Pages

Friday, November 1, 2013

பருமனா நீரிழிவு நிச்சயம்

 Birth until the age of the child and adult size vittiyacaminri everyone can see. It is enough to take everything very serious problem for   many people know that.
பிறந்த குழந்தை முதல் முதியோர் வரை வயது வித்தியாசமின்றி எல்லோரிடமும் பருமனைப் பார்க்க முடிகிறது. உயிரையே பறிக்கிற அளவுக்கு அது  படுபயங்கர பிரச்னை என்பது பலருக்கும் தெரிவதில்லை.

‘‘பருமனானது நீரிழிவு, இதய நோய், மலட்டுத்தன்மை என எல்லா நோய்களையும் வலிய இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தும்’’ என்கிறார் மகப்பேறு  மருத்துவரான மகாலட்சுமி. பருமனுக்கும் நீரிழிவுக்குமான நெருங்கிய தொடர்பையும் அதைக்கட்டுப்படுத்த வேண்டிய அவசரத்தையும் பற்றிப் பேசுகிறார்  அவர்.

‘‘பி.எம்.ஐ (பாடி மாஸ் இன்டக்ஸ்)னு சொல்ற கணக்கை ஒவ்வொருத்தரும் சுயமா செய்து பார்க்கலாம். BMI = weight (kg) / [height (m)]2  இது  24க்குக் கீழ் இருந்தால் நார்மல். 24 - 28... அதிக எடை. 28 - 32 ஆரம்பக்கட்ட பருமன். 32 - 35 - நடுத்தர பருமன். 35 - 38... தீவிர பருமன். 38க்கும்  மேல்... ஆபத்தான பருமன்.

24 வரை மட்டுமே இருக்க வேண்டிய பி.எம்.ஐ. அதிகமானால், உடலில் கொழுப்புச்சத்து கூடும். அதன் விளைவாக கணையத்தில் சுரக்கும் இன்சுலின்  வேலை செய்கிற தன்மை பாதிக்கப்படும். மெல்ல மெல்ல நீரிழிவை நோக்கி நம்மை இட்டுச் செல்லும். குண்டாக இருக்கிற எல்லோருக்கும் நீரிழிவு  இருக்கிறதா எனக் கேட்கலாம். ஆனால் காலப்போக்கில் அவர்களுக்கு கட்டாயம் நீரிழிவு தாக்கும்.

ஏற்கனவே நீரிழிவு பாதிக்கப்பட்டு, அதற்காக மருத்துவம் எடுத்துக் கொள்கிறவர்களுக்கும், சர்க்கரையின் அளவு மட்டும் கட்டுக்குள் வராமலே இருக்கும்.  காரணம், பருமன்தான். அதிகப்படி எடையை சில கிலோ குறைத்தாலே, சர்க்கரையின் அளவு தானாக கட்டுக்குள் வருவதை உணர்வார்கள்.
பருமனை அலட்சியம் செய்கிறவர்களுக்கு இன்சுலின் சுரப்புக்கு எதிரான சில சுரப்பிகள் வேலை செய்யத் தொடங்கும்.

இன்சுலின் என்பது சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது என்பதை மீறி அது ஒரு பாதுகாப்புக் கவசம் போன்றது. பருமன் குறைக்கப்படாத  பட்சத்தில் இன்சுலின் தன் வேலையை சரியாகச் செய்யாது. அதன் விளைவாக பரம்பரைத் தன்மை இல்லாதவர்களுக்கும் நீரிழிவு வரும்.  அடுத்தகட்டமாக ரத்தக்கொதிப்பும் கொலஸ்ட்ராலும் அதிகமாகும். மலட்டுத்தன்மை ஏற்படும்.

நீரிழிவுக்கான சோதனையை மேற்கொண்டு பாருங்கள். உணவுக்கு முன்பான சோதனையில் சர்க்கரை அளவு 100க்கும் கீழ் இருந்தால் மட்டுமே அது  நார்மல். 101 முதல் 125 இருந்தால், அது நீரிழிவுக்கான முந்தைய கட்டம். 126 என்றால் நிச்சய நீரிழிவு. சாப்பாட்டுக்கு 2 மணி நேரத்துக்குப் பிறகான  சோதனையில், 140க்கும் கீழ் என்றால் நார்மல்.

141 - 200 இருந்தால் நீரிழிவுக்கு முந்தைய கட்டம்.  200க்கும் மேல் என்றால் நிச்சய நீரிழிவு.நீரிழிவிலிருந்து விலகி வாழ விரும்புவோர், முதல்  கட்டமாக உடல்பருமனைக் கண்காணித்து, கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வாருங்கள்...’’

No comments:

Post a Comment