Pages

Monday, October 28, 2013

பாரஸெட்டமோல் மாத்திரையை உட்கொண்டால் ஆஸ்துமா நோய் வருவதற்கான வாய்ப்பு


லண்டன்,:சிறிது தலைவலியோ அல்லது காய்ச்சலோ வந்துவிட்டால் போதும் உடனடியாக பாரஸெட்டமோல் மாத்திரையை உட்கொள்ளும் இளைஞர்களுக்கு ஒரு அதிர்ச்சித் தகவல்.

பாரஸெட்டமோல் மாத்திரையை உட்கொண்டால் ஆஸ்துமா நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என 50 நாடுகளில் 3 லட்சம் இளைஞர்களிடம் நியூசிலாந்து மருத்துவ ஆய்வாளர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆண்டிற்கு ஒருமுறை உபயோகித்தாலே ஆஸ்துமா வருவதற்கான வாய்ப்பு 50 சதவீதமாம். மாதத்தில் ஒரு முறை பயன்படுத்துவோருக்கு இது இருமடங்காகும்.

அதுமட்டுமல்ல,பாரஸெட்டமோல் உடலில் ஏற்படுத்தும் மாற்றத்தால் பல்வேறு அலர்ஜிகள்(ஒவ்வாமை) ஏற்படுவதற்கும் காரணமாகும் என மருத்துவ விஞ்ஞானி கூறுகிறார்.

நியூசிலாந்தில் மெடிக்கல் இன்ஸ்டியூட் மருத்துவர் ரிச்சார்டு பீஸ்லியின் தலைமையில் நடந்த ஆய்வில்தான் இது தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment