Pages

Friday, November 1, 2013

மிளகு குழம்பு-நீரிழிவு நோயாளிகளுக்கான டயட் உணவு

 Pour a little oil in a pan and set aside to dry. Lentil, katalaipparuppu, chopped coriander cumin, chilli, pepper, cumin, and fry.

நீரிழிவு நோயாளிகளுக்கான டயட் உணவு


என்னென்ன தேவை?

கடரைப்பருப்பு- 1டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு- 1டீஸ்பூன்
துவரம் பருப்பு-1டீஸ்பூன்
தனியா- 1டேபிள் ஸ்பூன்
காய்ந்தமிளகாய்-10
மிளகு-10
சீரகம்-1/2 டீஸ்பூன்
புளி எலுமிச்சைபழம் அளவு
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
கறிவேப்பிலை- சிறிதளவு

எப்படி செய்வது?
ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய வைக்கவும். துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு தனியா,மிளகாய், மிளகு, சீரகம்,  சேர்த்து வறுக்கவும். இதை பொடி செய்யவும். ஒரு வாணலியில் சிறிதயவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். கரைத்து  வைத்த புளிக்கரைசலை ஊற்றி தூள் செய்து பொடியையும் போட்டு தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும். இக்கலவை நன்கு சேர்த்து திக்கானதும் இறக்கி  வைக்கவும்.

குறிப்பு: கை படாமல் உலர்ந்த ஸ்பூன் கொண்டு இவற்றை உபயோகித்து வந்தால் இரு வாரங்கள் வரை கெடாமல் வைத்திருக்கலாம்.

No comments:

Post a Comment