சாப்பாட்டில் இருக்கும் சகலமும்!
'முதுமையின் தொடக்கத்தில் அடி
எடுத்துவைக்கும் அந்தப் பருவம் எல்லோருக்கும் நல்லபடி அமைய வேண்டும். வயது
ஏற ஏற உடலில் பேசல் மெட்டாபாலிக் ரேட், செரிமான உறுப்புகளின் செயல்பாடுகள்
குறைய ஆரம்பிக்கும். 40 வயதில் வளைத்துக் கட்டிச் சாப்பிட்ட உணவுகள்கூட,
வயிற்றுக்குச் சேராமல், ரத்த சோகை, உடல் பருமன், செரிமானக் கோளாறு,
வயிற்றுப் புண், சர்க்கரை நோய், வாயுத் தொல்லை, மலச்சிக்கல் என உபாதைகள்
கதவைத் தட்டும். ''நோயை அண்டவிடாமல் செய்ய முதலில் நாம் செய்ய வேண்டியது...
நம் நாக்குக்குப் பூட்டு போடுவது. மருந்தின் மூலம் 36 சதவிகித நோய்களைக்
கட்டுக்குள்வைக்க முடியும்'' என்கிறார் சீஃப் டயட் கவுன்சிலர்
கிருஷ்ணமூர்த்தி. 40 வயதினருக்கான உணவை அவரே பட்டியலிடுகிறார்.
எப்படிச் சாப்பிட வேண்டும்?
என்னதான் மிகவும் பிடித்தமான உணவாக இருந்தாலும்,
அளவோடுதான் சாப்பிட வேண்டும். வயிற்றைப் பொறுத்தவரை உணவு பாதி, தண்ணீர்
கால் பங்கு, கால் பங்கு காலியாக இருக்க வேண்டும். அசைவப் பிரியர்கள்
வாரத்தில் ஒரு நாள் மட்டும் அசைவ உணவுகளைச் சாப்பிடலாம்.
உடன்,
செரிமானத்தை ஊக்குவிக்கும் பொருட்களைச் சேர்த்து சமைத்துச் சாப்பிடுவது
நல்லது. மூன்று வேளை உணவை ஐந்து வேளையாகப் பிரித்து உண்ண வேண்டும். வயிறு
முட்ட சாப்பிடவே கூடாது. இரவில் சிற்றுண்டிதான் நல்லது. எளிதில் செரிமானம்
ஆகக்கூடிய உணவுகளைச் சாப்பிடலாம். சாதத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது.
இரவு படுக்கைக்குப் போவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பே சாப்பிட்டுவிட
வேண்டும்.

நோய்களைத் தடுக்க...
மூன்று
வேளையும் குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள
வேண்டும். காலை மற்றும் இரவில் சாப்பிடாமல் இருக்கவே கூடாது.
தரமான உணவு, அளவான உணவு, போதிய உடற்பயிற்சி, போதும் என்கிற மனம் இந்த நான்கும் இருந்தால் பெரும்பாலான நோய்கள் நம்மை அண்டாது.
No comments:
Post a Comment