிரதானமானது. நாம் சிறிது
நடைப்பயிற்சி கூட செய்யாமல் இருப்பதனால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த
முடியாது. ஒரு இலகுவான நடைப்பயிற்சி, உடலை வருத்திச் செய்யக் கூடிய சில
வேலை இவற்றையெல்லாம் செய்து வியர்வையை உண்டாக்கிக் கொள்ளவேண்டும்.
குறைந்தது 50 மில்லி அளவாவது சர்க்கரை நோயாளிகளுக்கு வியர்வை வர வேண்டும்.
இதில் இன்னும் பெரிய விசயம் என்னவென்றால்
நீரிழிவால் வரக்கூடிய கால் புண்ணானது குழிப் புண்ணாக மாறிவிடும். அந்தப்
புண்ணுக்கு ஆங்கில மருத்துவத்தில் டின்ஜர், டெட்டால், மற்றும் சில
மருந்துகளையும் சேர்த்து குணப்படுத்துகிறோம் பேர்வழி என்று சொல்லி, பிறகு
காலையே வெட்டக் கூடிய ஒரு நிலை வருகிறது. கிராமங்களில் வெறும் ஆவார இலையை
அவித்து அந்த புண்ணில் வைத்து கட்டுகிறார்கள். அதன் பின் ஒரு வாரம் அல்லது
10 நாட்களில் அப்புண் குணமாகி விடுகிறது அவ்வளவு அதிசயமான விசயம் எல்லாம்
சித்தர்கள் கூறியிருக்கிறார்கள்.

இன்று சர்க்கரை நோய்க்கு இனிப்புத் துளசி
சாப்பிடுபவர்கள் நிறைய நபர்களை பார்த்திருக்கிறோம். ஆனால் ஆவாரம் பூவை
தேநீராகச் சாப்பிடும் பொழுது சர்க்கரை நோய் கட்டுப்படுவதை நாங்கள் கண்
கூடாக காண்கிறோம். சத்தாகச் சாப்பிடுங்கள் சர்க்கரையைக் கட்டுபடுத்துங்கள்
என்று நாங்கள் கூறுகிறோம். உணவை கட்டுப்படுத்தும் பொழுது அந்த உணவின்
ஊட்டமேல்லாம் குறைய ஆரம்பிக்கிறது. ஆக தேர்ந்தெடுத்த உணவை நாம் எடுக்கும்
பொழுது நல்ல முழுமையான பலன் கண்டிப்பாக கிடைக்கும்.
ஆவாரம்பூ, சுக்கு, ஏலக்காய் இவற்றை
தொடர்ந்து கொதிக்கவைத்து கசாயமாகச் சாப்பிடும்பொழுது சர்க்கரை நோய்
முழுமையாக கட்டுப்படும்.இது மிக எளிமையான வழிமுறைஆகும். தேநீர் சாப்பிடக்
கூடிய அதே சுவை இதிலேயும் இருக்கும். ஆவாரம்பூ தேநீர் சாப்பிட்டுப்
பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும். இன்னும் சர்க்கரை நோய்க்கு
சிறுகுருஞ்சான், நாவல் கொட்டை, மருதம்பட்டை, வேப்பம்பட்டை, கடலலஞ்சில் இவை
ஐந்தையும் சம அளவு கலந்து, பொடி செய்து வைத்துகொண்டு காலை, இரவு நேரம்
தொடர்ந்து சாப்ப்பிட்டுக் கொண்டு வந்தால் சர்க்கரை நோய்க்கு நல்ல பலன்
இருக்கும்.
நீரிழிவு என்றால் உடம்பை மென்மைப்
படுத்தக் கூடிய ஒரு வியாதி ஆகும், அந்த நீரிழிவைக் கட்டுப்படுத்தவேண்டும்.
அப்பொழுதுதான் உடம்பு நல்ல சக்தி பெரும். நீரிழிவு நோயாளிகள் உடம்பில்
அதிகம் நீர்ச்சத்து இழக்காமல், தண்ணீர் தாகம் அதிகம் இல்லாமல், நாவு வறட்சி
இல்லாமல் இருக்க கவனம் செலுத்த வேண்டும். நாம் மேலே கூறிய உணவுகளை எல்லாம்
தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் பொழுது நல்ல பலன் கிடைக்கும்.
