Pages

Thursday, October 31, 2013

சுகப்பிரசவம் ஏற்பட சில டிப்ஸ்

pregnant-asian-woman-doing-yoga
இன்றைய பெண்கள் பிரசவ வலிக்கு பயந்து அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்கள். ஆனால் உண்மையில் சுகப்பிரசவம் தான் எப்போதும் சிறந்தது. அப்படி இயற்கையான சுகப்பிரசவ முறையில் குழந்தை பெற்று கொள்ள பிரசவத்திற்கு முன் பெண்கள் செய்ய வேண்டியதை பற்றி சில டிப்ஸ் தருகிறார் மருத்துவர். இப்போது அதைப் பார்ப்போமா.
ஆரம்ப காலத்திலேயே உடற்பயிற்சி
சுகப்பிரசவம் அடைவதற்கு கருவுற்ற ஆரம்ப காலத்திலேயே கவனம் செலுத்த வேண்டும். கரு வளரும் பருவத்திலேயே, பெண்கள் சில எளிமையான உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். கரு வளரும் நேரத்தில், அதன் எலும்பு மற்றும் தசை வளர்ச்சிக்காக சீரான முறையில் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.
உடற்பயிற்சிக்கு நீங்கள் புதிதா
கருவுற்ற பெண்கள் கடைசி மூன்று மாதத்தில் இருக்கும் போது மற்றும் கருவுற இருக்கும் பெண்கள் ஆகியோர் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சிக்கு நீங்கள் புதிதா? அப்படியானால் எளிதான உடற்பயிற்சியில் இருந்து தொடங்குங்கள். முதலில் வார்ம்-அப் செய்து விட்டு, பின் உடற்பயிற்சியை தொடங்குங்கள். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டாலோ அல்லது வலி ஏற்பட்டாலோ சரி, அதனை மெதுவாக குறைத்துக் கொள்ளுங்கள். இவை அனைத்தும் டாக்டர்களின் அறிவுரைப்படி மேற்கொள்ளலாம்.
கருவுற்ற தாய்மார்களுக்கான உடற்பயிற்சி
கருவுற்ற தாய்மார்கள் கவனமான மற்றும் அடிபடாதவாறு உடற்பயிற்சி செய்ய வேண்டும். நீச்சலடிப்பது, நடப்பது, ஏரோபிக்ஸ் மற்றும் வண்டி ஓட்டுவது போன்றவை செய்யலாம். ஒரு வாரத்தில் 4-5 நாட்களாவது சுறுசுறுப்பாக உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். வேலை பார்க்கும் போது நிமிர்ந்து உட்காருவது நல்லது.
முதல் ஆறு மாத உடற்பயிற்சிகள்
இந்த காலத்தில் பெண்கள் ஏரோபிக்ஸ், யோகா மற்றும் வெயிட் ட்ரைனிங் போன்ற உடற்பயிற்சிகளில் ஈடுபடலாம். குதிரைச் சவாரி, மலை ஏறுதல், பனிச்சறுக்கு, கூடைப்பந்து மற்றும் கால்பந்து போன்ற ஆபத்தான விளையாட்டுக்களில் ஈடுபடக்கூடாது.
கடைசி மூன்று மாத உடற்பயிற்சிகள்
இந்த மாதங்களில் நடைப்பயிற்சியே மிகவும் சிறந்தது. நமக்குப் பிடித்தப் பாடலுக்கு வீட்டு வேலைகளை செய்த படியே நடனம் கூட ஆடலாம். நல்ல பாடல்களை ஒலிக்க செய்து, வீட்டு வேலைகள் செய்தால், இதயத் துடிப்பும் சீராக இருக்கும்.
பிரசவக்கால உடல் தகுதிகள்
ஆறு மாதங்களுக்கு பிறகு முதுகுத்தண்டு தரையில் படும்படியான உடற்பயிற்சிகள் செய்யக்கூடாது. உடல் வறட்சியை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். வெயிலில் வேலை செய்யக்கூடாது. கர்ப்ப காலத்தில் உடலின் வெப்பம் அதிகமாகாமல் பார்த்துக் கொள்வது அவசியம். லேசான தளர்ந்த ஆடைகளையே அணிய வேண்டும். மார்பகங்கள் அதிகமாக அசைவு கொடுக்காமல் இருக்க, சரியான அளவில் உள்ளாடை அணிந்து கொள்வதும் அவசியம்.
யோகா செய்யும் போது கவனம்
யோகா செய்யும் போது சிக்கல் ஏற்படாமல் தடுக்க, இதோ சில டிப்ஸ்:
