Pages

Tuesday, October 29, 2013

மாதவிலக்கு சீரா வெளியேற -பாட்டி வைத்தியம்



மாதவிலக்கு சீரா வெளியேற -பாட்டி வைத்தியம்

தை பிறக்கப்போவதற்கான அடையாளங்கள் பாட்டி வீட்டில் நிறையவே காணப்பட்டது.

வாசலில் வரையப்பட்ட மிகப்பெரிய மாக்கோலம், அதன் நடுவில் வைக்கப்பட்ட பூசணிப் பூ என தமிழ் ஆண்டின் தொடக்கமான தைத்திங்களை ஆரவாரமாக வரவேற்றிருந்தாள் பாட்டி.

தைப் பொங்கல் நெருங்குவதால் பாட்டி அதற்கான வேலைகளில் பரபரப்பாக ஈடுபட்டிருந்தாள். அப்போது, வாசலில் யாரோ வந்து நிற்கும் அரவம் கேட்டு திரும்பிப் பார்த்தாள். அங்கே பூங்கோதை கல்லூரியில் படிக்கும் தனது மகளுடன் நின்றிருந்தாள்.

வாம்மா பூங்கோதை.. என்ன... மக லீவுக்கு வந்திருக்காளா.. எப்படி இருக்கா..
என்று அவர்களை வரவேற்ற பாட்டி, தமது பிரத்தியேக தயாரிப்புகளான சீடை, முருக்கு போன்றவற்றைக் கொடுத்து உபசரித்தாள்.

 சரி.. என்ன.. அம்மாவும் மகளுமா வந்திருக்கிங்க.. சும்மா வரமாட்டீங்களே... என்ன விஷயம்... என்று பாட்டி அவர்கள் வந்ததற்கான காரணத்தைக் கேட்டாள்.

ஒண்ணுமில்ல பாட்டி.. உன் பேத்திக்குத்தான் மாதவிலக்கு சீரா வெளியேறமாட்டேங்குது.. 10 நாட்களா தொடர்ந்து உதிரப்போக்கு இருந்துக் கிட்டே இருக்கு.. இதனால அவ படிப்புல கவனம் செலுத்த முடியாம கஷ்டப்படுறா.. எதைக் கேட்டாலும் எரிஞ்சு விழுறா.. அதுக்குத்தான் லீவுக்கு வந்திருக்குற சமயத்துல உன்ன பாத்தா ஏதாவது மருந்து சொல்லுவன்னு கூட்டி வந்திருக்கேன்... என்று தான் வந்த காரணத்தை விவரித்தாள் பூங்கோதை.

இந்தக் காலத்து பொண்ணுகளுக்கு வழக்கமா இருக்குற பிரச்சனைதான் இது..
ஏண்டியம்மா, கல்லூரி விடுதில என்ன சாப்பிட்டே.. நொருக்குத் தீனி அதிகமா சாப்பிடுவியா.. என்று பாட்டி அந்தப் பெண்ணிடம் கேட்டாள்.

அப்போது பூங்கோதை, சரியா கேட்ட பாட்டி.. நல்ல சாப்பாட்டத் தவிற மத்தது எல்லாம் விரும்பி சாப்பிடறா.. மீன், ஆட்டுக்கறி எல்லாம் பிடிக்கறதில்ல.. கீரை வகைகள சமைச்சாலே எழுந்து ஓடிடறா.. இந்த வெள்ளை கோழிக்கறியத்தான் அதிகமா விரும்பி சாப்பிடறா..

நாம சின்னப்பிள்ளையா இருக்கிற காலத்துல மாதவெலக்கு சீரா வர வெண்டைக்காய் முருங்கைக்காயின்னு காய்கறிகள எப்படி சப்பிட்டுருப்போம். ஆனா இவைகள இவ சுத்தமா தொடமாட்டேங்குறா.. அதிகமா செல்லம் குடுத்து வளத்துட்டேன். நான் சொன்னாலும் கேட்டுக்க மாட்டேங்குறா.. நீயாச்சும் சொல்லு பாட்டி..

 இதப் பாருடியம்மா...

வருத்து பாக்கெட்டுல வச்சிருக்கிற தின்பண்டங்கள், எண்ணெய் பதார்த்தம், இனிப்பு வகை இவைகள நொருக்குத் தீனியா சாப்பிடறது, ஐஸ் பொட்டியில வச்ச உணவுகள சாப்பிறது.. அப்புறம் இப்ப ரொம்ப பேஷனா வந்திருக்கே.. வறுத்த சோறு.. இவைகள சாப்பிறது வளர்ற பெண்களுக்கு மட்டுமில்ல எல்லாருக்கும் அது உடம்புக்கு கேடுதான்...

அதோட நேரந்தவறிய சாப்பாடு.. சரியான தூக்கம் இல்லாம இருக்கிறது, மன உளைச்சல்.. இப்பிடி பழக்க வழக்க மாறுபாட்டாலயும் இப்படிப்பட்ட தொல்லை வரும்..

சத்தான உணவு.. தேவையான ஓய்வு ரெண்டும் வயசுப் பொண்ணுகளுக்கு அவசியம்.. இத யாரும் புரிஞ்சிக்கிறதில்ல.. முதல்ல இந்த மாதிரி உள்ள பிரச்சனைகள சரிபண்ணிக்கணும்..

அதோட,
மணத்தக்காளிக் கீரை - 1 கைப்பிடி
கொத்தமல்லி விதை - 1 ஸ்பூன்
சீரகம் - 1ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 4 பல்
சின்ன வெங்காயம் - 3
வெற்றிலை - 2
மிளகு - அரை ஸ்பூன்

இவைகள எடுத்து தண்ணி விட்டு சூப் மாதிரி செஞ்சு தேவையான அளவு உப்பு சேத்து காலையிலயும மாலையிலயும் சாப்பாட்டுக்கு முன்போ பின்போ சாப்பிட்டுக்கிட்டு வா..

மாத விலக்கு நேரத்துல 10 நாளுன்னு 3 மாசத்துக்கு தொடர்ந்து இத சாப்பிட்டுக்கிட்டு வந்தா மாதவிலக்கு பிரச்சனை காணாம போயிடும்..

இந்த சூப்ப சாதாரண நாட்கள்ள கூட மற்ற பெண்களும் சாப்பிடலாம். இது உடம்புக்கு நல்ல ஆரோக்கியத்த தரும்..

பாட்டியின் மருந்தை கவனமாகக் கேட்டுக் கொண்ட பூங்கோதை பாட்டியிடம் சிறிது நேரம் பேசிவிட்டு விடைபெற்றாள்

No comments:

Post a Comment