நாம் உணவில் நிறைய பிஞ்சுக் காய்கறிகளான
முருங்கைப் பிஞ்சு, பீர்க்காய்ப் பிஞ்சு , புடலங்காய்ப் பிஞ்சு, பீன்ஸ்,
அவரை இவை அனைத்தையும் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே வாருங்கள். இன்று
இருக்கும் அலோபதி மருத்துவர்கள் சர்க்கரை நோயாளிகளிடம் கேரட்
சாப்பிடாதீர்கள், அது சர்க்கரை நோய்க்கு நல்லதில்லை என்று கூறி
வருகிறார்கள். அவர்கள் அப்படிச் சொன்னதனால் 10 வருடமோ அல்லது 15 வருடமோ
கேரட்டையே சாப்பிடாத சக்கரை நோயாளிகள் எனக்கு தெரிந்து நிறைய பேர்
இருக்கிறார்கள். கேரட் கண்களுக்கு மிகவும் நல்லது.
இதில் பீட்டா கரோடினாய்ஸ் எனும் ஊட்டச்
சத்து இருப்பதனால் நம் தோல் பகுதிக்கு கீழ் இருக்கக் கூடிய தசை பகுதியில்
சக்தியை சேர்த்து வைக்கக் கூடிய தன்மை கேரட்டிற்கு உண்டு. அதனால் தாராளமாக
நீரிழிவு நோயாளிகள் கேரட்டைச் சாப்பிடலாம் தவறில்லை.
அது போல் தமிழ் நாட்டில் இருக்கக் கூடிய
ஆங்கில மருத்துவர்கள் சர்க்கரை நோயாளிகளை பார்த்து இளநீர் சாப்பிடாதீர்கள்
என்று கூறி திசை திருப்புகிறார்கள். இளநீர் சாப்பிட்டால் கண்டிப்பாக
நீரிழிவு அதிகமாகிவிடும் என்று கூறி நோயாளிகளைப் பயமுறுத்துகிறார்கள். இது
தவறான செயலாகும். நான் அவர்களைப் பார்த்துக் கேட்கிறேன், கரும்புச்
சாற்றிலிருந்து சர்க்கரை தயார் செய்யலாம், இளநீரிலிருந்து சர்க்கரை தயார்
பண்ண முடியுமா? இதை யோசித்து பாருங்கள். இளநீரில் அத்தனை கால்சியமும்
இருக்கிறது. அச்சத்தில் புண்களை ஆற்றக் கூடிய தன்மை இருக்கிறது. ஒரு
தட்டுச் சாப்பாட்டில் இருக்கக் கூடிய கார்போ ஹைட்ரேட்ஸ் இளநீரில்கிடையாது.
அதனால் என்னைப் பார்க்க வரும்
நோயாளிகளுக்கு நான் கூறுவது, இளநீரில் வெந்தயத்தை ஊற வைத்து, அந்த
வெந்தயத்தையும் இளநீரையும் நன்கு கலந்து சாப்பிடுங்கள் என்கிறேன். அப்படிச்
சாப்பிட்டால் சர்க்கரை முழுமையாகக் கட்டுப்படக் கூடிய வாய்ப்பு உள்ளது.
அதே மாதிரி மருதம்பட்டையைக் கசாயம் செய்து தொடர்ந்து சாப்பிடும் பொழுது
நல்ல பலன் கிடைக்கும்.
நாம் உண்ணும் உணவில் பல்வேறு உணவுகளைப்
பன்னாட்டு நிறுவனங்கள் திணிக்கத் தயாராகி கிட்டத்தட்ட 17 வகையான
நூடுல்ஸ்சில் அதிக பொட்டாசியம் சத்து , அதிக சோடியம் சத்து ஆகியவை
அதிகமாக இருக்கிறது கூவிக் கூவி விற்பனை செய்து நம்மை வாங்க வைக்கிறது.
இதை இந்திய விஞ்ஞானிகள் ஆய்வு செய்து, இந்த பன்னாட்டு உணவுகள் உண்பதற்கு
ஏற்ற உணவுகள் அல்ல, இவைகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் ஆதாலால் இதைத்
தடுத்து நிறுத்த வேண்டும் என்று சொன்னால் கூட, இவைகளை நிறுத்துவதற்கு எந்த
அரசும் தயாராக இல்லை. ஏன் என்றால் பன்னாட்டு நிறுவனங்கள் கொடுக்கக் கூடிய
மிகைமிஞ்சிய வரியே இதற்குக் காரணம் ஆகும்.