  • முதுகு தரையில் படும்படி யோகா செய்யக்கூடாது.
  • வயிறு தரையில் படும்படி யோகா செய்யக்கூடாது.
  • யோகா செய்யும் போது வலி ஏற்பட்டால் டாக்டரிடம் போக வேண்டும்.
  • இடைவெளி விட்டு செய்யலாம்.
  • அறையின் வெப்ப நிலையை தெரிந்து கொள்ளுங்கள். வெப்பமான இடத்தில் யோகா செய்யக்கூடாது. அது தலை சுற்றை ஏற்படுத்தும்.
பிரசவக்கால பத்தியம்
உடற்பயிற்சிகள் தவிர்த்து, பிரசவக் காலத்தில் நல்ல சத்துள்ள உணவு வகைகள் மற்றும் பால் வகை உணவுகள் அதிகமாக சாப்பிட வேண்டும். இது சிசுவின் வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும்.
சத்துள்ள உணவு வகைகள்
  • முழு தானியத்தில் செய்த சப்பாத்தி, பிரட், பிட்சா, பாஸ்தா மற்றும் நூடுல்ஸ்.
  • தினமும் ஐந்து வேலைக்கு நற்பதமான காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்வது அவசியமான ஒன்று. இதனை பிரசவத்திற்கு பின்னும் கடைப்பிடிக்கலாம்.
  • அதிக கலோரி மற்றும் கொழுப்புச்சத்து உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். குறைந்த கலோரிகள் கொண்ட பால் வகை உணவுகள் மற்றும் கொழுப்பில்லாத இறைச்சியும் இதில் அடங்கும்.
  • இனிப்பு வகை உணவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்தால், பிரசவ காலத்தில் ஏற்படும் சர்க்கரை நோய்க்கான வாய்ப்புகள் அதிகம்.
எதை சாப்பிட கூடாது
சத்து இல்லாத எந்த உணவையும் சாப்பிடக்கூடாது. முக்கியமாக கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் கீழ்கூறிய எதையும் உண்ணக் கூடாது:
  • சிறிதளவு மது குடித்தாலும் கூட குழந்தையின் ஐ.க்யூ. பாதிக்கப்படும்.
  • அதிக கலோரிகள் கொண்ட உணவுகள், எண்ணெயில் சமைத்த உணவுகள், கொழுப்பு நிறைந்த இறைச்சிகள் என அனைத்தையும் தவிர்க்கவும்.
  • பதப்படுத்தப்பட்ட ஜூஸ்களை பருகாதீர்கள். அதில் கூடுதல் சர்க்கரையும், கெட்டு போகாமல் இருக்க சில பதப் பொருட்களும் கலந்திருக்கும்.
  • மொத்தத்தில் உணவு ஆரோக்கியமாக, அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்தவையாக இருக்க வேண்டும்.
உடற்பயிற்சி செய்வதன் முக்கியத்துவம்
மேலே சொன்ன அனைத்து வழிகளையும் கடைபிடித்து வந்தால், சுகப்பிரசவம் ஆகும். நடைப்பயிற்சி, வைட்டமின் மற்றும் கால்சியம் நிறைந்த உணவு வகைகளை சாப்பிடுவதன் மூலம் இடுப்பு எலும்பு விரிவடைந்து சுகப்பிரசவம் ஆகும். இதனால் குழந்தை வெளிவருவதில் எந்தவித சிக்கலும் இருக்காது.
அறுவை சிகிச்சை ஏன்?
பெண்கள் உடலமைப்பு தான் சுகப்பிரசவத்திற்கு பெரும் பங்கு வகிக்கிறது. அதிக மற்றும் குறைவான எடை உள்ள பெண்கள் மற்றும் இடுப்பு எலும்பு மற்றும் கீழ் காலில் ஊனம் (போலியோ அல்லது விபத்து மூலம் ஏற்பட்டிருக்கும்) உள்ள பெண்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் தான் குழந்தை பிறக்க முடியும்.
போதிய ஊட்டச்சத்து, உடற்பயிற்சி இல்லாமை
மேலே சொன்ன அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றாமல், சத்துள்ள உணவு சாப்பிடாமல், உடற்பயிற்சி செய்யாமல் இருக்கும் பெண்களுக்கு சுகப்பிரசவம் கடினமானது.

No comments:

Post a Comment