Pages

Sunday, February 23, 2014

வெந்தயக்கீரை

பெண்களின் கருப்பை சம்பந்தமானப் பிணிகளை விரட்டும் ஒப்பற்றக் கீரை.வெந்தயத்தை முளைக்க வைத்து அல்லது இரண்டு இஞ்ச் அளவுக் கீரைகளைச் சாறாகப் பயன்படுத்தும் சமயம் பல கொடிய பிணிகளை விரைந்து நீக்குகிறது. கசப்பானது. குளிர்ச்சியானது. குடல் புண்ணால் நெடுங்காலம் அவதியுறுபவர்கள் கூட ஜெலுசிலுக்குப்பதில் வெந்தயக்கீரைச் சாறால் அருமையான நலம் பெறலாம். எவ்வளவு கொடிய வயிற்றுவலியும் குறையும்.
வெந்தயக்கீரையில் உள்ள சத்துக்கள்:
  1. நீர்=82%
  2. மாவுப்பொருள்=9%
  3. புரதம்=5%
  4. கொழுப்பு=0.9%
  5. தாது உப்புக்கள்=1.6%
  6. கால்சியம்=0.47%
  7. பாஸ்பரஸ்=0.05%
  8. இரும்புத் தாது=16.9 யூனிட்
  9. வைட்டமின் A=3900 யூனிட்
  10. வைட்டமின் B=70 யூனிட்
  11. வைட்டமின் C=52 யூனிட்
  12. பொட்டாசியம்=31 யூனிட்
  13. சோடியம்=76 யூனிட்
இவை அனைத்தும் 100 கிராம் வெந்தயக்கீரைச்சாறில்  உள்ள சத்துகள்.
மருத்துவக் குணங்கள்:
  • ஆசனவாய் பிளவு, மூலநோய், அதிக அமிலத்தன்மை, ஒபேசிட்டி, உடல் பருமன், முகப்பரு தொல்லை, பொடுகு போன்ற தொல்லைகளுக்கு தீர்வு தரும்.
  • பெண்களின் தீராவியாதிகளான மாதவிடாய் தொல்லைகள், சூதக வியாதிகள், முறையற்ற மாதவிடாய், வெள்ளைப்படுதல், பெண் உறுப்பு அரிப்பு, காம்பு நோய்கள், கர்ப்பப்பை கோளாறுகள் அனைத்துக்கும் இயல்பான தீர்வு தரும் வெந்தயம்.
  • வயிற்று கடுப்பு, உயர் இரத்த அழுத்தம்,சர்க்கரை வியாதி, கொலஸ்ரால், மூலச்சூடு, மலக்கட்டு, சீதபேதி, குடல் புண் போன்றவற்றை தீர்த்திடும்.
  • குடலில் கிருமிகள் தொல்லை இருந்தால் உடனடி நிவாரணம் தருகிறது.
  • வெந்த உணவால், சமைத்த காரம் மிகுந்த உணவால் நைந்து போன குடலை வெந்தயக்கீரைச் சாறு பலப்படுத்துகிறது.

No comments:

Post a Comment