இந்தத் தொகை பெரிய தொகையாக
ஆளுகின்றவர்களுக்கு தெரிவதால் மக்களுடைய அடிப்படை ஆரோக்கியத்தைப் பற்றி
எந்தக் கவலையும் இல்லாத ஒரு சூழல் இருக்கிறது. ஆக ஒவ்வொரு தனி மனிதனும்
தனக்கான விழிப்புணர்வை அவன்தான் தேடி எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆரோக்கியமான வாழ்விற்கு உணவுக் கட்டுப்பாடு என்பது கண்டிப்பாக வேண்டும்.
உணவைத் தேர்ந்தெடுக்க வேண்டிய விசயமும் நம் கையில் தான் இருக்கிறது.
சித்தர்கள் சொன்ன சிறு தானியங்கள்
வரகரிசி, திணை அரிசி, குதுரவாலி, சாமை எல்லாமே நார்ச்சத்து உள்ள அற்புதமான
உணவுகள். இந்த உணவுகளை ஒரு வேளையோ, இரு வேளையோ சர்க்கரை நோயாளிகள்
தொடர்ந்து சாப்பிடும் பொழுது நோய் கட்டுப்படக் கூடிய ஒரு தன்மை உண்டு.
சர்க்கரை நோய் வந்து விட்டாலே உடலில் நார்ச்சத்து, இரும்புச்சத்து,
சுண்ணச்சத்து இவைகள் குறைந்து விடும். இவற்றை ஈடுகட்ட துவர்ப்பான உணவுகளை
எடுத்துக் கொண்டால் சர்க்கரையை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும்.
இந்தியாவானது இன்று உலகத் தாயாரிப்புகளை
விற்கும் பெரும் வணிகச் சந்தையாக, வளர்ந்த நாடுகளுக்கென மாறிவிட்டது.
அதனால் தான் இங்கு நோய் மறைமுகமாக விதைக்கப்படுகிறது. அந்த நோய்களை இங்கு
விதைத்து, மறைமுகமாக இங்குள்ள நிதி ஆதாரங்கள் கொள்ளயடிக்கப்படுகிறது. எனவே
நாம் தான் நுகர்ர்வுப் பொருட்களை வாங்கும் பொது மிகக்கவனமாக இருக்க
வேண்டும்.
2007 கணக்குப்படி இந்தியாவில் சர்க்கரை
வியாதிக்கான வணிக மதிப்பு 700 கோடி. அமெரிக்காவின் எலிலில்லி என்ற நிறுவனம்
தயாரிக்கின்ற மருந்துகள் இங்கு மட்டும் 700 கோடி ரூபாய்க்கு விற்பனையாகக்
கூடிய வணிகச் சந்தையாக நம் நாடு இருக்கிறது.. இது இன்று கிட்டத்தட்ட 1000
கோடியைத் தாண்டி சென்றிருக்கும். அதனால் நம்முடைய நிதி ஆதாரங்கள்
கொள்ளயடிக்கப்படாமல், நம்முடைய நாடு வளமையான நாடாக மாற வேண்டும்
என்றால்,நாம் நல்ல உடல் நலத்தோடு, உடல் வளத்தோடு இருக்க வேண்டும்.
அவ்வாறு மாறும் பொழுதுதான் ஒரு முழுமையான,
ஒரு ஆரோக்கியமான இந்தியாவை, ஒரு ஆரோக்கியமான தமிழ்ச் சமூகத்தை நாம் படைக்க
முடியும். எப்பவுமே நோய்வாய்ப்பட்டவனிடம் படைப்பாற்றல் குறைந்து விடும்.
ஒரு நல்ல ஆற்றல் உள்ள, படைப்புத்திறன் உள்ள தமிழ் சமூகம் மறுபடியும்
வரவேண்டும், வளரவேண்டும் என்றால் சர்க்கரையை கட்டுப்படுத்த வேண்டும்.
அவ்வாறு கட்டுப்படுத்துவதற்கு உணவே
மருந்து மருந்தே உணவு என்ற சித்தர்கள் கோட்பாட்டின் படி அனைவரும் முயற்சி
செய்யவேண்டும். நான் கூறிய உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், உணவே
அடிப்படையாகக் கொண்ட மருந்துப் பொருட்கள் எல்லாவற்றையுமே தொடர்ந்து
சாப்பிடுங்கள். அடுத்த முறை சிறகு இணைய இதழில் சர்க்கரை நோயினால் வரக்
கூடிய சார்பு நோய்கள் பற்றி விரிவாக எடுத்தியம்ப இருக்கிறேன்.
சர்க்கரை நோய் வந்தவர்களுக்கு ஆஸ்துமா,
இதய நோய், சிறுநீரக நோய் ஆகிய நோய்களும் துணை நோய்களாக இருக்கிறது. அதனால்
இந்த சார்பு நோயைப் பற்றி இன்னும் விளாவரியாக அடுத்த கட்டுரையில்
பார்ப்போம். நான் மறுபடியும் உங்களுடன் கருத்துக்களை பகிர்ந்துக்
கொண்டமைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் கருத்துக்களை
நான் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன். நன்றி, வணக்கம்.
very useful information to all...
ReplyDeletethank you sir...
.
with smile
venkatesh
Thanx for giving useful information
ReplyDeleteThanx for giving useful information
ReplyDeleteவெந்த என்றால் பஸ்பமாகி விட்டது என்று அர்தம் எனக் குறிப்பிடுகிறீர்கள். ஆனால் வெந்த என்றால் அவிந்த, அவித்த என்பதே பொருள் என அறிந்துள்ளேன்- வெந்த காய்கறி . பஸ்பம் என்பது சாம்பல்- சாம்பல் எரிப்பதால் கிடைப்பது.
ReplyDeleteமேலும் உலகில் மாமிசம் உண்பவர்களுடன் ஒப்பிடும் போது, தமிழ்நாட்டில் மாமிசம் உண்போர் குறைவு அப்படியிருக்கையில் , நீரிழிவு எப்படி, தமிழ்நாட்டில் அதிகமானது.
அத்துடன் நானறிந்த வகையில் பல பரம்பரை சைவ உணவு உண்வு உண்போர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
பஞ்ச அமிர்தமென - பால், தயிர், நெய், தேன், சர்க்கரை குறிப்பிடுவது நம் இலக்கணம். நெய்யில்லா உண்டி பாழ் என்றது இலக்கியம்.
பாலும், நெய்யும் உயிர் கொல்லி என்கிறது சித்த மருத்துவம்.
மற்றும் படி இவ்வியாதி பற்றிய நீங்கள் தந்த தகவல்கள் தெரிந்தவையே!
ஆனால் இவற்றை எந்த அளவு இன்றைய
அவசர உலகில் கைக்கொள்ள முடியுமோ தெரியவில்லை. ஆனால் இவற்றைப் படித்தால் குழப்பம் வருவது தவிர்க்க முடியாது.
சுகர் குணமாகிவிட்டது
Deleteசரி தான் , சர்க்கரை நோய் வருவதற்கு எல்லோரும் சொல்லும் காரணம் இது தான் . ஆனால் சற்று உற்றுநோக்கினால் எதனால் கனையத்தினால் இன்சுலின் யை சுரக்க முடிவதில்லை . எந்த காரணியால் அது இயலாமல் போகிறது . அதற்கு இது வரை யாராலும் விடை காண முடியவில்லை.
எப்படி உங்களுக்கு சுகர் குணமாகியது.
Deleteஎப்படி உங்களுக்கு சுகர் குணமாகியது.
DeleteHi sir enakku 25age aaguthu.nan oru satharana vivasayi kudumbathula piranthavan ippa Chennai vela pannittu irukken, 2011 LA enakku sugar vanthuchi,nan innum insulin than use PANREN,IPPA enakku aanmai kuraiyuthu, ennoda undambe romba palavinamaguthu,en life mudinja mathiri irukku, ithukku ethavathu oru vazhi sollunga. Ithu ennoda number 8870226277 please help me....
ReplyDeleteநல்ல உடல் பயிற்சி காய்கறிகள் உணவு தானிய வகைகள் உணவு பட்டை வெந்தயம் ஆவாரம்பூ தினமும் சேருங்கள் நன்றாக சாப்பிடுங்கள் உணவில் குறை வேண்டாம்
Delete